1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 6.12.07
  06/12/07 பங்குசந்தை முடிவில்
  இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்ததை போலவே காலை மேல்நோக்கி வர்த்தகத்தை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 20000 புள்ளிகளையும், நிப்டி 6000 புள்ளியையும் தாண்டி மேலே செல்ல ஆரம்பித்தன. ஆனால், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிறகு 3 மணி போல், மேல் இருந்த பங்குசந்தை கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நேற்றைய புள்ளிகளைவிட கீழே சென்றது. ஆனால், சற்று சுதாரித்து, பின் மீண்டும் மேலே வர ஆரம்பித்தது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 19,795.87 (+57.80 புள்ளிகள் அதிகம்) மற்றும் நிப்டி 5,954.70 (+14.70 புள்ளிகள் அதிகம்) என்ற நிலையில் முடிவு பெற்றன.

  சரி, இன்று பரிந்துரைத்த பங்குகளில் செயல்பாட்டை பார்ப்போம். இன்று பரிந்துரைத்த பங்குகளில் சில உயர்ந்தன. சில கீழ் இறங்கின. மேலே செல்லும் என தகவல்கள் சொன்ன Metal Index கீழே சென்று விட்டன. அதனால், Hindalco கீழே சென்று விட்டது. ஆனால், powergrid - க்கு நல்ல News உள்ளது. ஏன் கீழே இறங்கியது என்று புரியவில்லை.

  1. Power Grid - Rs.2.85 இறங்கியது. (அதிகபட்சமாக ரூ8.55 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ11.30 கீழ் இறங்கியது).
  2. NTPC - Rs.0.10உயர்ந்தது. (அதிகபட்சமாக ரூ8.65 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8.55 கீழ் இறங்கியது).
  3. Hindalco - Rs.6.40 இறங்கியது. (திறந்த விலையே அதிகபட்சமாக ரூ8.80 இருந்தது. பின் அங்கிருந்து ரூ15.20 கீழ் இறங்கியது).
  4. SBIN - Rs.11.05 உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ52.30 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ41.25 கீழ் இறங்கியது).
  5. ICICI - Rs.36.65உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ55.65 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ19.00 கீழ் இறங்கியது).

  இன்று பங்குசந்தையில் இருந்து SYNDICATE BANK வாங்க சொல்லியிருந்தேன். ஆனால், அது விலை இன்று இறங்கியுள்ளது. நான் கூட Future - ல் வாங்கியுள்ளேன். ஆனால், அது நாளையோ அல்லது அடுத்த வாரமோ விலை ஏறிவிடும். நேற்று பரிந்துரைத்த செம்பால்பெர்டிலைசர் இன்று தலைகால் புரியாமல் விலை ஏறியது.

  அதனால்,மீண்டும் சொல்கிறேன், நான் பரிந்துரைக்கும் பரிந்துரைகள் சில சமயம் கீழே இறங்கும். ஆனால், அவை சில நாட்களில் மேலே பறந்துவிடும். அதனால், பொறுமையுடன் இருந்தால், லாபம் நிச்சயம்.

  நீண்ட கால முதலீட்டில், நான் UNIPLY என்னும் பங்கை பரிந்துரைத்து இருந்தேன். அது இன்று கிட்டத்தட்ட நான் சொன்னவிலையை தொட்டு விட்டது. நாளை உங்களிடம் அந்த பங்குகள் இருந்தால் விற்று விடுங்கள்.

  இன்று லாபம் அடைந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  4 Comments:

  சுதாகர் அவர்களே, நான் கடந்த ஓராண்டாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். பெரும்பாலும் long term investmentஆக தான் வைத்துள்ளேன். ஓரிரு சமயங்களில் மட்டும் swing trading and intra trading செய்கிறேன்.

  தங்களது பதிகள் பயனுள்ளதாக இருக்கிறது.

  தற்போது Future ல் ஈடுபடலாம் என்று யோசிக்கிற‍ேன். தங்க்ள் ஆலோசனை தேவை.

  December 6, 2007 at 7:43 PM  

  சுதா அண்ணா RPL வாங்கலாமா?

  ஏன் என்றால் RPL லிடமிருந்து Kuwait Petrolium Limited பங்குகளை 10 சதம் அளவுக்கு வாங்க போவதாக செய்தி வந்துள்ளது.

  ஆனால் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளதாக குறிப்பு.

  ரெலிகரில் இன்னும் 2 பங்கு நாளில் ரிலையன்ஸ் பெட்ரோலியம் 250 ஐத் தொடலாம் என சேதி கிடைத்துள்ளதாக நண்பர் கூறுகிறார்.

  December 6, 2007 at 9:38 PM  

  நண்பர் நாகு அவர்களே, உங்களுக்கு Future - ஐ பற்றி தெரியும் என நினைக்கிறேன்.அதில் மிகவும் கவனம் தேவை. எல்லாவற்றையும் விட பணம் தேவை. காரணம், ஒரு வேளை நாம் வாங்கிய பிறகு நம் பக்கின் விலை இறங்கினால், (குறிப்பாக சந்தை 1000, 1500 புள்ளிகள் விழும் பொழுது) நீங்கள் வாங்கிய பங்கின் விலை வீழ்ச்சிக்கு தகுந்தார்போல் MTM கட்ட வேண்டும். உங்கள் கணக்கில் பணம் இல்லை என்றால்,உங்கள் புரோக்கர் உங்களை தொந்தரவு செய்ய தொடங்கிவிடுவான்,மார்கெட் இறங்க இறங்க உங்கள் MTM amount ஏறும். நீங்கள் அதிகமாக மாட்டி கொள்வீர்கள். ஒரு கட்டத்தில் pressure பொறுக்க முடியாமல் சில ஆயிரம் ரூபாய் நட்டத்தில் உங்கள் லாட்டை கொடுக்க வேண்டி வரும். அதனால்,Extra money எப்போழுதும் உங்களிடம் இருக்க வேண்டும். Margin money இல்லாது, கையில் குறைந்தது ரூ75K முதல் 1லட்சம் இருக்க வேண்டும். இருந்தால், ஒரே ஒரு லாட் மட்டும் தைரியமாக எடுக்கலாம். நிச்சயம் வெற்றி உண்டு. இருக்கிறதா? சொல்லுங்கள். நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நீங்கள் கண்டிப்பாக லாபம் பெறலாம். Future - ல் உடனுக்கு உடன் வெளியே வர வேண்டும். இல்லையேல், மாட்டி கொள்வீர்கள். மிகவும் கவனம் தேவை. மேலும், உங்களிடம் தற்பொழுது உள்ள பங்குகளில் "A" share எவ்வளவு இருக்கிறதோ, அதற்க்கு தகுந்தாற் போல்,உங்கள் புரோக்கர் உங்களுக்கு Margin money தருவான்.அதனால், நீங்கள் "A" share வாங்கி இருந்தால், உங்களுக்கு Future பண்ணும் பொழுது உபயோமாக இருக்கும்.

  December 6, 2007 at 10:11 PM  

  நாகராஜ், எனக்கும் நியூஸ் வந்தது. மார்கெட் மிகவும் நல்லா இருக்கும் பொழுது RPL வாங்கலாம்.இப்பொழுது வாங்கினால், உடனே வெளி வர வேண்டும். இல்லையேல், உங்கள் பணம் முடக்கப்பட்டு விடும்.பங்குசந்தை எப்பொழுது விழுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

  December 6, 2007 at 10:14 PM  

  Post a Comment

  << Home