27.2.08
27/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய உலக பங்குசந்தைகள் உயர்ந்து சென்றாலும், நமது இந்திய பங்குசந்தை நேற்று லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து முற்பகல் மிகவும் கவனமாக அதிக மாற்றம் இல்லாமல் வர்த்தகம் செய்து கொண்டு இருந்தது. லாலு வின் பட்ஜெட்டில் சரக்கு போக்குவரத்துக்கான செலவை குறைத்தது பங்கு சந்தைக்கு ஊக்கம் அளித்தது. logistics, Metals, infra போன்ற பங்குகள் ஊக்கம் கண்டன. புதியதாக பங்குகளை வாங்கியவர்கள் அதிகம் பேர்.நாளை மறுதினம் ப.சிதம்பரம் அவர்களால் தாக்கல் செய்யும் பொது வரவு செலவு கணக்கை ஆவலுடன் எதிர்பார்த்து தற்பொழுதைய சந்தை உள்ளது. அதுவும் லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் போல, மிக நல்ல பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது (அது அரசியல் நோக்கமாக இருக்கலாம், ஆனால், அதைப்பற்றி நாம் இங்கு பேச கூடாது). அதில், விவசாயம், மருத்துவம், பொதுப்பணித்துரை போன்ற துறைகள் நன்கு ஆதாயம் பெறும் என எதிர்பார்க்க படுகிறது. தற்சமயம் உலக பங்குசந்தைகள் அனைத்தும் மேல் நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றன. அதுவும் ஒரு ஊக்கம் ஊட்டும் ஒரு செய்திதான். இருந்தாலும், நாளை F&O closing நாள். அதற்க்கு அடுத்த நாள் மத்திய பட்ஜெட். அதனால், நம் பங்குசந்தையில் மிக பெரிய மாற்றம் வராது என்றே தோன்றுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை மதியம் வரை பங்குசந்தை மேல் நோக்கிய அதே சமயம் flat ஆக இருக்கும் என்பது என் கணிப்பு. பங்குசந்தையில் ஈடுபடுபவர்கள் உடனக்கு உடன் லாபம் பார்த்து விட்டு வெளியே வந்து விடுவது நல்லது. இன்று JP Associate (tgt 290), GMR infra (tgt 295), Nagartuna Fert (tgt 59), RPL 170+, RNRL 145+, Bindalagro (tgt 50+) போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 2/27/2008 07:36:00 AM
Thank you
Dr chnadramohan
any +ve trend for spice telecom?