1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    7.12.07
    07/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்தது போலவே மேல் நோக்கி தன் வர்த்தகத்தை தொடங்கியது. பிற்பகலில் லாபத்தில் உறுதி செய்யும் நோக்கில் பங்கு சந்தை தொய்வடையும் என்று பார்த்தால், காலையிலேயே அது தொடங்கி விட்டது. இன்றைய சந்தை மிகவும் மேடு பள்ளமாக இருந்தது என்றால் அது மிகையில்லை. மதியம் 3.00 மணிக்கு மேல், பங்குகளை அதிகமானோர் வாங்க ஆர்வம் காட்டிய மாதிரி தெரிகிறது. இன்று வங்கி பங்குகள் நன்றாகவே இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நான் பரிந்துரைத்த இரண்டு வங்கிகளும் கீழ் நோக்கியே இருந்தன என்பது உண்மை. ஆனால், அவை இரண்டும் நன்றாக மேலே செல்லும் என்பதில் சிறுதும் நம்பிக்கை தளரவேண்டாம். நான் இன்று காலை சொன்னது போல், பங்குசந்தை 20300 புள்ளிகளை தாண்டும் வரை நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். நான் சொன்னதின் காரணத்தை இன்றைய பங்குசந்தை நன்றாக உணர்த்தியது.

    சரி, இன்று பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை பார்ப்போம்.

    குறுகிய கால பரிந்துரைகள்:
    1. Centurion Bank --- Tgt 60 CMP 48.70 - இன்று அதன் விலை 55.75
    2. Nicolas Piramal - Tgt 450 CMP 323.95 இன்று அதன் விலல 319.15
    3. HTMT Global - Tgt 800 CMP 542 - இன்று அதன் விலை 603.40
    3. Siemens - Tgt 2100 CMP1943.75 - இன்று அதன் விலை 1934.90

    இன்றைய பரிந்துரைகள்:
    1. GTL - ரூ2.35 விலை இறங்கியுள்ளது.
    2. Syndicate Bank - ரூ3.75 விலை இறங்கியுள்ளது
    3. Denabank - ரூ1.45 விலை இறங்கியுள்ளது
    4. HDFC - ரூ29.85 விலை ஏறியுள்ளது
    5. Suzlon - ரூ5.10 விலை இறங்கியுள்ளது
    6. Bharati Airtel - ரூ18.10 விலை ஏறியுள்ளது

    இன்று பரிந்துரைத்த பங்குகளில் அதிகமானவை இறக்கத்திலேயே உள்ளது. யாராவது வாங்கியிருந்து விற்காமலிருந்தால், வைத்திருங்கள். நிச்சயம் மேலே வரும். நான் அதை உங்களுக்கு சில நாட்களில் தெரியபடுத்துகிறேன்.
    Syndicate bank, Dena bank இரண்டுக்கும் நல்ல நியூஸ் உள்ளது.

    குறுகிய கால முதலீட்டில் பரிந்துரைத்த பங்குகள் இரண்டு இன்று நன்றாக போயின. centurion bank - அடுத்த வாரம் ரூ58 முதல் 60 வரும் பொழுது லாபத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    07/12/07 இன்றைய பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.

    கடந்த இரு தினங்களாக பங்குசந்தை மேல் நோக்கியே தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 20000 புள்ளிகளை நெருங்கி விட்டது. நேற்றைய உலக பங்கு சந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மேல் நோக்கியே இருக்கின்றன. நம் பங்குசந்தையும் அதை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் பிற்பகலில் கொஞ்சம் பங்குசந்தை முன்னேற்றத்தில் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. இன்று 20300 புள்ளிகளை தாண்டிவிட்டால், ஓரளவுக்கு தைரியமாக இருக்கலாம். அதுவரை கவனமாக இருங்கள்..

