15.2.08
15/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. தொடந்து சில நாட்களாகவே நமது இந்திய பங்குசந்தை உலக பங்குசந்தைகளையே சார்ந்து இருக்கிறது என்பது நேற்றும் நிரூபணம் செய்தது. நேற்றைய சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 200 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தன. ஆனால், Volume மிகவும் குறைவாக இருப்பது வருந்ததக்க விடயம். நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்குசந்தைகளும் சரி, இன்று காலை வர்த்தகத்தை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளும் சரி, கிட்டத்தட்ட 1.5% க்கும் மேல் கீழ் இறங்கியிருக்கின்றன. கண்டிப்பாக இது நமது இந்திய சந்தையை பாதிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. இன்றைய சென்செக்ஸ் கிட்டத்தட்ட 200 ~ 300 புள்ளிகள் கீழ் முகமாக தனது வர்த்தகத்தை தொடங்கும் என கருதுகிறேன். இன்றைய பங்குசந்தையில் Sensex 17250 ~ 17900 க்குள்ளும் , Nifty 4975 ~ 5250 க்குள்ளும் இருக்கும் என்று நினைக்கிறேன். சந்தை நிச்சயம் மேடு பள்ளமாகத்தான் இருக்கும். முடிந்தவரை புதியதாக எந்த Long postion - ம் எடுக்காதீர்கள். முடிந்தவரை கையில் இருக்கும் பங்குகளை கொடுத்து விட்டு வேடிக்கை பாருங்கள். காரணம் சந்தை இன்னும் ஒரு நல்ல அஸ்திவாரத்தை பெறவில்லை என்பதே உண்மை. சென்செக்ஸ் 18500 தாண்டியபிறகே, சந்தையில் நுழைவது நல்லது என நினைக்கிறேன். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
14.2.08
14/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்ர்களே நேற்றைய பங்கு சந்தை நான் எதிரிபார்த்தது போலவே மேல் நோக்கி இருந்தது. சொல்ல போனால் உலக சந்தைகளை சார்ந்தே நமது பங்குசந்தையும் சென்று கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை. நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்கு சந்தைகளும், ஐரோப்ப பங்குசந்தைகளும் மேல் நோக்கியே முடிவுற்று இருந்தன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளும் மிகவும் நன்றாக மேலே சென்று கொண்டு இருக்கின்றன. (World Mkt Status @ 9.25am :DOW(+179),NASDAG(+54),HANGSENG(+748),Nikkei(+389),STRIGHTS TIMES (+81)Shangai(+44).All Europe Markets UP & Flat Closing)) அதனால் நம் இந்திய பங்குசந்தையும், குறைந்தது 200 முதல் 250 புள்ளிகளுக்கு மேல் தன் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்று Tata Steel கிட்டத்தட்ட ரூ50/- ஏறியது. ரிலையன்ஸ் பங்குகள் எல்லாம் வீழ்ச்சி கண்டன. இன்று வங்கி துறை சார்ந்த பங்குகளும், Realty துறை பங்குகளும், Metal பங்குகளும் நன்றாக இருக்கலாம். ONGC வாங்குங்கள். RNRL, Essar Oil மற்றும் சிமெண்டு துறை பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். REL மற்றும் RNRL, Essar Oil, மற்றும் சிமெண்டு துறை சார்ந்த பங்குகள் இன்னும் விலை இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல். நிப்டியில் 4875 என்பது supporting level ஆக இருக்கும். அதையும் தாண்டி இறங்கினால், நான் முன்பு சொன்னது போல் 4800 என்பது அடுத்த supporting level. நிப்டி 5150 புள்ளிகளை தாண்டி இன்றைய பங்கு சந்தை முடிவுபெறுமானால், நாளையும் பங்கு சந்தை ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் நேற்று ஒரு பதிவு இட்டு இருந்தேன். எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று. நீண்ட கால முதலீட்டுக்கு (குறைந்த பட்சம் 6 மாதம்) அந்த பங்குகளை வாங்கி போடலாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
13.2.08
முதலீடு செய்ய தகுந்த பங்குகள்
