21.12.07
உதவ ஆசை..ஆனால்...
வணக்கம் நண்பர்களே.. எனது வலைப்பூவுக்கு ஆதரவு அளிப்போர் என்னிக்கை தினமும் கூடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. கூடுமானவரை, அனைவரது கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறேன். அனைவரது விருப்பங்களை ஓரளவுக்காவது நிறைவேற்ற ஆசை தான். ஆனால், எனக்கு HTML - ல் அவ்வளவாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது இருக்கும் என் வலைப்பூவின் வடிவம், முழுவதும் நானே தட்டு தடுமாறி வடிவமைத்த ஒன்று. கடந்த வாரம் என் சிங்கை நண்பரிடம் உதவி கேட்டேன். இன்னும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை. அவர் என் மடலை பார்க்க வில்லை என நினைக்கிறேன். நிறைய நண்பர்கள், நான் பங்குசந்தையில் இருந்து chat - ன் மூலம் அனைவரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர். அது தற்பொழுது இயலாத காரியமாக உள்ளது. ஏனென்றால், பங்குசந்தையில் உள்ள கணனி என் சொந்த கணனி இல்லை. எனக்கு Flash - ல் அவ்வப்பொழுது வரும் பரிந்துரைகளை இட ஆசை. அது என் வலைப்பூவின் தலைப்பின் கீழ் ஓடிக்கொண்டே இருக்கும். நான் அவ்வப்பொழுது பரிந்துரைகளை மாற்றி கொண்டே இருக்கலாம். அதனால், அனைவரும் அதை பார்த்து பயண் பெறலாம். ஆனால், அதை எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு Technical person. நானும் முட்டி மோதி பார்த்து விட்டேன். சிறு புள்ளி வைத்தால் போதும், அதை நான் கோடாக போட்டு விடுவேன். அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த புள்ளி எது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர்கள் உதவினால், என் வலைப்பூவை, அனைவருக்கும் உதவும் வகையில் நான் அளித்திட தயார். sudhakar3692@gmail.com க்கு என் வலைப்பூ எப்படியிருக்க வேண்டும், அதன் HTML code எப்படியிருக்கும் என்று அனுப்பினால், அதை நான் உபயோகிக்கிறேன். எனக்கு தெரியாததை உங்களிடம் கேட்கிறேன். உதவி செய்தால், அனைவரும் பயன் பெறலாம். இல்லையேல் இப்பொழுது உள்ளது போலவே செல்வோம். நீங்கள் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் என் வலைப்பூ கண்டிப்பாக தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.. காத்திருக்கிறேன் நண்பர்களே.. உங்களிடம் இருந்து எதுவும் உதவிகள் கிடைக்கின்றதா என்று பார்ப்போம்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/21/2007 02:30:00 PM
http://www.bloggerforum.com/modules/newbb/viewforum.php?forum=2
தற்போதைக்கு இந்த சுட்டியில் தேடிக்கொண்டிருங்கள். மீண்டும் தேடி சில சுட்டிகள் கொண்டுவருகிறேன்.
மிகவும் நன்றி நண்பரே. உதவி என்று கேட்ட பொழுது நீங்கள் உதவ முன்வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேடி பிடிக்கிறேன்.
மீண்டும் மிக்க நன்றி.
<== எனக்கு தெரியாததை உங்களிடம் கேட்கிறேன். உதவி செய்தால், அனைவரும் பயன் பெறலாம். ==>
நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்?பிடிங்க இந்த ப்ளாக்கை http://tamilblogging.blogspot.com .இது உதவும்னு நினைக்கிரேன்.
உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி சிவா அவர்களே..