18.12.07
17/12/07 பங்கு சந்தை முடிவில்
நேற்று சில தவிர்க்க இயலாத காரணங்களால், என்னால் பங்குசந்தைக்கும் செல்ல இயலவில்லை. பிற்பகலில் இடும் இந்த பதிவையும் இட முடியவில்லை. சரி. இனி விடயத்துக்கு வருவோம். நேற்று எதிர் பார்த்தது போலவே,பங்கு சந்தை மிக பெரிய வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை இறங்கும் என எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், சென்செக்ஸ் 769 புள்ளிகள் கீழே இறங்கியது. நிப்டி 270 புள்ளிகள் கீழ் வீழ்ந்தது. ஆசிய பங்கு சந்தைகளிலேயே அதிக விகிதத்தில் வீழ்ந்தது இந்திய பங்கு சந்தைதான். நேற்று வீழ்ந்த பங்குகளில் (ரூ1000/- க்கும் கீழ்) சில வாங்கி வைக்கலாம். நீண்ட கால அல்லது குறுகிய கால முதலீட்டுக்கு உகந்தவை. நல்ல பங்குகளும் கூட. NIFTY SHARES: 1. SAIL - 7.55% DOWN - RS.259/- 2. NTPC - 7.60% DOWN - RS.225/- 3. VSNL - 4.64% DOWN - RS.620/- 4. BHARATIARTL - 5.91% DOWN - RS.904.80/- 5. TATASTEEL - 6.12% DOWN -RS. 823.35/- 6. RCOM - 5.68% DOWN - RS.717.5% Jr.NIFTY SHARES: 1. GMR INFRA - 7.19% DOWN - RS.224/- 2. TTML - 5.76% DOWN - RS.57.25/- 3. IDBI - 6.30% DOWN - RS.162.8/- 4. IDFC - 6.25% DOWN - RS.211.5/- OTHERS: 1. DLF - 7.71% DOWN - RS.942.9/- மேற்கண்ட பங்குகள் இன்னும் விலை இறங்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைத்து கொள்ளுங்கள். ரூ1000/- க்கு மேல் விலை உள்ள நல்ல பங்குகள் இருக்கின்றன. ஆனால், அவைகளை நான் இங்கு தரவில்லை. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/18/2007 08:04:00 AM
Hi Sudhakar,
I am in confusion. Now I have Rs.20,000. Can you guide me in which share I Invest?
In IPO or Buying a share.
நண்பர் விஜய், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில், IPO - விற்க்கு நிறைய வரவேற்ப்புகள் இருக்கின்றன. அதனால், அனைவருக்குமே IPO - வின் பொழுது shares கிடைப்பதில்லை. 1 மாதம் கழித்து நம் பணம் நம்மிடம் வந்து விடும். அதனால், மிகவும் நல்ல பங்காக பார்த்து போட்டு விடுங்கள்.. தைரியமாக Sail - ல் போடலாம். நிச்சயம் மேலே வந்து விடும். நீண்ட கால முதலீடாக கூட அதை வைத்து கொள்ளலாம்..மொத்தமாக sail - ல் போடாதீர்கள். கொஞ்சம் போடுங்கள். மீதியை மீதி பங்குகளில் போடுங்கள்..
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.. ஒரே பங்கில் அனைத்து பணத்தையும் போட கூடாது. அதனால், சில பிரிவுகளில் சில பங்குகளில் போட்டால், ஒன்றில் போனாலும், அடுத்ததில் நம் நஷ்டத்தை சரி செய்து விடலாம்.. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சுதாகர்.