1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 15.12.07
  பங்குசந்தையில் வரும் வாரம் தனி ஆவர்த்தனம்
  பங்குச் சந்தையில் வரும் வாரம் தனி ஆவர்த்தனம் -சேதுராமன் சாத்தப்பன்- தினமலர்

  பங்குச் சந்தை சில சமயங்களில் விடை தெரியாத புதிர் போல காட்சியளிக்கும். கடந்த புதன்கிழமை உலகளவில் பங்குச் சந்தைகள் படுபயங்கரமாக கீழே விழுந்த போதிலும், இந்தியாவிலும் அடி விழும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், நல்ல தொழிற் உற்பத்தி சதவீதம் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தாலும், சிறிய, நடுத்தர பங்குகள் பக்கம் பலமான காற்று வீசுவதாலும் பங்குச் சந்தை பிரகாசமாக இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகிறது, கீழே விழுமோ என்ற அச்சம் இருந்தாலும் பங்குச் சந்தை போகும் வேகம் இனி கீழே விழ வாய்ப்பு இல்லை என்ற நோக்கில் சென்று கொண்டு இருக்கிறது.

  வியாழன் மேலே தான் பங்குச் சந்தை இருக்கும் என்று பார்த்தால் அன்று கீழே விழுந்தது. 20 ஆயிரத்தை தாண்டும் போது எல்லாரும் விற்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். வெள்ளி நல்ல வெள்ளியாக இருக் கட்டும் என்று பலரும் வேண்டி கொண்டார்களோ என்னவோ பங்குச் சந்தை ஒரு பரபரப்பில்லாமல் அதிவேகத்தில் மேலேயும் போகாமல், கீழேயும் விழாமல் நடுநிலையுடன் இருந்தது. இருப்பினும் இறுதியில் 74 புள்ளிகள் குறைந்து முடிந்தது. குறிப்பாக வங்கித் துறை கேபிட்டல் குட்ஸ், சாப்ட்வேர் துறை பங்குகள் கீழே சரிந்தன. ஆசியா அளவில் பங்குச் சந்தைகள் குறைந்ததும் சரிவுக்கு காரணம். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 20 ஆயிரத்து 30 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை ஆறாயிரத்து 47 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

  வெள்ளிக்கிழமை இந்திய சிமென்ட்ஸ் பங்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. இது ஒரே நாளில் 25க்கு மேல் கூடியது. இந்த நிறுவனம் முதலீட்டை பெருக்குவது தொடர்பாக பங்குதாரர்கள் அசாதாரண கூட்டத் தை சென்னையில் கூட்டியிருந்தது. கூட்டத்தில் பங் கேற்ற பங்குதாரர்கள் உரிமை பங்கு கிடைக்குமா என்ற ஆவலுடன் இருந் தனர். ஆனால், பங்குதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் பிற்பகுதியில் இந்நிறுவன பங்கு விறுவிறுவென ஏறியது. ரூ. 330 இதுவும் புரியாத புதிர் தான்.

  வரும் வாரம் எப்படி இருக்கும்: எந்த எந்த கம்பெனிகள் கூடுதலாக அட்வான்ஸ் டாக்ஸ் கட்டியது என்ற செய்திகள் வரும் வாரம் கசிய இருப்பதால் அதை வைத்து மார்க்கெட்டை எடை போட்டு கலகலக்க வைக்க காத்திருக்கிறார்கள். வங்கிகள் நிதியானது மியூச்சுவல் பண்ட்களில் பெருமளவில் குவிந்து வருவதை தடுக்க, ரிசர்வ் வங்கி கடும் உத்தரவுகளை பிறப்பித்துள் ளது. இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை தான் வந்தது. எனவே இதன் தாக்கம் திங்கட்கிழமை தெரியவரும்.

  இதன் காரணமாக வங்கி பங்குகள் சரிய வாய்ப்பு இருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உலக நாடுகள் கவனம் செலுத்துவதால் வெளிநாட்டு பங்குச் சந்தைகள் பெரும்பாலும் மூடி இருக்கும். இந்திய சந்தை மட்டுமே தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டிய நிலை. எப்படியிருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

  பங்குச் சந்தை பரபரப்புக்கு இடையே மியூச்சுவல் பண்ட்களின் ஓட்டத்தை கவனிக்க தவறாதீர்கள். பல மியூச்சுவல் பண்ட்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொண்டு இருக்கின்றன. சில பண்ட்கள் டிவிடெண்ட்களை கொடுக்க துவங்கியுள்ளன.

