17.12.07
17/12/07 - வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. இன்றைய பங்கு சந்தை அவ்வளவு நலமாக இருக்காது என்றே கருதப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றன 2008-ஆம் ஆண்டை வரவேற்க்க. நிறைய விடுமுறைகள். அதனால், அனைவரும் தங்கள் லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் பங்குகளை விற்க முயல்வர். Mid Cap & Small Cap பங்குகள் ஓரளவுக்கு தாக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். Large Cap பங்குகள் நன்றாகவே இறங்க வாய்ப்பு உள்ளது. அவை விலை இறங்கிய பின் வாங்கினால், விரைவில் லாபம் பார்க்கலாம். விலை இறங்கும் வரை காத்திருங்கள். ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளியன்று வெளியிட்ட சில விதிகளினால், இன்று வங்கி பங்குகள் கீழ் இறங்க வாய்ப்புகள் உள்ளது. இன்று கூடுமானவரை தினவர்த்தகர்கள் விலகி இருக்க முயலுங்கள். முன்பே ஒரு பதிவில் சொல்லியுள்ளேன். எப்பொழுதுதெல்லாம், பங்கு சந்தை கீழ் நோக்கி செல்கிறதோ, அந்த சமயத்தில் உங்களிடம் உள்ள பங்குகளோ அல்லது அதன் சார்ந்த துறைகள் கீழே போகும் பொழுது, உங்களிடம் லாபத்தில் உள்ள பங்கை விற்று, பின் அன்றே அது கீழே வரும் பொழுது வாங்கி விடுங்கள். லாபம் பார்க்கலாம். ஆனால், மிகவும் கவனத்துடன் செயல் படுங்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/17/2007 09:13:00 AM
நண்பர் சுதாகர்! அருமையாக சொன்னீர்கள். இன்று பலத்த சரிவு. தொடருமா ?
"பங்கு சந்தை முடிவில்" பதிவு காணவில்லை. வேலைப்பளு அதிகமா ?
நன்றி நண்பரே. ஆமாம், நேற்று சில தவிர்க்க முடியாத வேலைகள் வந்து விட்டன.