    குறுகிய கால பரிந்துரைகள்:
    1. Centurion Bank --- Tgt 60 CMP 48.70
    2. Nicolas Piramal - Tgt 450 CMP 323.95
    3. HTMT Global - Tgt 800 CMP 542
    4. Siemens - Tgt 2100 CMP1943.75

    இன்றைய பரிந்துரைகள்:
    1. GTL Ltd
    2. Syndicate Bank
    3. Denabank
    4. HDFC
    5. Suzlon
    6. Bharati Airtel

    முடிந்தால், இன்றும் பங்குசந்தையில் இருந்து பரிந்துரை செய்கிறேன்
    From Market: 10.10am Can buy IDEA & Indusbank
    From marketL market under bit volatile, so, please very carefull & pl.wait
    From market:12.05pm believe bank stocks will go up.. watch..
    From Market: 1.53pm: Centurion bank CMP53.40 (10% up)

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6.12.07
    06/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்ததை போலவே காலை மேல்நோக்கி வர்த்தகத்தை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 20000 புள்ளிகளையும், நிப்டி 6000 புள்ளியையும் தாண்டி மேலே செல்ல ஆரம்பித்தன. ஆனால், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிறகு 3 மணி போல், மேல் இருந்த பங்குசந்தை கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நேற்றைய புள்ளிகளைவிட கீழே சென்றது. ஆனால், சற்று சுதாரித்து, பின் மீண்டும் மேலே வர ஆரம்பித்தது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 19,795.87 (+57.80 புள்ளிகள் அதிகம்) மற்றும் நிப்டி 5,954.70 (+14.70 புள்ளிகள் அதிகம்) என்ற நிலையில் முடிவு பெற்றன.

    சரி, இன்று பரிந்துரைத்த பங்குகளில் செயல்பாட்டை பார்ப்போம். இன்று பரிந்துரைத்த பங்குகளில் சில உயர்ந்தன. சில கீழ் இறங்கின. மேலே செல்லும் என தகவல்கள் சொன்ன Metal Index கீழே சென்று விட்டன. அதனால், Hindalco கீழே சென்று விட்டது. ஆனால், powergrid - க்கு நல்ல News உள்ளது. ஏன் கீழே இறங்கியது என்று புரியவில்லை.

    1. Power Grid - Rs.2.85 இறங்கியது. (அதிகபட்சமாக ரூ8.55 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ11.30 கீழ் இறங்கியது).
    2. NTPC - Rs.0.10உயர்ந்தது. (அதிகபட்சமாக ரூ8.65 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8.55 கீழ் இறங்கியது).
    3. Hindalco - Rs.6.40 இறங்கியது. (திறந்த விலையே அதிகபட்சமாக ரூ8.80 இருந்தது. பின் அங்கிருந்து ரூ15.20 கீழ் இறங்கியது).
    4. SBIN - Rs.11.05 உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ52.30 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ41.25 கீழ் இறங்கியது).
    5. ICICI - Rs.36.65உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ55.65 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ19.00 கீழ் இறங்கியது).

    இன்று பங்குசந்தையில் இருந்து SYNDICATE BANK வாங்க சொல்லியிருந்தேன். ஆனால், அது விலை இன்று இறங்கியுள்ளது. நான் கூட Future - ல் வாங்கியுள்ளேன். ஆனால், அது நாளையோ அல்லது அடுத்த வாரமோ விலை ஏறிவிடும். நேற்று பரிந்துரைத்த செம்பால்பெர்டிலைசர் இன்று தலைகால் புரியாமல் விலை ஏறியது.

    அதனால்,மீண்டும் சொல்கிறேன், நான் பரிந்துரைக்கும் பரிந்துரைகள் சில சமயம் கீழே இறங்கும். ஆனால், அவை சில நாட்களில் மேலே பறந்துவிடும். அதனால், பொறுமையுடன் இருந்தால், லாபம் நிச்சயம்.

    நீண்ட கால முதலீட்டில், நான் UNIPLY என்னும் பங்கை பரிந்துரைத்து இருந்தேன். அது இன்று கிட்டத்தட்ட நான் சொன்னவிலையை தொட்டு விட்டது. நாளை உங்களிடம் அந்த பங்குகள் இருந்தால் விற்று விடுங்கள்.

