14.3.08
14/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்று மின்சார தடையினால், என்னால் பதிவு இடமுடிய வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நேற்றைய பங்குசந்தை எதிர்பார்த்தது போலவே மரண அடி வாங்கியது. இன்றைய பங்குசந்தையும், காலையில் ஓரளவுக்கு Flat ஆக திறந்து வர்த்தகட்தை தொடங்கினாலும், பிற்பகலில் அதிகமான Selling pressure இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கு தெரிந்து இன்னும் ஒரு மாத காலத்திற்க்கு பங்குசந்தை பக்கம் தலைகாட்டாமல் இருப்பதே நலம் என நினைக்கிறேன். அவ்வளவு மோசமாக உள்ளது. எல்லா Technical factor's - ம் பொய்யாக்கி சென்று கொண்டு இருக்கிறது பங்கு சந்தை. யாருக்குமே பங்குசந்தை மேல் ஒரு நம்பிக்கை தன்மை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் ஏறினால், விற்று விட்டு வெளியே வருபவர்கள் அதிகமாகி விட்டனர். காரணம் பயம். நாளை என்ன நடக்குமோ என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. 2008 ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இது வரை சுமார் 506 பில்லியன் டாலர் (20,50,000 கோடி ரூபாய்) நஷ்டமாம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், ONGC, DLF போன்ற பத்து பெரிய நிறுவனங்களின் (Market Capitalisation) இழப்பு மட்டும் 125 பில்லையன் டாலரை தாண்டுகிறது. Reliance Industries - ன் மதிப்பு மட்டும் சுமார் 93,000 கோடி குறைந்து உள்ளது. அதை அடுத்து DLF ன் மதிப்பு 80,000 கோடி இறங்கியுள்ளது. ONGC, NTPC, RCOM போன்ற நிறுவனங்களின் மதிப்பு 50,000 கோடி குறைந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. இன்று பின் வரும் பங்குகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய லாபத்தில், லாபத்தை உறுதி செய்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன். 1. ONGC 2. JP Associate 3. RNRL 4. Bata 5. Rel. Capital Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 3/14/2008 08:41:00 AM
Thanks
By Sakthivel
thanks for ur valuable information
Thanks for your info. Today I read in deccan chronicle " Investors are tired of buying at low levels...."