7.2.08
07/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் 523 புள்ளிகள் கீழ் இறங்கியும், நிப்டி 161 புள்ளிகள் கீழ் இறங்கியும் முடிவுற்றன. நேற்று தகவல் தொழில் நுட்ப பங்குகள் மிகவும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. Midcap பங்குகள் ஓரளவுக்கு தாக்கு பிடித்தன என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பங்குகள் traded qty சிறிது சிறிதாக கூடி வருகிறது. பிப்ரவரி 1 - ம் தேதி நிப்டியில் Total Traded Qty 4680 லட்சமாக இருந்தது, நேற்று அது படிப்படியாக உயர்ந்து 7 லட்சத்தை தாண்டியது. ஓரளவுக்கு இது பங்குசந்தைக்கு நம்பிக்கை தரும் விடயம் தான். நேற்றைய பங்கு சந்தையில் RNRL, Nagartuna Fertliser, IFCI, TTML போன்ற பங்குகள் உயர்வு கண்ட பங்குகளில் குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும், Reliance பங்குகள் உயர்வு காணும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக RNRL, RCOM, REL ஆகியவை. Reliance Power - ன் பங்குகள் வரும் 11-ம் தேதி சந்தையில் பட்டியல் இடப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது. அதனால், பங்கு சந்தை மேல் நோக்கி செல்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க கூடும். இன்று தொடங்கியுள்ள சீன புத்தாண்டு (எலி வருடம்) காரணமாக, சங்காய், ஹாங்செங், சியோல், தைவான், சிங்கப்பூர் போன்ற சந்தைகளுக்கு விடுமுறை. நாளையும் விடுமுறைதான். அதனால், இந்த வார இறுதி பங்குசந்தையை நிர்ணயிக்க போவது இந்தியா, ஜப்பான், அமெரிக்க,ஜரோப்பா சந்தைகள் தான். இன்றைய பங்குசந்தை முடிவில் மேல் நோக்கிய அதே சமயம் ஓரளவுக்கு flat ஆக இருக்கலாம். ஆரம்பத்தில் கீழ் நோக்கி செல்லும் பங்கு சந்தை, பிறகு படிப்படியாக மேல் நோக்கி செல்லலாம். இன்று RNRL, RCOM, REL, Tata Chemical, Gail, Adlab போன்ற பங்குகள் மேலே செல்லலாம் என எதிர்பார்க்கிறேன். இன்றும் நான் பங்குசந்தைக்கு நான் செல்லவில்லை. இருந்தாலும், அவ்வப்பொழுது அங்கிருந்து தகவலை பெற்று பதிய முயல்கிறேன். நேற்று, நான் உடல் நலம் இன்றி இருப்பது அறிந்து, ஆறுதலும், விரைவில் குணமடைய வேண்டியவர்களுக்கும் எனது நன்றி. உங்கள் அனைவரது அன்புக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 2/07/2008 08:52:00 AM
அன்பு நண்பர் சுதாகருக்கு,
கடந்த இரண்டு நாட்களாக வெளியூர் சென்றுவிட்டேன், தாங்கள் உடல் நலமில்லாமல் இருப்பது இன்றுதான் தெரிந்தது, தாங்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன்,.....
Get Well Soon.
நீங்க சொன்ன மாதிரி நடந்தா அதையும் எதிர்வரும் பதிவுகளில் போடவும்.
நண்பர் கணேஷ் அவர்களே, உங்கள் அன்புக்கும், பிராத்தனைக்கும் மிக்க நன்றி.
சாமான்யன் சிவா அவர்களே, உங்கள் கருத்தை ஏற்று அதன் படியே செய்கிறேன்