    இன்று லாபம் அடைந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    06/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய உலக பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக மேல் நோக்கி நகர்ந்துள்ளன. இவை இன்றைய ஆசிய பங்குசந்தையில் நன்றாகவே பிரதிபலிக்கின்றன. நம் இந்திய சந்தையிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கும் என கருதுகிறேன்.
    இன்றைய பங்கு சந்தை மேல் நோக்கியே தன் வர்த்தகத்தை தொடங்கும். மிகவும் நன்றாக இருக்கும். இப்பொழுதுதான், முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விலை நன்றாக ஏறி கொண்டு இருக்கும் பொழுது வாங்கி விட்டு, பின்னர் பங்கு சந்தை விழுந்து விட்டால், நாம் வாங்கிய விலை வர மீண்டும் சில நாட்கள் பிடிக்கும். அதனால், மிகவும் கவனத்துடன் நல்ல நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும்.
    மீண்டும் சொல்கிறேன், தின வர்த்தகர்கள் தயவு செய்து அடிகடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரிந்துரைகள்:
    1. Power Grid
    2. NTPC
    3. Hindalco
    4. SBIN
    5. ICICI

    மற்ற பரிந்துரைகளை, பங்குசந்தையில் இருந்து தரமுயலுகிறேன்.

    From Market: 11.00 can buy Syndicate bank in Future now..CMP119 try to come out @122/-
    From Market: Anybody have ChambFert (yesterday told to buy) it's flaring up..CMP88.80
    From Market: ICICI BANK(1194)-Close above 1195 will Target 1275 in 1-2 Days.IDEA(129.75)- Close above 130 will Target 145 in next 2-3 Days.Keep a Watch.
    From Market: please those have Essar Steel and book profit
    From Market:Delivery buy in Cash & Future Crompton Greavs - CMP440, Tgt 480, SL420
    From Market: 12.24pm Delivery buy in Cash & Future Nicolas Piramal- CMP329.60, Tgt 360
    From Market: 3.00pm Grab 25 to 100 lots of GTL immed ... huge huge explosion on cards .. Leading FII has picked up in equity in last 2 days ... Promoters bought back equity at 300 per share ... Stock will cross 350 mark in coming days ...!!! Instant jump upto 290 - 300. Life ka jackpot ... catch it ...!!!

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    5.12.07
    வேண்டுகோள்
    நண்பர்களே,
    யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்பதற்க்கு இணங்க, நான் இந்த வலைப்பூவை தொடங்கியுள்ளேன். உண்மையாலுமே, நான் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அதற்காக என் நன்றியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
    என் மிக நெருங்கிய நண்பர் என் மேல் கொண்ட அன்பினால் சொன்னார், நான் இது போல் பரிந்துரைகள் செய்வதால், நான் ஆபத்தில் எதுவும் மாட்டி கொள்ள கூடாது என்று. அதனால், என் வலைப்பூவில் Disclaimer notes - ஐ சேர்த்து உள்ளேன். அதை அனைவரும் பாருங்கள். அதற்க்கு கட்டுப்பட்டு, என் பரிந்துரைகளை எடுத்து கொள்ளுங்கள். எனக்கு உங்களை யார் என்று தெரியாது. ஆனால், உலகத்தில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வலைப்பூவை தொடங்கினேன். பணம் சேர்க்கும் நோக்கில் அல்ல. நான் கடந்த கடந்த சில மாதங்களாக முத்தமிழ் மன்றத்தில் இந்த பரிந்துரையை பதிந்து வருகிறேன். ஆனால், நான் இந்த வலைப்பூவை தொடங்க எனக்கு முன்னொடி என்று சொன்னால், பங்குவணிகம் என்ற வலைப்பூவைத்தான் சொல்வேன். அவருடைய தன்னலமற்ற சேவையே,என்னையும் இப்படி ஒரு வலைப்பூவை உருவாக்க சொன்னது.
    என்னைவிட பங்குவர்த்தகத்தில் திறமையானவர்கள் நிறைய பேர் இங்கு உள்ளார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன். அவர்களோடு, நானும் சேர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. உங்கள் அனைவரது ஒத்துழைப்போடும் என் பரிந்துரைகள் தொடரும் என நம்புகிறேன்.

