2.1.08
02/01/2008 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை காலையில் மிகவும் ஏற்ற இறக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிவரை பங்கு சந்தை கீழ் நோக்கியே இருந்தது என சொல்லலாம். எதிர் பார்த்தது படியே, பிற்பகலில் பங்குசந்தையில் சூடு பிடித்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை அளவை தொட்டன. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 20465.30 (164.59 புள்ளிகள் அதிகம்), நிப்டி 6179.40 (35.05 புள்ளிகள் அதிகம்) என்ற நிலையில் முடிவு பெற்றன. இன்று Tatasteel, Sail, ISPATIND, Rel, ONGC, Syndicate Bank போன்றவை வாங்கலாம் என சொல்லியிருந்தேன். பிற்பகல் வரை metal பங்குகள் அவ்வளவு சுகமானதாக இல்லை. மதியம் 2 மணிக்கு மேல் Steel Prices hike என NDTV- யிலும் தகவல் வந்தது. அதுவரை கீழ்நோக்கி இருந்த Metal பங்குகள் எல்லாம் மேல் நோக்கி வர ஆரம்பித்தன. இன்று நான் சொன்ன பங்குகளை வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டாம். நாளை மேல் நோக்கி பறக்கும் என எதிர்பார்க்கிறேன். Hindalco - மிகவும் அருமையாக சென்றது. Syndicate Bank காலையில் இருந்தே நன்றாக இருந்தது என சொல்லுவேன். பொதுவாகவே இன்று வங்கி பங்குகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. Vijya Bank பங்குகளும் நன்றாக இருந்தன. நீண்ட கால பரிந்துரையாக கொடுத்த ONGC, REL போன்ற பங்குகள் எல்லாம் நன்றாக விலை ஏறின. ISPATIND -இன்று எதிர்பாராத விதமாக 5% வரை விலை இறங்கியது. நம்ப முடியவில்லை. ஆனால், பிற்பகலில் 2% வரை மேல் ஏறியது. கவலை வேண்டாம் நண்பர்களே. ISPATIND - க்கு நல்ல தகவல் உள்ளது. பயந்து விற்று விட வேண்டாம். யாருக்கு தெரியும், நாளையே 10 விழுக்காடு கூட ஏறலாம். சில நண்பர்கள் பெயர் சொல்லாமல் anonymous என்ற பெயரில் பின்னோட்டம் இடுகிறார்கள். அவர்கள் பெயர் இல்லை என்றால், என்னால் பதில் சொல்ல இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு Nuchem - upper freeze ஆவதில் இருந்து கொஞ்சம் வெளிவந்தது. அதை சில நண்பர்கள் வாங்கியுள்ளார்கள். (நான் உட்பட). அதன் tgt Rs50/- அந்த பங்கு Rs45/- தாண்டினால், கொடுத்து லாபம் பார்த்து விடுங்கள். இன்று லாபம் பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/02/2008 08:03:00 PM
நண்பர் சுதாகர்! ispat ind 400 பங்குகள் வாங்கியுள்ளேன்.(79.3)