1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 10.12.07
    STOP LOSS ORDER பற்றி சிறு விளக்கம்
    சில நண்பர்கள் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க, STOP LOSS பற்றி கொஞ்சம் விளக்கலாம் என உள்ளேன்.
    Stop loss என்பது நமது நஷ்டத்தை அல்லது லாபத்தில் நஷ்டத்தை நாமே தீர்மானித்து, அதற்க்கு ஏற்றார் போல் order Place பண்ணுவது. சில சமயம், சில பங்குகளை வாங்க சொல்லும் பொழுது, அவர்களே SL என்று கொடுப்பார்கள். அதாவது, அந்த SL விலையை கடந்து கீழே சென்று விட்டால், அதற்க்கு மேலேயும் கீழே போக வாய்ப்பு உள்ளது, அந்த பங்கின் Resitance limit அதுதான் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஆக பங்குசந்தையில் வர்த்தகம் செய்பவர்கள், அதிக நஷ்டம் அடையாமலிருக்க Stop Loss போடுவது நல்லது. லாபத்திலும் SL போடலாம்.
    உதாரணத்திற்க்கு, நான் ஒரு பங்கை ரூ100/- க்கு வாங்குகிறேன். ஒரு வேளை அந்த பங்கு கீழே போகும் பட்சத்தில், அது எதுவரை போனால், என்னால் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்ள முடியும் என்பது தான் இங்கு கேள்வி. என்னை கேட்டால், நான் 3% ~ 3.5% விழுக்காடு வரை செல்வேன். அதாவது ரூ97 முதல் ரூ96.5 வரை சென்றாலும், நான் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்ள கூடிய நிலையில் இருக்கிறேன். இது ஒரு ஷேருக்கு. ஒரு வேளை நான் ஆயிரம் ஷேர் வாங்கினால், என் நஷ்டம் எவ்வளவு? ரூ3000/- அல்லது ரூ3500/-.
    சரி.. 1000 ஷேர் வாங்கிவிட்டேன். வாங்கிய ஷேர்களை விற்க ரூ103/- க்கு Order போடுகிறேன். அதே சமயம், அதாவது உடனே, Stop loss - க்கு என்று தனி (Second) Order போட்டு விடுவேன்.
    நாம் புரோக்கரிடம் stop loss தனியாக போடுங்கள் என்று சொல்ல வேண்டும். (online -ல் வர்த்தகம் செய்பவர்கள், selling Order - ஐ மீண்டும் திறந்து, RL என்று இருப்பதை SL - என்று மாற்ற வேண்டும்). நான் முன்பே சொன்னேன், நான் ரூ97 அல்லது ரூ96.5/- வரும் வரை என்னால், நஷ்டத்தை எடுத்து கொள்ள முடியும் என்று. சரிதானே.. அப்படியென்றால், என் அதிக பட்ச குறைந்த விலை ரூ96.5.. இது Normal Price. குறைந்த பட்ச நஷ்டம் என்பது என் Trigger Price. அதாவது ரூ97/-
    நான் வாங்கிய பங்கின் விலை ஏறி கொண்டே போய், முதலில் நான் விற்க போட்ட ரூ103/- ஐ தொட்டு விட்டால், நான் வாங்கிய 1000 ஷேர் விற்று விடும். எனக்கு ரூ3000/- லாபம் கிடைக்கும். மேலே போய், லாபத்தில் முதலில் என் ஷேர் விற்று விட்டால், உடனடியாக கீழே Stop Loss -க்கு போட்ட order - ஐ எடுத்து (Cancel செய்து) விட வேண்டும். இல்லையேல், நீங்கள் விற்ற பிறகு, ஒரு வேளை உங்கள் பங்கின் விலை இறங்கி கொண்டே வந்து உங்கள் SL order - ல் உள்ள பங்கையும் விற்று விட்டால், நீங்கள் 2000 ஷேர்களை விற்றதாக அர்த்தம். அதாவது 1000 ஷேர் short ஆகி விடும். Cash - ல் intraday - யில் short போக கூடாது. அப்படி ஆகிவிட்டால், நீங்கள் அதிக நஷ்டம் அடைய நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சரி. நான் வாங்கிய பிறகு, என் பங்கின் விலை ஏறுவதற்க்கு