1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 4.12.07
    4/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்று காலை சென்செக்ஸ் 130 புள்ளிகள் கூடுதலாக தன் வர்த்தகத்தை தொடங்கியது. நான் பரிந்துரைத்தது போலவே மதியம் 2.15 வரை கிட்டத்தட்ட மேல் நோக்கி ஆனால், மேடு பள்ளம் நிறைந்ததாக சந்தை இருந்தது. அதன் பிறகு ஐரோப்பிய சந்தைகள் கீழ் நோக்கி செல்வதை கண்டு, நம் பங்கு சந்தை ராக்கெட் வேகத்தில் கீழ் சென்றது. ஓரளவுக்கு தாக்கு பிடித்து சென்செக்ஸ் 74 புள்ளிகள் கீழ் இறங்கிய நிலையில் இன்றைய சந்தை முடிவு பெற்றது.

    இப்பொழுது உள்ள நிலையில், 74 புள்ளிகள் என்பது ஒன்றுமே இல்லை. கிட்டத்தட்ட FLAT தான்.
    நான் இன்றைய பங்குசந்தையின் ஊடே, நம் நண்பர்களுக்காக, பங்கு சந்தையில் இருந்து சில பரிந்துரைகளை அளித்தேன். இதை எத்தனை நண்பர்கள் கவனித்தார்கள் என தெரியவில்லை. கவனித்து இருந்தால், நிச்சயம் லாபம் அடைந்திருக்கலாம். முடிந்தவரை நான் சந்தையில் இருந்து அவ்வப்பொழுது வரும் பரிந்துரைகளை தருகிறேன் (நீங்கள் விரும்பினால்).
    சரி. இன்று காலை நான் பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாட்டை பார்ப்போம்..

    AIR DECCAN - Rs.18.20 உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ33.80 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8 கீழ் இறங்கியது).
    IFCI- ரூ2.45 இறங்கியது (அதிகபட்சமாக ரூ1.70 ஏறி, பின் ரூ4.15 இறங்கியது)
    FEDERAL BANK -
    ரூ5.95 இறங்கியது (அதிகபட்சமாக ரூ7.50 ஏறி, பின் ரூ13.45 இறங்கியது)
    PTC - ரூ2.00 இறங்கியது (அதிகபட்சமாக ரூ2.75 ஏறி, பின் ரூ4.75 இறங்கியது)
    Siemens - ரூ21 ஏறியது. (அதிகபட்சமாக ரூ86.15 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ65.15கீழ் இறங்கியது). கொடுத்த Target விலையை கிட்டத்தட்ட தொட்டு விட்டது.
    L & T - ரூ55.45 ஏறியது. (அதிகபட்சமாக ரூ101 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ45.55 கீழ் இறங்கியது). கொடுத்த Target விலையை விட அதிகமாகவே சென்று வந்து விட்டது.

    RCom - ரூ1.00 ஏறியது. (அதிகபட்சமாக ரூ12.60 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ11.60 கீழ் இறங்கியது).
    IVRCL Infra - ரூ14.90 ஏறியது. (அதிகபட்சமாக ரூ18.05 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.15 கீழ் இறங்கியது). Target 504 - ஐ தொட்டு விட்டது
    DLF - ரூ2.60 விலை இறங்கியது (அதிகபட்சமாக ரூ29.15 ஏறி, பின் ரூ31.75 இறங்கியது)
    TATA TEA- ரூ63.10 விலை ஏறியது (அதிகபட்சமாக ரூ18.05 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.15 கீழ் இறங்கியது).

    இன்று பரிந்துரைத்த பங்குகளில், நான்கு மட்டும் நேற்றைய விலையை விட கீழே சென்று உள்ளன. அதில் DLF - 29.15 விலை ஏறிய பின்னரே இறங்கியுள்ளது. மேலும், Siemens, IVRCL infra, L & T அகியவை கொடுத்த Target விலையை தொட்டு விட்டன.

    மேலும் IFCI, DLF, PTC, FEDERAL Bank ஆகிய பங்குகளை வாங்கி, விற்காமல் வைத்திருப்பவர்கள், நஷ்டத்துக்கு விற்க வேண்டாம். ஒரு வாரம் வைத்திருங்கள். அவை மேலெ சென்று விடும்.

    நேற்று பரிந்துரைத்த Gail - பங்கு இன்று கிட்டத்தட்ட ரூ13 விலை கூடியது. இதை யாராவது கவனித்தீர்களா?
    மேலும், இன்று online - ல் சில பரிந்துரைகள் கொடுத்தேன். அதில் IDBI - வாங்க சொல்லி இருந்தேன். அது ஏறாமல் அப்படியே நிற்க்கிறது. நாளை காலை பங்கு சந்தை நன்றாக திறந்தால், அது பறந்து விடும். கவலை வேண்டாம்.

    உங்களிடம் இருந்து வரும் வரவேற்ப்பை பொறுத்தே, பங்கு சந்தையில் இருந்த கொண்டே ONLINE - ல் , அவ்வப்பொழுது வரும் பரிந்துரைகளை தரலாம் என உள்ளேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    FUTURE - க்கு தனியாக 2 பரிந்துரைகளும், Online -ல் இருந்து ஒரு பரிந்துரையும் தந்தேன். அவை அனைத்தும் லாபத்தை தந்தன.

    லாபம் பார்த்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    21 Comments:

    thanks a lot :)

    December 4, 2007 at 6:13 PM  

    நன்றி நாகராஜ். நீங்கள் லாபம் பெற்றால் எனக்கு மிக்க மகிழ்சியே

    December 4, 2007 at 6:36 PM  

    நீங்கள் தொடர்ந்து பரிந்துரைகளை வழங்கிக் கொண்டிருங்கள்.

    நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.


    நன்றி

    December 4, 2007 at 6:57 PM  

    என்னிடம் RPL பங்குகள் ரூபாய் Rs.230 கு இருக்கிறது. இதை நான் நீண்ட கால முதலீடாக வைத்திருக்க விரும்புகிறேன். உங்களுடைய comments please

    மேலும் நீண்ட கால முதலீடுகள் பற்றியும் , எந்த பங்குகள் நீண்ட கால முதலீடுகளில் சேரும் என்பது பற்றியும் , அதை கண்டறிவது எப்படி என்றும் தங்கள் விலகினால் என்னை போன்ற முதலீடலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உங்கள பதிப்புகள் மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

    மிக்க நன்றி

    December 4, 2007 at 6:59 PM  

    கண்டிப்பாக நாகு அவர்களே. உங்கள் DCHL பங்கு நன்றாக இன்று விலை போனதே.

    December 4, 2007 at 6:59 PM  

    பெயர் குறிப்பிடாத நண்பர் அவர்கள் RPL பங்கை வைத்திருப்பதாக சொல்லியுள்ளீர்கள். என்னை பொறுத்தவரை அது நல்ல பங்குதான். கண்டிப்பாக அதை வைத்து கொள்ளுங்கள். நீண்ட கால முதலீடுகள் என்பதை நிறுவனத்தின் தற்கால மற்றும் அதன் பிற்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளை வைத்தே சொல்ல முடியும் நண்பரே..

    December 4, 2007 at 7:02 PM  

    Sudhakar how can we get you online during market timings, please explain and can u give some short to medium term stocks recommendations,.. Thanks.

    Ganesh.

    December 4, 2007 at 7:02 PM  

    கணேஷ் அவர்களே, online பரிந்துரைக்கு, தினமும் பங்குசந்தை திறந்தவுடன்,என்னுடைய இந்த வலைப்பூவுக்கு வந்து பாருங்கள்.10 அல்லது 15 நிமிடத்திற்க்கு ஒருதடவை Refresh செய்து பாருங்கள். எதுவும் நான் பதிந்து உள்ளேனா என்று பாருங்கள். இருந்தால் பரிந்துரைபடி செய்யுங்கள்.
    நான் இதற்க்கு முந்தைய பதிவில், குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடுகளுக்கு சில பரிந்துரைகள் செய்து உள்ளேன். அதை பாருங்களேன்.

