14.12.07
14/12/07- வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய நம் இந்திய பங்கு சந்தை, ஆசிய பங்குசந்தைகளையே பிரதிபலித்தன. கீழ் நோக்கியே சென்றது. இன்று, காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளில் Nikkei - தவிர மற்ற அனைத்தும் கீழ் நோக்கியே இருக்கின்றன. நம் பங்குசந்தை கொஞ்சம் வித்தியாசமானது. சில சமயம்,உலக பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டாலும், எனக்கென்ன என்று மேலே செல்லும். சில சமயம் காரணம் இல்லாமல் வீழ்ச்சி காணும். இன்று அது நடக்கலாம். மேலே செல்லும் என நினைக்கிறேன். Metal Stocks மேலே செல்லலாம். இன்று வெள்ளிக்கிழமை. பணவீக்கம் பற்றிய அறிவுப்பு வரும். அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை வேறு. அதனால், காலை பங்கு சந்தை நன்றாக இருந்து விட்டு, பிற்பகலில் கொஞ்சம் ஆட்டம் காணலாம். சில நண்பர்கள் குறுகிய கால முதலீட்டுக்கான பரிந்துரைகளை கேட்டு உள்ளார்கள். தற்பொழுது அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மேலும், இன்னும் சில நாட்களில், அது வாரங்களில் ஒரு சரிவு இருக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது. அப்படி சரிவு வரும் பொழுது பங்குகளை பரிந்துரை செய்கிறேன். அதுவரை பொறுத்து இருங்கள். இன்றைய பரிந்துரைகள்: 1. Hindalco 2. Sail 3. PNB 4. Punjlloyd 5. RNRL 6. Rcom 7. ONGC Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/14/2007 09:20:00 AM
நண்பர் சுதாகர் அவர்களே! குறிப்பாக PNB ஐ சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது விஷயம் உள்ளதா?
வாழ்த்துக்கள்.தொடர்ந்து சந்தை நிலவரம் பற்றி எழுதுங்கள்.
tell about Godrej Consumer, Any news about it
நண்பர் பிரேம் அவர்களே, ஆமாம், PNB -க்கு நியூஸ் இருக்கிறது. இன்று செல்லும் என எதிர்பார்த்தேன். செல்லவில்லை. ஆனால்,அது விரைவில் பிச்சுகிட்டு ஓட போகுது.
நன்றி சாமான்யன் Siva அவர்களே..
Godrej Consumer பற்றி எனக்கு நியூஸ் எதுவும் வரவில்லை நண்பரே