பதிலாக இறங்கி கொண்டே வருகிறது. நான் ஒரு பங்கு மட்டும் வாங்க வில்லை. நிறைய பங்குகள் வாங்கியிருக்கிறேன். என்னால் எப்படி இந்த பங்கு மட்டும் கீழே இறங்குகிறது என்பதை கண்காணிக்க முடியும். அல்லது பங்கு வாங்கிய பிறகு ஏதோ ஒரு வேளையாக வெளியே செல்ல நேரிடலாம். அப்பொழுதுதான் இந்த SL உபயோகமாக இருக்கும். நான் பங்கு வாங்கிய உடனே இரண்டு Order போட்டேன் அல்லது போடுவேன் என்று சொன்னேன் அல்லவா?. ஒன்று Normal Order (Rs103/-) & மற்றது Stop Loss Order (Rs96.5 & Trigger Price 97/-). இப்பொழுது நான் வாங்கிய பங்கு கீழே சென்று கொண்டு இருக்கிறது. எப்பொழுது Rs97/- அல்லது Rs96.5/- க்கு இடையில் பரிவர்த்தனை நடக்கிறதோ, அப்பொழுது Automatic ஆக என் 1000- ம் ஷேரும் விற்று விடும். அப்பொழுது எனக்கு நஷ்டம் Rs3000/- த்தில் இருந்து Rs3500/- க்குள் இருக்கும். SL order - Trigger ஆகி விட்டால், நான் என் Normal Order (Rs103/-) ஐ உடனே Cancel செய்து விட வேண்டும். இல்லையேல், அது double Order ஆகி விடும்.
    சரி.. இப்பொழுது லாபத்தில் செல்லும் பங்கை பார்ப்போம். இங்கு ஒரு Order மட்டும் போட்டால் போதுமானது. ஆனால், அது Normal Order இல்லை. SL Order.
    நான் ரூ100/- க்கு பங்கு வாங்கினேன். நான் வாங்கியவுடன் அந்த பங்கு ரூ105/- போய் விட்டது. இன்னும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் சொல்கிறது. சில சமயம் ஏறிய பங்கு Volatile market - ல் கீழே வரவும் வாய்ப்பு உள்ளது. எனக்கு ரூ105/- க்கு கொடுக்க மனம் இல்லை. ரூ120- ம் போகலாம். ஆனால், எனக்கு லாபத்தை விடவும் மனசில்லை. சரி.. எனக்கு ரூ3000/- ம் லாபம் வந்தாலே போதுமானது என்று என் மனதில் தீர்மானித்து கொள்கிறேன்.
    நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.. தற்பொழுது அந்த பங்கின் விலை ரூ105/- நான் உடனே விற்றால் எனக்கு ரூ5000/- கிடைக்கும். ஆனால், மேலே செல்லும் என நம்பத்தகுந்த தகவல் சொல்கிறது. நான் இங்கு Risk எடுக்கிறேன். அதாவது ரூ2000/- லாபத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். SL Order போடுகிறேன். ரூ103/- க்கு Trigger ஆகும் படி.. நான் நினைத்த படியே அந்த பங்கின் விலை ரூ107/- க்கு உயர்ந்து விட்டது. நான் உடனே என் புரோக்கரிடம் சொல்லி, Trigger Price - ஐ Rs103/- ல் இருந்து ரூ105/- க்கு மாற்றி விடுவேன். மீண்டும் அந்த பங்கு ரூ110/- க்கு போய் விட்டது. உடனே நான் என் Trigger Price - ஐ 108/- க்கு மாற்றி விடுவேன். ஒரு கட்டத்தில், அந்த பங்கு மேலே சென்றாலோ, அல்லது குறைந்தாலோ என் SL Order - ஐ Normal Order ஆக மாற்றி என் லாபத்தை எடுத்து கொள்வேன். இப்படித்தான் லாபத்தில் SL போட வேண்டும்.
    எந்த காரணம் கொண்டும், SL Price - ஐ, Present Price க்கு மிக அருகாமையில் போடாதீர்கள். ஒரு விழுக்காடு அல்லது 2 விழுக்காட்டுக்கு கீழே போடுங்கள். மிக அருகாமையில் இருந்தால், கீழே வந்து உங்கள் பங்கை வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்..
    என்ன நண்பர்களே, ஏதாவது புரிகிறதா? ரொம்ப குழப்பி விட்டேனா?


