11.4.08
11/04/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய பங்கு சந்தையிலும் ஆப்பரேட்டர்ஸ் மிகவும் அழகாக தங்களது வேலையை காண்பித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய முன் தினம், உலக சந்தைகள் கீழ் நோக்கி இருக்க, எந்த வித காரணமும் இன்றி, ஆப்பரேட்டர்ஸ் துணையுடன் மேலே சென்றது. நேற்று, அதே ஆப்பரேட்டர்ஸ் சந்தையை மேலே கொண்டு செல்வது போல் சென்று, எல்லோரையும் ஏமாற்றி மிக விரைவாக கீழே கொண்டு வந்து விட்டார்கள்.. அவர்கள் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. நேற்று முடிவடைந்த ஐரோப்ப பங்குசந்தைகள் கீழ் நோக்கியும், அமெரிக்க பங்குசந்தைகள் மேல் நோக்கியும் உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகள் எல்லாம் பச்சையாக தெரிகின்றன. நிக்கெய் 2 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்து உள்ளது. இவற்றையெல்லாம் பார்த்து விட்டு நம் சந்தையும் மேலே போகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிற்பகலில் பணவீக்க விகிதம் பற்றிய அறிவிப்பு வெளிவரும். அதன் பின்னர் கரடிகள் தங்களது வேலையை காட்ட தொடங்கி விடுவார்கள்.. அதனால், காலையில் பங்கு சந்தை ஆரம்பத்தில் பங்குகளை வாங்கி, 11.30 மணி அளவில் கொடுத்து விட்டு, பிறகு சந்தையை வேடிக்கை பாருங்கள்.. நிப்டி Future 4825 புள்ளிகளை தாண்டும் பொழுது தாரளமாக short செய்யுங்கள். குறைந்தது 50 முதல் 75 புள்ளிகள் கீழே விழும். இன்று கீழ் கண்ட பங்குகளை வாங்கலாம்.. Steel - stocks.. like SAIL, TATASTEEL, JINDALSTEEL ,Welspun Gujarat Oil : Essar Oil, KSoil, petronet,Cairn Reliance Power எந்த பங்குகளை வாங்கினாலும், அவ்வப்பொழுது உங்களது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
10.4.08
10/04/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய பங்குசந்தை இறக்கமாக இருந்து, பின் பங்குசந்தை முடியும் தருவாயில் Steel, Banks துறையை சேர்ந்த பங்குகள் மேல் நோக்கி செல்ல, பங்குசந்தை மேல் நோக்கி முடிந்தது. நேற்று முடிவடைந்த ஐரோப்ப சந்தைகளும் சரி, அமெரிக்க சந்தைகளும் சரி கீழ்முகமாகவே முடிவு பெற்று உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளில் நிக்கேய், st times, shagai ஆகியவை கீழ் முகமாகவே இருக்கின்றன. ஹாங்செங் மட்டும் மேலும் கீழும் ஆட்டம் போடுகின்றது. நம் பங்குசந்தையை பொறுத்தவரை, இன்று கொஞ்சம் இறக்கமாகவே தன் வர்த்தகத்தை துவங்கும் என எதிர்பார்க்கிறேன். பிற்பகலில் கொஞ்சம் மேல் நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளது. அடுத்த வாரம் மீண்டும் கீழ் இறங்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், நண்பர்கள் தின வர்த்தகம் செய்வது நல்லது என நினைக்கிறேன். இன்று குறிப்பாக ஆயில் துறையை சேர்ந்த பங்குகள் நன்றாக இருக்கும். குறிப்பாக Essar Oil, Ks Oil. மேலும், குஜராத் அல்கலி மற்றும் GNFC -யும் நன்றாக இருக்கும். ONGC, EKC போன்றவையும் நன்றாக இருக்கும். அதனால், மார்கெட் ஆரம்பிக்கும் பொழுதே இந்த பங்குகளை வாங்க பாருங்கள். பிறகு லாபத்தை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
8.4.08
08/04/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றையை பங்குசந்தை உலகசந்தைகளை ஒத்து மேல் நோக்கி நகர்ந்தது. அதனால், நம்முடைய பங்குசந்தை மீளும் சாத்தியங்கள் இருப்பதாக தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள்.. நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்குசந்தை Flat & Mixed ஆக முடிவுற்றது. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகள் எல்லாம் கீழ் முகமாகவே இருக்கின்றன. இதே நிலை நமது பங்குசந்தையிலும் தொடரும். இன்று முடிந்தவரை காலையில் உங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று விட்டு, மதியம் அந்த பங்குகள் விலை குறையும் பொழுது வாங்கி விடுங்கள். இன்று Essaroil, ONGC, Gail, IRB infra போன்ற பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. Reliance Ind, Rcom, Nifty ஆகியவற்றில் short போகலாம். இன்றைய பங்குசந்தை முடிவில் குறைந்தது சென்செக்ஸ் 100 ~ 200 புள்ளிகள் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
7.4.08
07/04/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே உயர்ந்து வரும் பணவீக்க விகிதம் கடந்த வார வெள்ளிக்கிழமை சந்தையை மேலும் கீழ் நோக்கி செல்ல வைத்தது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பங்குசந்தையை விட்டு விலகியிருப்பதே மேல் என்று தோன்றுகின்றது. வரும் வாரங்களின் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை வருகின்றது. அதை வைத்து பங்குசந்தை சிறிது மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் நிப்டி 5800 - ஐ தாண்டி நிலை கொண்டால் மட்டுமே, நாம் எதையும் உறுதியாக சொல்ல இயலும். எது எப்படியிருப்பினும், future - ல் Long செல்வதை தவிர்க்கவும். பங்கு விலைகள் ஏறுவது போல் ஏறி, பின் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். Reliance Ind, RNRL, RCOM, Axisbank, PNB போன்ற பங்குகள் விலை கீழே வர வாய்ப்பு உள்ளது. Essar oil- ன் பங்குகள் ரூ229/- தாண்டும் பட்சத்தில் அதை வாங்கலாம். நன்றாக மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகள் (சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான்) மேல் நோக்கியே இருக்கின்றன. ஆனால், மிகப்பெரிய அளவில் ஏறவில்லை. நம் பங்குசந்தையும் ஓரளவுக்கு அதையே பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், நண்பர்கள் அதிக லாபம் எதிர் பார்க்காமல், குறைந்த லாபத்தில் வெளியே வர நினைத்தால், இன்று உள்ளே நுழையுங்கள். இல்லையேல், அமைதியாக இருங்கள். உங்கள் பணம் உங்களிடம் பத்திரமாக இருக்கட்டும். பிறகு முதலீடு செய்து கொள்ளலாம் Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |