12.12.07
12/12/07 க்கான வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி, எதிர்பார்த்தபடியே 0.25% வட்டியை குறைத்து அறிக்கை விட்டது. ஆனால், 0.5% விழுக்காடு வரை எதிர்பார்த்த அமெரிக்கர்கள், ஏமாற்றம் அடைந்ததால் பிற்பகலில் அமெரிக்க பங்கு சந்தைகள் 2% -க்கும் கீழ் வீழ்ந்தன. அதன் எதிரொலி இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளிலும் இருக்கிறது. நம் பங்குசந்தையை பற்றி கேட்கவே வேண்டாம். நிச்சயம் இன்று கீழ் நோக்கியே தன் வர்த்தகத்தை ஆரம்பிக்கும். கீழ் நோக்கியே இன்றைய வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்று புதிதாக பங்குகளை வாங்கி விற்க்கும் (தினவர்த்தகம்) செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிதாக எதுவும் பங்குகள் வாங்க வேண்டாம். Delivery எடுக்க முடியுமானால், அதிகமாக இறங்கும் Nifty, Jr.Nifty பங்குகளை மதியம் போல் வாங்கி கொள்ளலாம். இன்றும் வர்த்தகம் பண்ணலாம். எப்படி என்கிறீர்களா? உங்களிடம் உள்ள பங்குகளில் ஏதாவது லாபத்தோடு இருந்தால், அந்த பங்குகளை முதலில் விற்று விடுங்கள். பிறகு அது 1.5 ~ 3.5 விழுக்காட்டுக்கு கீழ் செல்லும் பொழுது, வாங்கி விடுங்கள். உங்களிடம் உள்ள பங்கு உங்களிடமே வந்துவிடும். பணமும் பார்க்கலாம். ஒரு வேளை, நீங்கள் கொடுத்த பங்கின் விலை, இறங்குவதற்க்கு பதிலாக ஏறி விட்டால் கவலை கொள்ள வேண்டாம். காரணம், நீங்கள் அந்த பங்கை லாபத்துக்குத்தான் விற்று இருப்பீர்கள். அதிக ஆசை பட்டு விட்டு விடாதீர்கள். அதே போல், மேல் நோக்கி சென்று கொண்டு இருக்கும் (+) பங்குகளில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். முயன்றுதான் பாருங்களேன்.. வெற்றி உங்கள் பக்கம்.. Latest News: 9.45am: Future - ல் Long position வைத்து இருப்பவர்கள் கீழ் வரும் பங்குகளை விட்டு வெளியே வருவது உத்தமம்.. 1. BHEL 2. BINDAL AGRO 3. AIRDECCAN 4. ESSAR OIL 10.15am: Buy KSOIL (intraday) CMP88.80 11.00am: KSOIL went up CMP94.00 Book partial profit. Delivery -- Can buy Punjlloyd - - Tgt 575 (3 days time) CMP540 Delivery - Crompton Greaves - Tgt 450 (1 week time) CMP420 Delivery - STAR (Cash & F&O) - Tgt 350 (1 wk time) CMP320 |
Thank You Sudhakar.
Sudhakar,
Good morning, If market go down Please give some short term good stock for delivery, I wait for your during market hour comments,...
Thanks.
Regards,
Ganesh.
இன்று தினவணிகம் வேண்டாம் என்று எச்சரித்தமைக்கு நன்றி.
you welcome Mr.Viswa
Mr.Ganesh, I will try my best to update during market hours
நண்பர் சுதாகர்! Godrej Industries விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டு வருகிறது. இது பற்றி ஏதாவது News உள்ளதா? Unitech வாங்கலாமா?
இந்த வலைப்பூவை பார்த்து பின்னோட்டம் இட்ட நண்பர் நக்கீரன் அவர்களுக்கு நன்றிகள்
நண்பர் பிரேம் அவர்களே, UNITECH மிகவும் நல்ல பங்கு. Delivery - க்கு வேண்டுமென்றால் வாங்கி வைத்து கொள்ளுங்கள். கடந்த வாரம் வாங்கியிருந்தால், இன்நேரம் நல்ல பணம் பார்த்து இருக்கலாம்.Godrej Ind. நீண்ட நாட்களுக்கு பிறகு மேலே வருவதாக உணர்கிறேன். புதிதாக அந்த பங்கை வாங்க வேண்டாம் என்பது என் எண்ணம். எதுவும் அதை பற்றி தகவல் இருந்தால், நிச்சயம் சொல்கிறேன்.
nice information thanks
திரு சுதாகர் , அவர்களே குறுகிய கால முதலீடுக்கு ( 2,3 )மாதங்கள் ஏற்ற பங்குகள் இருந்தால் , ஆலோசனை கூறவும்....
அன்புடன்
இரா .செந்தில் நாதன்
Rajendran72 அவர்களுக்கு மிக்க நன்றி
செந்தில் நாதன் அவர்களே, கண்டிப்பாக தருகிறேன். என் பதிவில் அதை பற்றி குறிப்பிடுகிறேன். நன்றிகள் நண்பரே