    நட்புடன்
    சுதாகர்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    05/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை நான் எதிர்பார்த்திற்க்கு நேர் எதிர்மறையாக, சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் தன் வர்த்தகத்தை துவங்கியது. இதுதான் நம் இந்திய பங்கு சந்தை. உலக பங்குசந்தைகள் கீழ் நோக்கி இருக்க, நம் பங்குசந்தை மேல் நோக்கி வர்த்தகத்தை ஆரம்பித்தது. நம்மை பார்த்து, மற்ற ஆசிய சந்தைகளும் கீழ் இருந்து மேலே சென்று விட்டன. சந்தோசமான விடயம். இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 208.57 புள்ளிகள் உயர்ந்து 19738 எனவும், நிப்டி 81.65 புள்ளிகள் உயர்ந்து 5940 எனவும் முடிவு பெற்றன.
    இன்றும் நான் பங்கு சந்தையில் இருந்தபடி, சில பரிந்துரைகளை கொடுத்தேன். எல்லாம் நன்றாக விலை போயின. நேற்று பரிந்துரைத்த IDBI இன்று விலை ஏறியது. ஒரு நாளுக்கு முன் பரிந்துரைத்த GAIL - இன்று ரூ40 க்கும் மேல் ஏறியது.நேற்று ரூ13 ஏறியது. அதனால், நான் பரிந்துரைக்கும் பங்குகளை எந்த காரணம் கொண்டும் நஷ்டத்துக்கு விற்காதீர்கள். பொறுமையுடன் இருங்கள்.
    சரி, இன்று நான் பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

    1. HCC --Rs.7.60உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ10.40 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ2.80 கீழ் இறங்கியது).
    2. BPCL-- Rs.10.10உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ15.45 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ4.35 கீழ் இறங்கியது).
    3. DLF---Rs.6.80உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ9.80 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.00 கீழ் இறங்கியது).
    4. SESAGOA---Rs.18.55இறங்கியது. (அதிகபட்சமாக ரூ72.35உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ90.85 கீழ் இறங்கியது). SL போட்டு இருந்தால், நிச்சயம் லாபம் தான்..
    5. GMR Infra--.Rs.4.15உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ7.35 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.20 கீழ் இறங்கியது).
    6. RNRL---Rs.6.40உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ8.70 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ2.30 கீழ் இறங்கியது).
    7. JP Associates---Rs.14.95உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ65.00 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ50.05 கீழ் இறங்கியது).

    From Market: 9.55am: can buy today Bata, Sail, AirDeccan, RNRL, GMR infra
    From Market: 10.50am: buy ChamblFert
    From Market: 11.57am - Delivery in cash.....Buy Neyvelli Lignite - Tgt 264~268
    From Market:12.35pm can buy both in Cash & Future - IDBI - Target 190
    From Market: 12.45 Buy Union bank in Future now.. Tgt 200+
    From Market:12.58pm: Bata Flaring up.. now 274.50, Union bank Rs5+ up

    பங்குசந்தையில் இருந்து நான் கொடுத்த தகவல்கள் எல்லாம் நன்றாக விலை போயின. நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை. குறிப்பாக Future - ல் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

    லாபம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    நான் பங்குசந்தையில் இருந்து கொடுக்கும் பரிந்துரைகளை எத்தனை நண்பர்கள் கவனிக்கிறார்கள் என தெரிந்தால், சந்தோசம் அடைவேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    05/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    நேற்று முடிவுற்ற உலக பங்குசந்தைகள் அனைத்தும் கீழ்முகமாகவும், இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் கீழ் நோக்கியும் இருக்கின்றன. இது நிச்சயம் நம் சந்தையிலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.

    இன்று காலை, சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் கீழ் இறங்கி தன் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். இன்று பங்கு சந்தை நிச்சயம் மேடு பள்ளம் கொண்டதாக இருக்கும்.

    பங்கு சந்தை கீழே செல்லும் பொழுது கீழே கண்ட பங்குகளை வாங்குங்கள். இவை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளன.

    இன்றைய பங்குசந்தை கீழ் முகமாகவே தன் வர்த்தகத்தை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தின வர்த்தகர்கள் மீகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
    Stop Loss போட்டு, அவ்வபொழுது லாபத்தை எடுக்க பாருங்கள்.

    Tips: இறங்கும் சந்தையில், உங்களிடம் இருக்கும் பங்குகளை கொடுத்து (Short), அன்றே அதை கீழே செல்லும் பொழுது வாங்க முயலுங்கள். லாபம் பார்கலாம்.

