11.1.08
11/01/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய பங்குசந்தையில் அதிகமானோர் லாபத்தை நிர்ணயம் செய்யும் வகையில் பங்குகளை விற்றார்கள்.அதனால் நேற்றைய பங்குசந்தை கீழ்முகமாக முடிவுற்றது. இன்று காலையும் அதே போல், மேல் நோக்கி தனது வர்த்தகத்தை நமது இந்திய பங்குசந்தை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால்,பிற்பகலில் அதிகமானோர் பங்குகளை விற்க முயல்வார்கள். அதனால், மிகவும் கவனமாக இருங்கள். முடிந்தால், உங்களிடம் லாபத்தில் உள்ள பங்குகளை காலையில் நல்ல விலை வரும் பொழுது கொடுத்து விட்டு, சந்தை முடியும் பொழுது விலை இறங்கினால் வாங்கி கொள்ளுங்கள். இன்போசிஸின் 3-ம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. அது 1186 கோடி நிகர லாபம் பார்த்ததாக தெரிவிக்கிறது. அதனால், அதன் பங்குகள் இன்று கொஞ்சம் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. அவரசப்பட்டு இன்று எந்த பங்குகளையும் வாங்க வேண்டாம். பொறுமையுடன் இருங்கள். பங்குசந்தைக்கு சென்ற பிறகு தகவல்களை அங்கிருந்து தர முயல்கிறேன். From Market: Not advisable to buy any stocks right now. Market under High volatile. 10.15am: those who can take delivery: buy small qty of TataSteel CMP859 & MTNL - CMP188.70 3.20pm: ISPATIND flaring up CMP69.60.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/11/2008 09:37:00 AM
Thank you Sudhakar
Sudhakar,
Good morning, this week completely MIDCAP & SMALLCAP very down, I am holding all shares, what do your advice to making average of my shares, or wait comedown more,... Thanks..
Regards,
Ganesh
கணேஷ் அவர்களே,
அடுத்த வாரமும் இப்படியிருக்கும் என்று சொல்ல இயலாது. ரிலையன்ஸ் பவர் IPO - விற்க்குள் நுழைவதற்க்காக, அதிகமானோர் பங்குகளை விற்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால், அடுத்த வாரம் பழையபடி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரலாம். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்த பங்குகளை வாங்கி உங்கள் Avg price -ஐ குறைத்து கொள்வது சரி என எனக்கு படுகிறது.
Dear Mr.Sudhakar,
Is it O.K to buy Maruti now ,since price is dropping?
Thanks in advance for your advise.
Regards
K.G.Subbramanian
அன்புள்ள சுதாகர் உங்கள் பணி தொடர வாழ்த்தும்,அன்பு மகுடம் மோகன்.