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    7 Comments:

    பயனுள்ள குறிப்புகள் அளித்துள்ளீர்கள் அண்ணா.

    நன்றி

    December 11, 2007 at 1:23 AM  

    Sudhakar,

    It seems there is little difference in online trading.

    Here is the one, what i am copying from icicidirect lessons.

    ----

    top Loss Order : A stop loss order allows the trading member to place an order which gets activated only when the last traded price (LTP) of the Share is reached or crosses a threshold price called as the trigger price. The trigger price will be as on the price mark that you want it to be. For example, you have a sold position in Reliance Ltd booked at Rs. 345. Later in case the market goes against you i.e. go up, you would not like to buy the scrip for more than Rs.353. Then you would put a SL Buy order with a Limit Price of Rs.353. You may choose to give a trigger price of Rs.351.50 in which case the order will get triggered into the market when the last traded price hits Rs.351.50 or above. The execution will then be immediate and will be at the best price between 351.50 and 353. However stock movements can be so violent at times. The prices can fluctuate from the current level to over and above the SL limit price, you had quoted, at one shot i.e. the LTP can move from 350…351…and directly to 353.50. At this moment your order will immediately be routed to the Exchange because the LTP has crossed the trigger price specified by you. However, the trade will not be executed because of the LTP being over and above the SL limit price that you had specified. In such a case you will not be able to square your position. Again as the market falls, say if the script falls to 353 or below, your order will be booked on the SL limit price that you have specified i.e. Rs. 353. Even if the script falls from 353.50 to 352 your buy order will be booked at Rs. 353 only. Some seller, somewhere will book a profit in this case form your buy order execution. Hence, an investor will have to understand that one of the foremost parameters in specifying on a stop loss and a trigger price will have to be its chances of executionability as and when the situation arises. A two rupee band width between the trigger and stop loss might be sufficient for execution for say a script like Reliance, however the same band hold near to impossible chances for a script like Infosys or Wipro. This vital parameter of volatility bands of scrips will always have to be kept in mind while using the Stop loss concept.

    December 11, 2007 at 2:31 AM  

    மிக்க நன்றி நாகராஜ்.

    December 11, 2007 at 7:03 AM  

    களப்பிரர் அவர்களே, தகவலுக்கு மிக்க நன்றி.
    நீங்கள் பதிந்து இருப்பதும் ஒரு வகை SL தான். இது,Short போய் விட்டு, பின் பங்கை வாங்க போடும் SL. நான் என் பதிவில் அதை சொல்ல வில்லை. காரணம், Cash -ல் பொதுவாக Short அடித்து, சில சமயம் SL order நீங்கள் பதிந்து உள்ளதில் உள்ளது போல், Trigger ஆக வில்லை என்றால், நாம் அதை கவனிக்கவில்லை என்றால், நிறைய நட்டம் ஆக நேரிடும். Short அடித்து SL போட்டு வாங்குவது பங்கு சந்தையில் நேரடியாக பார்ப்பவர்களுக்கே சரிபடும். நான் இது போல் செய்வது உண்டு. நான் மார்கெட்டில் இருப்பேன். அதை கவனித்து கொண்டே இருப்பேன்.ஆனால், நிறைய நண்பர்கள் தொலைபேசி மூலம் SL போட்டு, Trigger ஆகவில்லை என்றால்? அது அதிகமான நஷ்டத்தில் கொண்டு போய் விடும். குறிப்பாக, பங்குசந்தை ஏறிக்கொண்டு சொல்லும் பொழுது..

    December 11, 2007 at 7:36 AM  

    Hi Sudhakar,
    Thanks a lot for detailed explanaiton on "SL".

    Could you please give a future prospectus of Tripex Overseas in short & midterm.

    Anyidea why it went from 214 (52weeks high) to 14 (52weeks low)? Will there any chance to go up a little from current level (25+).

    Thanks
    Raviii

    December 11, 2007 at 9:16 AM  

    பயனுள்ள தகவல், சுதாகர்!

    கலக்குறீங்க! வாழ்த்துக்கள்!!

    December 11, 2007 at 12:16 PM  

    Mr.Raviii,Sorry, I don't have any idea about Tripex Overseas. I went thro' the company profile,but,not much profit and business. Yes, the high was Rs214 on 02/06/07 and now it's come down to Rs14/-. But, the face value of the share is Rs10/-

    December 11, 2007 at 8:38 PM  

    Post a Comment

    << Home