1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 3.12.07
  பங்குசந்தையில் லாபத்தை உறுதிபடுத்துங்கள்
  நீண்ட கால முதலீடுகள் என்பது வேறு. தின வர்த்தகம் என்பது வேறு. அதனால், தின வர்த்தகத்தில், லாபத்தை நீங்கள் அடிக்கடி உறுதி படுத்தி கொள்ள வேண்டியது உங்கள் கையில் உள்ளது.

  பொதுவாக, Equity - யில் முதலீடு செய்யும் பொழுது 1.5 முதல் 2% லாபம் வைத்து வெளியே வர பாருங்கள். அல்லது அந்த பங்கின் விலை ஏற ஏற விற்க்கும் விலையின் Stop loss - ன் விலையை ஏற்றி கொண்டே செல்லுங்கள். அதே போல், நீங்கள் வாங்கிய பங்கு விலை இறங்குமாயின், கீழே stop loss போட்டு வைத்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 5 விழுக்காடு நஷ்டம் வந்தால் வெளியே வந்து விடுங்கள். அது உங்களை அதிக நட்டம் அடைய விடாமல் காக்கும்.

  தின வர்த்தக Future - ல் ஈடுபடுவர்கள் ஒரு விழுக்காடு லாபம் வைத்து வந்து விடுங்கள். அதிக லாபம் பார்க்க ஆசையா? விற்க்கும் விலையின் SL - ஐ ஏற்றி கொண்டே செல்லுங்கள். அதிக எண்ணிக்கையில் இருக்கும் பங்குகளை வாங்கும் பொழுது, லாபத்தை அடிக்கடி உறுதி படுத்தி கொண்டே செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கிய Lot விலை இறங்குமாயின், அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நீங்கள் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

  நான் தினமும் பங்கு சந்தைக்கு நேரடியாக செல்வதால், எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை தரும் தகவல்கள் வரும். அது சில சமயம் இறங்கவும் செய்யவும். ஆனால், அது சில நாட்களுக்குள் கண்டிப்பாக மேலே வரும். அதனால், பங்குசந்தையில், பொறுமை என்பது மிகவும் முக்கியம். அவசரப்பட வேண்டாம். நிச்சயம் லாபம் பார்க்கலாம்.

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  17 Comments:

  நல்ல பரிந்துரையுடன், நல்ல அறிவுரையும் தந்திருக்கிறீர்கள். நன்றி சுதாண்ணா.

  December 3, 2007 at 9:42 AM  

  சுதாகர்,

  நான் நான்கந்து நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை.இன்று வந்து பார்த்தால்,உங்கள் பதிவு இன்ப அதிர்ச்சி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  December 3, 2007 at 11:29 AM  

  Dear Sudakar,

  Congratulations for your new initiative.

  Thanks,
  Ramprasath

  December 3, 2007 at 1:39 PM  

  Today I have seen your suggestion I bought IFCI and GMR INfra and got profitted. Thank you verymuch
  And I would like to have your Phone No.(If you don't mind.)
  Dr.Chandramohan
  Salem.

  December 3, 2007 at 3:42 PM  

  திரு.ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நிறை, குறை இருப்பின் தயவு செய்து சொல்லுங்கள்.

  December 3, 2007 at 4:55 PM  

  Dear Mr.Ramprasath, thanks for your wishes. Please try to give your comments always.

  December 3, 2007 at 4:57 PM  

  Dear Dr.Chandramohan, really happy that, you got some money with my suggestions. I would like you to know that, today some of the shares went down, which I suggested to buy, but, I am sure it will go up with in few days or in a week time. please send me a email & I will give you my mobile number. Thanks

  December 3, 2007 at 4:59 PM  

  மிக்க நன்றி விவேக். அவ்வப்பொழுது, இங்கும் வந்து பாருங்கள். உங்கள் கருத்தை தாருங்கள்

  December 3, 2007 at 5:19 PM  

  நல்ல துறைசார்ந்த பதிவு, தினமும் எதிர்பார்க்கிறேன்.

  December 3, 2007 at 5:32 PM  

  மிக்க நன்றி நண்பர் ஊற்று அவர்களே.
  கண்டிப்பாக தொடர்ந்து என் பரிந்துரைகள் வரும்.

  December 3, 2007 at 5:34 PM  

  பங்குச்சந்தை பற்றிய அறிவு கொஞ்சம் கம்மிதான்.. இருப்பினும் தாங்கள் சொல்லியிருக்கும் அறிவுரைகள் - அவைகள் சொல்லப்பட்ட விதம் - என்னைக் கவர்ந்தது. மொத்தத்தில் பொறுமை - அதிக ஆசைப்படாமை - இவை இரண்டும் தேவை

  நன்றி

  December 3, 2007 at 7:38 PM  

  சீனா (Cheena) அவர்களே,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். பயணடையுங்கள். உங்கள் கருத்துக்களை தாருங்கள்

  December 3, 2007 at 10:27 PM  

  அன்புள்ள சுதாகர்

  நல்ல தகவல்கள்..SL என்றால் என்ன மற்றும் ஸ்டாப் லாஸை எப்படி செயல் படுத்துவது ? நம்மிடம் கையிலிருக்கும் பங்குகளுக்கு ஸ்டாப் லாஸ் முறையை செயல் படுத்த முடியுமா என்று விளக்க முடியுமா?