வணக்கம் நண்பர்களே. கடந்த ஒரு மாதத்தில் (11/01/2008) முதல் இன்று வரை (13/02/2008) மிகவும் இறக்கம் கண்ட பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த பங்குகளாகும் கீழ் கண்டவை. ஜீன் மாதத்திற்க்குள் நிச்சயம் 50 விழுக்காடு லாபத்தை அள்ளித்தரும் என்று நம்புகிறேன் முதலில் இருப்பது நிறுவனத்தின் பெயர். அடுத்து இருப்பது இன்றைய விலை, அடைப்புக்கு குறிக்குள் இருப்பது போன மாதத்தின் விலை, அடுத்து இருப்பது வீழ்ச்சி விகிதம். Nifty Stocks: 1. REL - Rs.1555.1 (2485.75) -37.44% 2. RPL - Rs.144.40 (220.30) -34.45% 3. RCom - Rs.558.45 (792.30) -29.52% 4. National Alu - Rs.327.80 (461.20) -28.92% 5. ONGC - Rs.944.15 (1302.10) -27.49% 6. Siemens - Rs1469.70 (2015.10) -27.07% 7. Sterlite - Rs733.85 (1021) -28.12% 8. Unitech - Rs.354.30 (519.70) - 31.83% 9. VSNL (Tata Communication) - Rs469.65 (675.20) -30.44% 10. NTPC - 187.80 (272.25) -31.02% Jr.Nifty Stocks: 1. JPASSOCIATION - Rs.265.20 (445) - 40.40% 2. GMR infra - Rs147.25 (225.2) -34.61% 3. IFCI - Rs.56 (85.40) - 34.43% 4. KotakBank - Rs/818.10 (1233.65) -31.59% 5. PFC - Rs.150.70 (260.90) -42.24% 6. TTML - Rs.33.50 (57.20) -41.43% 7. AshokLeyland - Rs34.35 (50.30) -31.71% 8. Relince Capital - Rs1819.25 (2770.25) -34.43% 9. Aditya Birla - 1709.25 (2368) - 27.82% Others: 1. Omaxe - Rs.247.55 (519.65) -52.36% 2. Ansal Prop - Rs.194.25 (388.4) - 49.99% 3. AdlabsFilms - Rs.795.45 (1599.25) -50.26% 4. Wire & Wire - Rs41.90 (83.00) -49.52% 5. NIIT Tech - Rs.114.70 (218) -47.39% 6. Lanco Infra - Rs.419.95 (770.90) -45.55% 7. JP Hydro Power - Rs67.30 (123.45) - 45.48% Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
13/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை மேல் நோக்கி என்று செல்லும் எதிர்பார்த்தேன். ஆனால், தேவையில்லாத புரளிகளாலும், பயத்தாலும் பங்கு சந்தை மேல் நோக்கி செல்ல இயலவில்லை. நேற்று வங்கித்துறை சார்ந்த பங்குகளின் index மேல் நோக்கி இருந்தது கொஞ்சம் பங்கு சந்தைக்கு ஆறுதல் அளித்தது. நேற்றைய ஐரோப்ப பங்குசந்தைகள் கிட்டத்தட்ட 3 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்து முடிவுற்றது.அமெரிக்க சந்தைகள் நேற்று ஒரு கட்டத்தில் 2 விழுக்காடு வரை மேலே சென்றன. ஆனால், சந்தை முடிவில் டோஜென்ஸ் 1 விழுக்காடு உயர்ந்தும், நாஸ்டாக் ஏற்றம் இறக்கம் இல்லாமல் நடுநிலையாகவும் முடிவுற்றது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகள் நன்றாக மேல் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.நிக்கெய் 180 புள்ளிகள் உயர்ந்தும், ஹாங்செங் 488 புள்ளிகள் உயர்ந்தும், சிங்கப்பூர் பங்கு சந்தை 60 புள்ளிகள் உயர்ந்தும் காணப்படுகின்றன. நேற்றைய உலக சந்தைகளின் முடிவுகளும், இன்றைய ஆசிய பங்குசந்தைகளின் முடிவுகளும் நம்பிக்கை தரும் வகையாகவே இருக்கின்றன. அதன் விளைவாக, இன்றைய நமது பங்கு சந்தை 250 ~ 300 புள்ளிகளுக்கும் மேலாகவே தனது வர்த்தகத்தை ஆரம்பிக்கும் என கருதுகிறேன். அதன் பிறகு அது உலக சந்தைகளையே நாடி இருக்கும். தற்பொழுதைய சூழ்நிலையில், அதிகமானோர் புரளியை கிளப்பி விடுவதும், அதனால் பயந்து மக்கள் தங்கள் பங்குகளை விற்பதும் வாடிக்கை ஆகி விட்டது. ஒரு சாரார் சொல்கிறார்கள் சென்செக்ஸ் 14000 - த்தை தொட வாய்ப்பு உள்ளதாக. எது உண்மையோ தெரியாது. ஆனால், நிப்டி சரியும் பட்சத்தில் 4400 என்பது strong supporting level ஆக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இன்றைய