3.4.08
03/04/2008 வர்த்தக் குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்குசந்தை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியது. உலக பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்க, நமது பங்குசதையும் காலை பங்கு சந்தை தொடக்கத்தில் மிகவும் அமர்களமாக தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. அதன் பிறகு, கரடிகள் ஆதிக்கம் தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் வரை உயர்ந்து சென்று, பின் யாரும் எதிர் பாராத விதமாக 500 புள்ளிகள் வரை கீழே சென்றது. உயர்ந்து வரும் பணம் வீக்கம், எதிர் பார்த்த பொருளாதார வளர்ச்சி இருக்காது போன்ற காரணங்களால் சந்தை வீழ்ச்சி அடைகின்றது. இந்த வருடம் கரடிகளின் ஆதிக்கமாக தெரிகின்றது. சாதாரண மக்களுக்கு பங்கு சந்தை ஏற்றதல்ல என்று நினைக்கும் அளவிற்க்கு வருகின்ற நிலை. நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே பங்கு சந்தை சரியானதாக இருக்கும் என்று சொல்ல தோன்றுகின்றது. என்னை பொறுத்தவரை, தற்காலிகமாக பங்குசந்தையை விட்டு விலகி இருப்பதே நலம் என்று தோன்றுகிறது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 4/03/2008 07:53:00 AM