  புதிய வெளியீடுகள் : மனாக்ஷியா என்ற கம்பெனி (முன்பு இந்துஸ்தான் சீல்ஸ் என்ற பெயரில் அழைக்கப் பட்ட) தனது புதிய வெளியீட்டை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கொண்டு வருகிறது. 1984ல் துவங் கப்பட்ட இந்த கம்பெனியின் பங்கு ரூ. 140 முதல் ரூ. 160 வரை விலையில் கொண்டு வருகிறது. க்ரே மார்க்கெட் பிரிமியம் தற்போது ரூ. 50 அளவில் உள்ளது. பிரிசிஷன் பைபஸ் என்ற கம்பெனி தனது புதிய வெளியீட்டை 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டு வருகிறது. ரூ. 140 முதல் ரூ. 150 வரை விலையில் கொண்டு வருகிறது. க்ரே மார்க்கெட் பிரிமியம் தற் போது ரூ. 45 அளவில் உள்ளது. போர்வால் ஆட்டோவின் வெளியீடு 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டு வருகிறது. விலை ரூ. 68 முதல் ரூ. 75 வரை. க்ரே மார்க்கெட்டில் பிரிமியம் தற்போது ரூ. 18. இந்த மூன்று வெளியீடுகளுமே போடத் தகுந்தவை தான். அடுத்தாண்டு துவக்கத்தில் மகேந்திரா ஹாலிடே ரிசார்ட் (ரூ. 400 கோடி), லோதா என்ற கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, தைனிக் பாஸ்கர் என்ற நிறுவனம் பங்குகளை வெளியிட உள்ளது.
  4 Comments:

  நண்பர் சுதாகர் அவர்களே! கடந்த இரண்டு பதிவுகளும் வழக்கமான பதிவுகளில் இருந்து வித்தியாசமாக இருந்தன. அதிகம் தெரிந்து கொண்டேன். நன்றி. பங்குகள் அதிகம் பரிவர்த்தனை நடைபெறுவதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? உதாரணம் IFCI. அதிக பரிவர்த்தனை காணப்படும் பங்குகள் விலை மேலே செல்லுமா?

  December 16, 2007 at 3:41 AM  

  நண்பர் பிரேம் அவர்களே, ஒரு நிறுவன பங்குகளில் அதிகமானோர் நாட்டம் காண்பிப்பதின் அர்த்தம் என்ன? அந்த நிறுவன செயல்பாடுகளில் கொண்ட நம்பிக்கை. விலையும் குறைவாக உள்ளது. அதிகமானோர் நாட்டம் காண்பிப்பதால், அந்த பங்குகளில் நிச்சயம் லாபம் பார்க்கலாம். நீங்கள் விற்க முற்படுகிறீர்கள் என்றால், அதை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். சில பங்குகளில் சிலர் நாட்டம் காட்டமாட்டார்கள். நீங்கள் விற்க முயன்றாலும், வாங்க ஆள் இல்லாமல் உங்கள் பங்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். இன்னும் நிறைய இருக்கின்றன.. நண்பரே..

  December 18, 2007 at 8:39 AM  

  ஒரு பெரிய அனுகூலம் : அதிக அளவில் பரிவர்த்தனை ஆகும் பங்கு கீழே இறங்கும்போது(நஷ்டத்துக்காவது) எப்படியாவது வித்துறலாம்.வாங்க ஆள் இருப்பாங்க.உதாரணம்:IFCI,ISPAT,ESSAROIL. சில பங்குகள் கீழே இறங்கும்போது அவ்வளவு எளிதாக விற்க முடியாது.வாங்க ஆள் இருக்க மாட்டார்க்ள.LowerCircuit-ஐ தொட்ரும்.உதாரணம்:Prakash Inds

  December 18, 2007 at 12:21 PM  

  மேலாதிக்க தகவல்களுக்கு மிக்க நன்றி சிவா அவர்களே

  December 18, 2007 at 7:43 PM  

  Post a Comment

  << Home