நிப்டி 4900 ~ 5150 க்குள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்றைய நிப்டி 5150 என்ற நிலையை தொட்டு, அங்கேயே முடிவுற்றால், நாளைய பங்குசந்தையும் ஓரளவுக்கு நம்பிக்கை தருவதாகவே இருக்கும். இந்த வாரம் முழுவதும் பங்குசந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பதே மேல். நீங்கள் வாங்கிய பங்குகள் லாபம் தரும் விலையில் இருந்தால், தயவு செய்து விற்று விடுங்கள். எந்த காரணம் கொண்டும் யோசிக்க வேண்டாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
12.2.08
12/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்குசந்தை நான் எதிர்பாத்தது போலவே இருந்தது எனலாம். ரிலையன்ஸ் பவர் ரூ530 க்கு பட்டியல் இடப்பட்ட பொழுது, மிகவும் ஏமாந்து போனவர்கள் அதிகம் பேர். எதிர் பார்த்து போலவே அந்த பங்குகள் நிறைய கை மாறின. நிப்டி 4800 புள்ளிகள் வரை சாய்ந்து பின் மேல் ஏறியது. என்னை பொறுத்த வரை இந்த வார பங்கு சந்தையை தவிர்ப்பது நலமே. அத்தனை சுகம் இல்லை. நிப்டி 4400 புள்ளிகள் strong supporting level ஆக இருக்கும். அதையும் தவறும் பட்சத்தில் எதுவும் சொல்வதற்க்கில்லை. இன்றைய பங்குசந்தை 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், நாம் பங்குசந்தை பக்கம் தலை காட்டாமல் இருப்பது நலம். இந்திய நண்பர்களுக்காக இலவச குறுந்தகவல் (Free SMS) மூலம் தினமும் பங்கு சந்தை குறிப்புகளை அனுப்புவதற்க்காக ஏற்பாடு செய்து உள்ளேன். நம் நண்பர்கள் அவர்களது தொலைபேசி எண்ணை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பி வையுங்கள். உங்கள் எண்ணையும் அதில் சேர்த்து விடுகிறேன். அல்லது நீங்களே http://www.smsgupshup.com/ க்கு சென்று Daily Market Tips என்ற நம் குரூப்பில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
11.2.08
11/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே தொடர்ந்து வீழ்ந்து வரும் இந்திய பங்குசந்தை, உலக பங்கு சந்தை.. எப்பொழுதுதான் மேலே செல்லும் என அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் இது. இந்த வாரமாவது பங்கு சந்தை மேலே போகுமா என்றால், இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. ஒரு நாள் ஏறுவது போல் ஏறும், பிறகு மீண்டும் இறங்கும். மிகவும் மேடு பள்ளம் நிறைந்ததாகவே இந்த வார பங்கு சந்தை இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்படும் ரிலையன்ஸ் பவர் அவ்வளவாக எதிர்பார்த்த விலை செல்லாது என்றே தோன்றுகிறது. இன்று அதிகமானோர் ஓரளவுக்கு லாபத்துடன் விற்க முயல்வர் என்றே தோன்றுகிறது. காரணம் பணம் பற்றாகுறை. ரூ600 க்கு போனாலே நிறைய பங்குகள் விற்கபடும் என்பது கணிப்பு. யாருக்காவது ரிலையன்ஸ் பவர் பங்குகள் கிடைத்திருந்தால், ரூ800/- க்கு போனால் விற்று விடலாம். பங்கு சந்தை ஆரம்பத்திலேயே விலையை போட்டு விடுங்கள். யாருக்கு தெரியும், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், விலை போய் விடும். பிறகு அது 600/- க்கு கீழ் வரும் பொழுது வாங்கி விடுங்கள்.. இன்றைய ஆசிய பங்குசந்தைகளும் வீழ்ச்சி கண்டு உள்ளது. நமது இந்திய பங்கு சந்தையும் அதை சார்ந்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் இந்த வார பங்குசந்தை முழுவதும் அவ்வளவு நம்பிக்கை தரும் வகையில் இருக்காது என்பதே உண்மை. இந்த வாரத்தில் நிப்டி 4800 ~ 5300 க்குள் இருக்கும் என்பது என் கணிப்பு. சென்செக்ஸ் 16500 ~ 17500 க்குள் இருக்கும் என்பது என் கணிப்பு. யாராவது future - ல் Long - ல் இருந்தால், வெளியே வருவது உத்தமம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |