30.1.08
30/01/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்று உலக சந்தைகள் எல்லாம் நன்றாக இருந்தது. அதனால், நம் பங்குசந்தையும் குறைந்தது 500 புள்ளிகளுக்கு மேல் ஏறும் என்று நினைத்திருந்தத் பொழுது, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்ததால், மேலே ஏற வேண்டிய பங்குசந்தை ஏறாமல் போய் விட்டது. Realty துறையை சேர்ந்த பங்குகள் கொஞ்சம் பாதிக்க படும் என்பது உண்மை. நேற்றைய அமெரிக்க பங்குசந்தையும் சிறிது மேலேறி உள்ளது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகள் கீழ் முகமாக தனது வர்த்தகத்தை துவங்கி, சற்று மீள தொடங்கியுள்ளன. நம் பங்குசந்தையில், நாளை F & O closing day. அதனால், நம் பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் மேடு பள்ளமாகத்தான் இருக்கும். அதனால், தின வர்த்தகர்கள் கவனத்துடன், அடிக்கடி லாபத்தை நிர்ணயித்து கொள்ளுங்கள். சுருங்க சொல்லின், லாபத்தின் அளவை குறைத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்க்கு 100 ரூபாய் பங்கு 102 க்கு போனாலே விற்று விடுங்கள். கமிசன் போக உங்களுக்கு 1 பங்குக்கு 1.50 கிடைக்கும். அதே பங்கு மீண்டும் 100 ரூபாய் வரும் பொழுது வாங்கி விடுங்கள். 102 க்கு போகும் பொழுது விற்று விடுங்கள். இது போல் செய்வதால், உங்களுக்கு நஷ்டம் இல்லை. ஒருவேளை, இரண்டாம் தடவை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு, 98- க்கு வந்து விட்டால், உங்களுக்கு அதிகமான நஷ்டம் இருக்காது. ஏனென்றால், நீங்கள் முன்பே அதே பங்கில் லாபம் பார்த்து இருக்கிறீர்கள். அது உங்களை பெரு நஷ்டத்தில் இருந்து மீட்கும். இது போல் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய பழகி கொள்ளுங்கள். ரூ50 - விலை பங்குகளை நான் வாங்கினால், ரூ50.75 வந்தாலே கொடுத்து விடுவேன். 100 என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்குவதால் எனக்கு 70 ரூபாய் லாபம் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தை பாருங்கள். அதிகமாக ஆசைப்பட்டால், பிறகு வருத்தபட வேண்டி வரும். இன்று வங்கி துறை பங்குகள் கொஞ்சம் மீளலாம். Realty பங்குகளை தற்பொழுது வாங்க வேண்டாம். சந்தையில் இருந்து மற்ற தகவல்களை தருகிறேன். From Market: 10 am: Nifty and Sensex both in RED.. believe it will recover. can buy Sail @ CMP 216.50 10.30am: Anybody bought SAIL? try to book profit now.. CMP222/-. 10.35am: Tatasteel flaring up... CMP735.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/30/2008 06:40:00 AM