    December 4, 2007 at 7:08 PM  

    Hello Sudhakar,

    All your tips are working great. please continue your srevice.


    Thanks
    Viswa

    December 4, 2007 at 7:33 PM  

    சுதாகர் இன்று நான் IFCI 106.70,Reliance Communication 717, DLF 970 க்கு வாங்கினேன்.இவை நாளை விலையேற வாய்ப்புள்ளதா?

    December 4, 2007 at 7:37 PM  

    Thanks for your service

    December 4, 2007 at 8:08 PM  

    i am very new to share market. but already i have many MFs. now I am planing to invest 50000 Rs. for 6 months . please advice.

    December 4, 2007 at 8:11 PM  

    Thanks for your feed back Mr.Viswa.

    December 4, 2007 at 8:18 PM  

    நக்கீரன் அவர்களே, நீங்கள் வாங்கியிருக்கும் மூன்று பங்குகளும் மிகவும் நல்ல பங்குகளே.நாளை காலை பங்குசந்தை நன்றாக இருக்கும் பட்சத்தில்,நிச்சயமாக அவை மேலே செல்லும். நீங்கள் வாங்கியுள்ள 3 பங்குகளுக்கும் News உள்ளது. ஒரு வேளை, நாளை பங்கு சந்தை சரியில்லாமல் போனால், உங்களிடம் இருக்கும் பங்கை விற்று விட்டு,அந்த பங்கு கீழே போகும் பொழுது வாங்கி விடுங்கள். இதுவும் லாபம் பார்க்கும் முறையே.ஆனால், நீங்கள் மிகவும் நெருக்கமாக அதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் நஷ்டம் அடைய நேரிடும்.

    December 4, 2007 at 8:21 PM  

    பாஷிர் அவர்களே,நான் குறுகிய அல்லது நீண்ட கால பரிந்துரைள் என்ற தலைப்பின் கீழ் ஒரு பதிவு இட்டுள்ளேன். அதை பாருங்களேன்.

    December 4, 2007 at 8:24 PM  

    திரு சுதாகர் , அவர்களே , தங்களது சிறப்பான பணியை தொடரவும் , என் போன்ற இளைஞர்களுக்கு , மிக உதவியாக இருக்கும்.... நான் தற்பொழுதுதான் , டீமேட் , கணக்கை துவங்கி உள்ளேன் , விரைவில் தங்களை போன்ற நல் இதயங்களின் ஆலோசனையின் பெயரில் முயட்சிக்க உள்ளேன்... தங்கள் விருப்ப பட்டால் , தனி மடல் தொடர்புக்கு.... senthilfirst1


    அன்புடன்
    இரா .செந்தில் நாதன்

    December 4, 2007 at 9:42 PM  

    dear suthagar sir your tips very good.and great keep it up

    December 4, 2007 at 10:01 PM  

    மிக்க நன்றி நண்பர் சுதாகர் அவர்களே ! தங்களின் Tech Mahindra ஆலோசனைக்கு காத்திருப்பேன். Comments ல் உள்ள ICON ஐ Click செய்து பார்த்ததில் தங்களின் e-mail முகவரி காணப்படவில்லை. நான் வர்த்தகத்திற்கு ICICI Direct உபயோகம் செய்கிறேன்.
    நான் வர்த்தகத்திற்கு புதியவன். தின வர்த்தகம் செய்ய விரும்புகிறேன். என் தனி மடல் முகவரி pg_prem@yahoo.com க்கு தாங்கள் மடல் அனுப்பினால் மகிழ்ச்சியடைவேன்.

    December 4, 2007 at 11:31 PM  

    you are doing a wonderful service to tamil investors.booked profit.Thanks.I am proud to be a tamil and having visit this blog.please keep going.
    we appreciate.

    December 4, 2007 at 11:48 PM  

    நன்றி சுதாகர்.

    December 5, 2007 at 7:36 AM  

    thanks sir

    December 5, 2007 at 11:00 AM  

    Post a Comment

    << Home