13.1.08
மேலே, கீழே ஏறி இறங்கும் பங்குச் சந்தை -சேதுராமன் சாத்தப்பன்
கடந்த வியாழனன்று மார்க்கெட் ஒரு மந்தமாகவே இருந்தது. காலை வரை நன்றாக இருந்த மார்க்கெட் மதியத் திற்கு மேல் சரியத் தொடங்கியது. 600 புள்ளிகள் வரை மேலும், கீழும் சென்று வந்தது. 21,206ஐ தொட்டது செவ்வாயன்று தான். அதே சமயம், முடிவில் 20,582ஐ அடைந்ததும் அன்று தான். வியாழனன்று ஏன் சந்தை இவ்வாறு குறைந்தது? ஒன்று, முதலீட்டாளர்கள் லாப நோக் கில் விற்றது; இரண்டாவது, பெரிய புதிய வெளியீடுகள் வருவதால், அதில் போட்டு லாபம் பார்ப்பதற்கு பணம் வேண்டுமே; அதற்காக விற்றார்கள். இது தற்காலிகமானது தான்.நீண்டகால முதலீட்டாளர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை . வியாழனன்று டாடாவின் கனவுக் கார், "நானோ" (லட்சத்தில் ஒரு கார் - லட்ச ரூபாய் கார்) டில்லியில் கண் காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட் டது. ஆனால், டாடா மோட்டார் பங்குகள் விலை குறைந்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த வெள்ளியை இனிய வெள்ளி என்று தான் கூற வேண்டும். அன்றைய தினம், "இன்போசிஸ்" கம்பெனியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. "இன் போசிஸ்" கொடுத்த "கைடன்ஸ்"யை விட அதிகம் லாபம் காட்டியுள்ளார்கள். ஆனாலும், அந்தக் கம்பெனியின் பங்குகள் பெரிதாக விலை கூடவில்லை. காலை முடிவுகள் வந்தவுடன் சந்தை மேலேயே இருந்தது. பின்னர், தடதடவென கீழே வந்து எல்லாரையும் மறுபடி பயமுறுத்தியது. பின்னர், "ரிலைன்ஸ்," "ஐ.சி.ஐ.சி.ஐ" பாங்க், "ஆக்ஸிஸ்" பாங்க் ஆகிய கம்பெனிகளின் விலைகள் கூடியதால் சந்தைநிலைக்கு வந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தனது துணை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியிலப்போகிறது என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆதலால், இந்த வாரம் அந் தப் பங்கின் விலை கூடிக் கொண்டே சென்றது. வங்கிப் பங்குகள் 4 சதவீதம் மேலே சென்றது. ஆதலால், பங்குச் சந்தை பறந்தது. முடிவாக பங்குச் சந்தை 245 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 20,827 புள்ளிகளுடனும். தேசிய பங்குச் சந்தை 6,200 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 2008ல் 21,000ஐ கடந்து விட்டோம். ஆனால் 24,000 வரை தொட என்ன செய்ய வேண்டும்? என்னென்ன நடக்க வேண்டும்?பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கூடவில்லை. ஆதலால், பணவீக்கமும் கட்டுக்குள் இருந்தது. கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். வங்கி வட்டி வீதங்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும். சிறிது கூடிக் கொண்டே வந்து பயமுறுத்துகிறது. இது தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து கொண்டு வந்த வங்கிகளின் வராக்கடன் தற்போது சிறிது கூடிக் கொண்டே வருகிறது. நிலையான மத்திய அரசு வேண்டும். இடதுசாரிகள் அடிக்கடி விடும் அறிக்கைகள், வேறு பங்குச் சந்தையை ஒரு கலக்கு கலக்குகிறது. புதிய வெளியீடுகள் ரிலையன்ஸ் பவர் வெளியீட்டில் எல்லாருக்கும் பங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதால், கடன் வாங்கி முதலீடு செய்யலாமா? என்று பல முதலீட்டாளர்கள் யோசித்து வருகிறார்கள். அதுபோல, கடன்கள் கொடுக்கவும் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. பியூச்சர் கேபிடல் வெளியீடு 11ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே மூன்று மடங்கு வரை செலுத்தப் பட்டுள்ளது. அடுத்த வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதாவது 3.5 சதவீதத்திலேயே இருக்கிறது. நல்ல பல காலாண்டு முடிவுகள் வரவுள்ளது. அமெரிக்காவில் இன்னும் நிலை மை சீரடையவில்லை. ஆதலால், மறுபடி பெட் ரேட் கட் செய்யலாம் என்ற கருத்துக்கள் இப்போதே உலவுகின்றன. இந்தியாவிலும் 50 புள்ளிகள் வரை ரேட் கட் இருக்கலாம் என்று கடந்த வாரம் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இரண்டையும் வைத்து பார்க்கும் போது, மார்க்கெட் மேலே செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ரேட் கட் செய்தால் அங்கு அதிக வட்டி கிடைக்காது. அப்படியெனில், அவர்கள் வேறு இடங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அப்படி விரும்பும் போது, இந்தியாவும் அவர்களுடைய விருப்பமான இடங் களில் ஒன்றாக இருக்கிறது. பணம் அதிகமாக உள்ளே வர வர பங்குச் சந்தையும் உயரும். நீர் உயர நெல் உயரும். அது போலத்தான் பங்குச் சந்தையும். நன்றி: தினமலர் (பின் குறிப்பு: நான் முன்பு என் பதிவில் சொன்னது போல், ரிலையன்ஸ் பவர் வெளியிடும் பங்கு காரணமாகவே பங்குசந்தையில் சிறிது சுணக்கம் காணப்படுகிறது. இது தற்காலிகமானது தான். அதனால், விலை இறங்கும் பங்குகளை வாங்கி உங்களிடம் உள்ள பங்குகளின் சராசரி விலையை குறைத்து கொள்ளுங்கள். இந்த மாத முடிவுக்குள் அவை பழைய நிலையை அடைந்து விடும் என்று நம்பலாம்.) Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/13/2008 09:03:00 AM
Sir,
Thanks a lot for your recommendations. I have started with stock markets very recently and I'm planning to invest for the long term (3 to 5 years). I recently bought ACC. What is your thought about this scrip ? Can I continue to buy this stock since it is going down ? Thanks for your timely reply.
Regards,
Saravanan
சரவணன் அவர்களே, ACC நல்ல நிறுவனம் தான். கவலைப்பட தேவையில்லை. இருந்தாலும், ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வதை காட்டிலும், பல துறையை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள். ACC இப்பொழுது உங்களிடம் உள்ளது. அதனால், அந்த துறை இல்லாத Metal, Oil, Power, Realty போன்ற வற்றில் நல்ல நிறுவனமாக பார்த்து அவைகளிலும் சில பங்குகளை வாங்கி போடுங்கள்.
Sudhakar,
Last week complete my portfolio MIDCAP & SMALLCAP are bloodbathed, all are +ve in couple of weeks, suddenly turn to -ve mood, I hope coming weeks will recover and get out some of scripts, Thanks....
Regards,
Ganesh
Dear sir,
I had alrady invested in HDFE Equity,Reliance Vision, is this fund are good for long term?
I am also planning to buy HDFC Prudence, SBI magnum Global and BEex Nifty for long term. Can I go ahead with that?? Thanks for your help.
Anand.
ஆனந்த் அவர்களே, கீழ்கண்ட தளத்திற்க்கு சென்று MutualFund பற்றிய தகவல்களை பெற்று கொள்ளுங்களேன். உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும். http://www.moneycontrol.com/mutualfundindia/