21.1.08
21/01/08 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே என்றும் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது, அனைவரையும் கதிகலங்க வைத்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 16951 புள்ளிகளை தொட்டது. நிப்டி 700 புள்ளிகளுக்கும் மேல் இறங்கியது. என்னுடைய இல்லத்தில் இணைய தொடர்பில் பிரச்சனைகள் இருப்பதால் என்னால் இன்று காலை பரிந்துரையை பதிய இயலவில்லை. நாளையும் என்னால் பதிய இயலாது என நினைக்கிறேன். இன்று முதலீடு செய்வதற்க்கு சரியான நேரம். ஆனால், நிறைய நண்பர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பார்கள் என்பது தான் உண்மை. (நான் உட்பட). மேற்கொண்டு முதலீடு செய்ய இயலாமல் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பணம் கைவசம் இருப்பவர்கள், நிறைய பங்குகளை வாங்க சரியான தருணம். அனைவரும் கொஞ்சம் பொறுமையுடன் தாக்கு பிடிக்க பாருங்கள். அவசரப்பட்டு நிறைய நண்பர்கள் தங்கள் பங்குளை நஷ்டத்தில் கொடுத்து இருப்பார்கள். சில காலங்களுக்கு முன் பங்குசந்தையில் நுழைந்தவர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கும். காரணம் எதுவும் இல்லாமல், பங்குசந்தை விழுவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உலக சந்தைகள் எல்லாம், 2 முதல் 3 விழுக்காடு வரைதான் இறங்கியுள்ளது. ஆனால், நம் பங்குசந்தையோ 10 விழுக்காட்டுக்கும் மேல் கீழ் இறங்கியது. சில பங்குகள் 30 விழுக்காட்டுக்கும் மேல் இறங்கியது. ஒரு கட்டத்தில் எல்லா பங்குகளும் கீழ் முகமாக இருந்தது. சில பங்குகள் lower freeze ஆகி விட்டது. இந்திய பங்குசந்தை வரலாற்றில் இன்று தான் மிக அதிகமான வீழ்ச்சியை சென்செக்ஸ் மற்றும் நிப்டி சந்தித்தது. கிட்டத்தட்ட அனைவரது தூக்கத்தையும் கெடுத்து விட்டது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 1350 - புள்ளிகள் கீழ் இறங்கியுள்ளது. நிப்டி 500 புள்ளிகள் இறங்கியுள்ளது. வரும் நாட்கள் நன்றாக இருக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/21/2008 03:20:00 PM
It is right time to buy stocks, but our packet is empty!!!!
வணக்கம் நண்பர் சுதாகர்! நம்பிக்கையுடன் உள்ளோம். அனைவரும் பெரும் கவலையுடன் இருப்பதையும் அறிகிறோம். இந்நிலையிலும் வாங்க சிறந்த பங்குகள் எவை?
Hi Sudhakar,
How will be todays market? HangSeng down by 1200+ points. Will our market go down further?
Thanks
Raviii