28.2.08
28/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே, நேற்றைய பங்குசந்தை எதிர் பார்த்தது போல், பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் Flat ஆக முடிவுற்றது. காலையில் ஆசிய சந்தைகள் நன்றாக இருப்பது கண்டு, நமது பங்குசந்தையும் மிகவும் நன்றாக மேல் நோக்கி இருந்தது. பிற்பகலில் ஐரோப்ப சந்தைகள் கீழ்முகமாக திறந்தது அறிந்தும், வரும் பட்ஜெட் எப்படியிருக்குமோ என்ற பயத்திலும், அனைவரும் லாபத்தை உறுதி செய்து கொண்டதனால், பங்கு சந்தை திடு திடு வென்று கீழ் இறங்கி நேற்றைய முடிவை விட சற்று கீழ் இறங்கி முடிவுற்றது. இன்று F & O Closing day என்பதாலும், வரும் நிதிநிலை அறிக்கை எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருப்பதனாலும், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் அத்தனை சிறப்பாக இல்லாததாலும், நமது பங்கு சந்தையும் நிச்சயம் கீழ் இறங்கும். இன்று கிட்டத்தட்ட 100 ~ 250 புள்ளிகள் கீழ் இறங்க வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன். குறுகிய கால முதலீடாக Fertiliser stocks, Infrastructure stocks வாங்கலாம். காரணம் வரும் நிதிநிலை அறிக்கையில் விவசாயம், நெடுஞ்சாலை துறை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு அவற்றை விற்று விடுவது நல்லது. அதன் பிறகு பங்குசந்தை ஒரு வீழ்ச்சியை காணலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது. யாராவது Future - ல் long position - ல் இருந்தால், வெளியே வந்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன். புதியதாக எந்த ஒரு position - ம் எடுக்க வேண்டாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 2/28/2008 07:26:00 AM
Thank you Sir
Dr Chandramohan
salem
மிக்க நன்றி