  நன்றி

  December 3, 2007 at 11:03 PM  

  நண்பர் சங்கர் அவர்களுக்கு நன்றி. Stop loss என்பது, நம் நஷ்டத்தை நாமே தீர்மானிப்பது. இன்று ஒரு பங்கை வாங்குகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்தால், உங்களால் பங்குசந்தையை கவனிக்க இயலாத சூழ்நிலை. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் வாங்கிய பங்கு ஒரு வேளை கீழே சென்றால், உங்களால், எந்த அளவுக்கு நஷ்டத்தை எடுத்து கொள்ள முடியுமோ, அந்த விலைக்கு SL போட்டு விட வேண்டும்.அதற்க்கு இரண்டு விலைகள் தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தரும் இரண்டு விலைக்குள் (விலை இறங்கி வரும் பொழுது) யாராவது வாங்க நினைத்தால், தானாகவே Trigger ஆகிவிடும். உங்கள் பங்கை நீங்கள் விற்று விட்டதாக அர்த்தம். இதே நிலைதான், நீங்கள் வாங்கிய பக்கு மேலே செல்லும் பொழுதும். நீங்கள் ஒரு பங்கு வாங்கிய பிறகு,அந்த பங்கு மேலே செல்கிறது என்று வைத்து கொள்வோம். உங்களுக்கு மனதில் ஒரு ஆசை. இன்னும் மேலே செல்லாதா, லாபம் பார்க்க மாட்டோமா என்று. என்ன செய்வோம். திடு திப்பென்று, சந்தை கீழ வர ஆரம்பித்து, நீங்கள் வாங்கிய விலையை விட கீழே வந்து விட்டால்??? நீங்கள் உண்மையாலுமே வந்த லாபத்தை எடுக்காமல் போய்விடுகிறீர்கள் தானே? அதுதானே உண்மை. அதனால், அந்த பங்கு ஏற, ஏற, SL விலையை ஏற்றி கொண்டே செல்லுங்கள். ஒரு வேளை அந்த பங்கு இறங்கினாலும், நீங்கள் நஷ்டம் அடைய மாட்டீர்கள். இதுவே தான் உங்கள் கையில் உள்ள பங்குகளுக்கும்..
  புரிகிறதா? புரியவில்லை என்றால்,தனி பதிவு போட்டு விளக்குகிறேன்.

  December 3, 2007 at 11:17 PM  

  அன்புள்ள சுதாகர்
  தங்களது விளக்கட்ஹ்துக்கு நன்றிகள்..புரிகிற மாதிரி இருந்தாலும் நான் செயல்படுத்தும் முறையில் ஏதோ கோளாறு இருக்கிறது...ஸ்டாப் லாஸ் போட்டால் உடனே ட்ரிகர் ஆகி விடுகிறது...என்ன தவறு செய்கிறேன் என்று புரியவில்லை .
  நானே ஒரு உதாரணம் தருகிறேன் ..இதற்கு செயல்முறை விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  RPL --100 share--bought at 155 என கொள்வோம்..4 நாட்களாகி எனது கணக்கிலும் வந்து விட்டது...இன்று மார்க்கெட் துவங்கியதும் 165 என கோட் ஆகிறது...எனக்கு உண்மையில் விற்க வேண்டாம்...ஆனால் அதே சமயம் 163 க்கு கீழே போனால் 8 ரூபாய் லாபத்தில் வெளிவந்துவிட ஆசை...மேலே போகும் பட்சத்தில் அப்படியே வைத்திருக்க எண்ணம்...இந்த மாதிரி சமயத்தில் நான் SL price & Trigger price இரண்டையும் எப்படி நிர்ணயித்து பதிவு செய்யவேண்டும் ?

  அன்பு கூர்ந்து பதில் தருவதற்கும் மற்றும் நல்ல உபயோகமுள்ள தகவல்களை பதிவதர்க்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள் பல.

  தொடரட்டும் உங்கள் பணி

  அன்புடன்...ச.சங்கர்

  December 4, 2007 at 8:48 PM  

  சங்கர் அவர்களே, SL போடும் பொழுது,சந்தையில் தற்பொழுது இருக்கும் விலைக்கு மிக அருகில் SL போட கூடாது. அப்படி போட்டீர்கள் என்றால்,கீழே வந்து உங்கள் பங்கை வாங்கி கொண்டு சென்று விடுவான்.எனக்கும் இது போல் நிறைய தடவை நடந்து இருக்கிறது. அதுவும் குறிப்பாக சந்தை மிகவும் மேடு பள்ளமாக (Volatile) இருக்கும் பொழுது, வெகு விரைவாக உங்கள் SL - யை கொத்தி கொண்டு, மீண்டும் மேலே போய்விடுவார்கள்.அதனால், தற்பொழுது இருக்கும் விலையில் இருந்து குறைந்தது 3% க்கு மேலே SL கீழே போட்டால் நல்லது. அப்படி செய்ய இஷ்டம் இல்லையா,சந்தை கீழே போகும் போல் தெரிகிறதா? உங்களிடம் இருக்கும் பங்கு, லாபத்தில் தானே இருக்கிறது. விற்று விடுங்கள். 4 அல்லது 5 ரூபாய் இறங்கியவுடன் அதையே மீண்டும் வாங்கி விடுங்கள். அப்படியென்றால், உங்களுக்கு ரூ500 லாபம். ஆனால், அந்த 100 பங்கும் உங்களிடமே இருக்கும். ஒரு வேளை நீங்கள் விற்ற பிறகு, அந்த பங்கு மேலே சென்று விட்டால், நீங்கள் அதை நஷ்டத்தில் விற்கவில்லை என்று நினைத்து சந்தோசம் அடையுங்கள்.

  December 4, 2007 at 9:00 PM  

  அன்புள்ள சுதாகர்
  விளக்கத்திற்கு மிக்க நன்றி..முயன்று பார்த்துவிட்டு சந்தேகம் இருப்பின் பின்னர் உங்களிடம் கேட்கிறேன்

  December 10, 2007 at 6:47 PM  

  Post a Comment

  << Home