13.2.08
13/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை மேல் நோக்கி என்று செல்லும் எதிர்பார்த்தேன். ஆனால், தேவையில்லாத புரளிகளாலும், பயத்தாலும் பங்கு சந்தை மேல் நோக்கி செல்ல இயலவில்லை. நேற்று வங்கித்துறை சார்ந்த பங்குகளின் index மேல் நோக்கி இருந்தது கொஞ்சம் பங்கு சந்தைக்கு ஆறுதல் அளித்தது. நேற்றைய ஐரோப்ப பங்குசந்தைகள் கிட்டத்தட்ட 3 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்து முடிவுற்றது.அமெரிக்க சந்தைகள் நேற்று ஒரு கட்டத்தில் 2 விழுக்காடு வரை மேலே சென்றன. ஆனால், சந்தை முடிவில் டோஜென்ஸ் 1 விழுக்காடு உயர்ந்தும், நாஸ்டாக் ஏற்றம் இறக்கம் இல்லாமல் நடுநிலையாகவும் முடிவுற்றது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகள் நன்றாக மேல் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.நிக்கெய் 180 புள்ளிகள் உயர்ந்தும், ஹாங்செங் 488 புள்ளிகள் உயர்ந்தும், சிங்கப்பூர் பங்கு சந்தை 60 புள்ளிகள் உயர்ந்தும் காணப்படுகின்றன. நேற்றைய உலக சந்தைகளின் முடிவுகளும், இன்றைய ஆசிய பங்குசந்தைகளின் முடிவுகளும் நம்பிக்கை தரும் வகையாகவே இருக்கின்றன. அதன் விளைவாக, இன்றைய நமது பங்கு சந்தை 250 ~ 300 புள்ளிகளுக்கும் மேலாகவே தனது வர்த்தகத்தை ஆரம்பிக்கும் என கருதுகிறேன். அதன் பிறகு அது உலக சந்தைகளையே நாடி இருக்கும். தற்பொழுதைய சூழ்நிலையில், அதிகமானோர் புரளியை கிளப்பி விடுவதும், அதனால் பயந்து மக்கள் தங்கள் பங்குகளை விற்பதும் வாடிக்கை ஆகி விட்டது. ஒரு சாரார் சொல்கிறார்கள் சென்செக்ஸ் 14000 - த்தை தொட வாய்ப்பு உள்ளதாக. எது உண்மையோ தெரியாது. ஆனால், நிப்டி சரியும் பட்சத்தில் 4400 என்பது strong supporting level ஆக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இன்றைய நிப்டி 4900 ~ 5150 க்குள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்றைய நிப்டி 5150 என்ற நிலையை தொட்டு, அங்கேயே முடிவுற்றால், நாளைய பங்குசந்தையும் ஓரளவுக்கு நம்பிக்கை தருவதாகவே இருக்கும். இந்த வாரம் முழுவதும் பங்குசந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பதே மேல். நீங்கள் வாங்கிய பங்குகள் லாபம் தரும் விலையில் இருந்தால், தயவு செய்து விற்று விடுங்கள். எந்த காரணம் கொண்டும் யோசிக்க வேண்டாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 2/13/2008 08:19:00 AM
<==
நீங்கள் வாங்கிய பங்குகள் லாபம் தரும் விலையில் இருந்தால், தயவு செய்து விற்று விடுங்கள். எந்த காரணம் கொண்டும் யோசிக்க வேண்டாம்.
==>
லாபம் தராட்னாலும் வித்தாச்சு =)
யய்யாடி...கொஞ்சம் பணம் இருந்ததேன்னு போட்டேன். போட்ட நாள்ல இருந்து இறங்கு முகம் தான். சரி! இப்போ போட்டுட்டா பரவாயில்லையா? ஏன்னா, எனக்கு ரொம்ப நட்டம் ஆகும்...