28.1.08
28/01/2008 பங்கு சந்தை முடிவில்
இன்றைய பங்கு சந்தை நான் எதிர்பார்த்தது போல் இல்லாமல், கீழ் நோக்கி முடிவுற்றாலும், அதிகமாக அனைவரையும் சோதிக்க வில்லை என்று சொல்லலாம். ஆனால், காலையில் கிட்டத்தட்ட சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்ட பொழுது, எல்லோரும் மிகவும் வேதனைக்கு உள்ளானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 12 மணிக்கு மேல், மெதுவாக பங்கு சந்தை மேலே வந்தது. காரணம் வங்கி பங்குகள், ஆட்டோ மொபைல் பங்குகள் எல்லாம் மேலே வர ஆரம்பித்தது தான். Midcap - ல் உள்ள வங்கி துறை சார்ந்த பங்குகள் சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறி மேலே செல்ல ஆரம்பித்தன. ஆட்டோ மொபைல் பங்குகளும் மேலே வர முயன்றதின் விளைவே, இன்றைய பங்கு சந்தை மிக பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்டது எனலாம். பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 208.88 புள்ளிகள் கீழ் இறங்கி முடிவுற்றது. நிப்டி 109.25 புள்ளிகள் கீழ் இறங்கி முடிவுற்றது. இன்று Bajaj Auto, Gail, MarutiUdyog,REL, HDFC போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. Jr.Nifty யில் Asian paints, Sindicatbank, canarabank, Vijyabank போன்றவை நல்ல ஏற்றம் கண்டன. நாளை பங்கு சந்தை நன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்கிறேன். வங்கி துறை சார்ந்த பங்குகள் நன்றாக இருக்கலாம். நாளை IFCI, POWERGRID, STERLITE + Bank Stocks எல்லாம் நன்றாக விலை போக வாய்ப்பு உள்ளது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/28/2008 08:50:00 PM
சுதாகர்,
நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் குறிப்பை கண்டு மகிழ்ச்சி, தொடர்ந்து எழுதுங்கள், பணம் பூராவும் முன்பு வாங்கிய பங்குகளில் மாட்டிக்கொண்டுவிட்டது, சந்தை மேலே சென்றால்தான், நஷ்டம் இல்லாமல் வெளியே வரமுடியும், காத்துருக்கிறேன் சந்தை மேலே வருமென்ற நம்பிக்கையில்,... நன்றி....
கணேஷ் அவர்களே, வணக்கம். ஆமாம், ஒரு துக்க சூழ்நிலையால் என்னால் பதிவுகள் இட இயலவில்லை.
எல்லோருடைய பணமும் லாக் ஆகிவிட்டது.என்ன செய்வது? இது அனைவருக்கும் ஒரு பாடம். உடனுக்கு உடன் லாபம் பார்க்கனும். SL கண்டிப்பாக போட வேண்டும்.
பிப்ரவரி 3 வது வாரத்துக்குள் சந்தை ஓரளவுக்கு மீண்டு விடும் என்று சொல்கிறார்கள். அதே சமயம் அதற்க்குள் 4800 புள்ளிகள் வரை நிப்டி தொட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வருகிறது. யாருக்கு தெரியும்? பொறுத்து இருந்து பார்ப்போம். உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி