30.11.07
30/11/07 - பங்கு சந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை காலை நான் எதிர்பார்த்தது போல் 130 புள்ளிகள் கூடுதலாக பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய பங்கு சந்தை முழுவதும் மேல் நோக்கியே இருந்தது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவு பெற்றது. இன்று 500 புள்ளிகள் வரை செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதிகமானோர் லாபத்தை உறுதி செய்ததால், அதிகமாக முன்னேற வில்லை. இருந்தாலும், சந்தை இன்று மேல் முகமாக சென்றதில் அனேகமானோருக்கு மகிழ்ச்சியே.. இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 19,363.19 (+359.93 புள்ளிகள் உயர்வு) நிப்டி 5,762.75 (+128.15 புள்ளிகள் உயர்வு) என்ற நிலையில் முடிவு பெற்றன. இன்று காலை பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் என்ன என்று பார்ப்போமா? பரிந்துரைத்த 14 பங்குகளும் மேலே சென்றன. ஆனால், அதில் இரண்டு பங்குகள் மட்டும் சந்தை முடிவில், நேற்றைய விலையை விட கீழே இறங்கின. இதோ அதன் விவரங்கள்: RPL (அதிகபட்சமாக ரூ10 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8 கீழ் இறங்கியது), RNRL (அதிகபட்சமாக ரூ18 ஏறி, பின் ரூ2 இறங்கியது) , Bindal Agro (அதிகபட்சமாக ரூ3.50 ஏறி, பின் ரூ1.50 இறங்கியது), Nagartuna Fertiliser(அதிகபட்சமாக ரூ2.90 ஏறி, பின் ரூ0.75 இறங்கியது), ITC (அதிகபட்சமாக ரூ4.25 ஏறி, பின் ரூ1.65 இறங்கியது), Gail (அதிகபட்சமாக ரூ16 ஏறி, பின் ரூ5 இறங்கியது), Jstainless (அதிகபட்சமாக ரூ10.4 ஏறி, பின் ரூ2.80 இறங்கியது), Jindalsteel (அதிகபட்சமாக ரூ955 ஏறி, பின் ரூ150 இறங்கியது), Essor Oil (அதிகபட்சமாக ரூ44 ஏறி, பின் ரூ9 இறங்கியது), HDIL (அதிகபட்சமாக ரூ36 ஏறி, பின் ரூ6 இறங்கியது), GMR infra (அதிகபட்சமாக ரூ16.65 ஏறி, பின் ரூ4.80 இறங்கியது), DHFL (தவறாக கொடுத்துவிட்டேன்) DCHL (அதிகபட்சமாக ரூ7.40 ஏறி, பின் ரூ6 இறங்கியது), IBReal Esatat (அதிகபட்சமாக ரூ8.60 ஏறி, பின் ரூ12.65 இறங்கியது),KSoil (அதிகபட்சமாக ரூ1.25 ஏறி, பின் ரூ1.75 இறங்கியது) (சிவப்பு நிறத்தில் இருக்கும் பங்குகள் மட்டும் விலை இறங்கியுள்ளது. பச்சை நிறத்தில் இருக்கும் பங்குகள் எல்லாம், ஏறி முடிவடைந்துள்ளது) லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள் Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 11/30/2007 06:49:00 PM