    இன்றைய பரிந்துரைகள்

    1. HCC
    2. BPCL (Tgt 470, SL404, CMP421)
    3. DLF
    4. SESAGOA
    5. GMR Infra
    6. RNRL
    7. JP Associates

    From Market: 9.55am: can buy today Bata, Sail, AirDeccan, RNRL, GMR infra
    From Market: 10.50am: buy ChamblFert
    From Market: 11.57am - Delivery in cash.....Buy Neyvelli Lignite - Tgt 264~268
    From Market:12.35pm can buy both in Cash & Future - IDBI - Target 190
    From Market: 12.45 Buy Union bank in Future now.. Tgt 200+

    From Market:12.58pm: Bata Flaring up.. now 274.50, Union bank Rs5+ up

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    4.12.07
    4/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்று காலை சென்செக்ஸ் 130 புள்ளிகள் கூடுதலாக தன் வர்த்தகத்தை தொடங்கியது. நான் பரிந்துரைத்தது போலவே மதியம் 2.15 வரை கிட்டத்தட்ட மேல் நோக்கி ஆனால், மேடு பள்ளம் நிறைந்ததாக சந்தை இருந்தது. அதன் பிறகு ஐரோப்பிய சந்தைகள் கீழ் நோக்கி செல்வதை கண்டு, நம் பங்கு சந்தை ராக்கெட் வேகத்தில் கீழ் சென்றது. ஓரளவுக்கு தாக்கு பிடித்து சென்செக்ஸ் 74 புள்ளிகள் கீழ் இறங்கிய நிலையில் இன்றைய சந்தை முடிவு பெற்றது.

    இப்பொழுது உள்ள நிலையில், 74 புள்ளிகள் என்பது ஒன்றுமே இல்லை. கிட்டத்தட்ட FLAT தான்.
    நான் இன்றைய பங்குசந்தையின் ஊடே, நம் நண்பர்களுக்காக, பங்கு சந்தையில் இருந்து சில பரிந்துரைகளை அளித்தேன். இதை எத்தனை நண்பர்கள் கவனித்தார்கள் என தெரியவில்லை. கவனித்து இருந்தால், நிச்சயம் லாபம் அடைந்திருக்கலாம். முடிந்தவரை நான் சந்தையில் இருந்து அவ்வப்பொழுது வரும் பரிந்துரைகளை தருகிறேன் (நீங்கள் விரும்பினால்).
    சரி. இன்று காலை நான் பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாட்டை பார்ப்போம்..

    AIR DECCAN - Rs.18.20 உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ33.80 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8 கீழ் இறங்கியது).
    IFCI- ரூ2.45 இறங்கியது (அதிகபட்சமாக ரூ1.70 ஏறி, பின் ரூ4.15 இறங்கியது)
    FEDERAL BANK -
    ரூ5.95 இறங்கியது (அதிகபட்சமாக ரூ7.50 ஏறி, பின் ரூ13.45 இறங்கியது)
    PTC - ரூ2.00 இறங்கியது (அதிகபட்சமாக ரூ2.75 ஏறி, பின் ரூ4.75 இறங்கியது)
    Siemens - ரூ21 ஏறியது. (அதிகபட்சமாக ரூ86.15 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ65.15கீழ் இறங்கியது). கொடுத்த Target விலையை கிட்டத்தட்ட தொட்டு விட்டது.
    L & T - ரூ55.45 ஏறியது. (அதிகபட்சமாக ரூ101 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ45.55 கீழ் இறங்கியது). கொடுத்த Target விலையை விட அதிகமாகவே சென்று வந்து விட்டது.

    RCom - ரூ1.00 ஏறியது. (அதிகபட்சமாக ரூ12.60 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ11.60 கீழ் இறங்கியது).
    IVRCL Infra - ரூ14.90 ஏறியது. (அதிகபட்சமாக ரூ18.05 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.15 கீழ் இறங்கியது). Target 504 - ஐ தொட்டு விட்டது
    DLF - ரூ2.60 விலை இறங்கியது (அதிகபட்சமாக ரூ29.15 ஏறி, பின் ரூ31.75 இறங்கியது)
    TATA TEA- ரூ63.10 விலை ஏறியது (அதிகபட்சமாக ரூ18.05 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.15 கீழ் இறங்கியது).

    இன்று பரிந்துரைத்த பங்குகளில், நான்கு மட்டும் நேற்றைய விலையை விட கீழே சென்று உள்ளன. அதில் DLF - 29.15 விலை ஏறிய பின்னரே இறங்கியுள்ளது. மேலும், Siemens, IVRCL infra, L & T அகியவை கொடுத்த Target விலையை தொட்டு விட்டன.

    மேலும் IFCI, DLF, PTC, FEDERAL Bank ஆகிய பங்குகளை வாங்கி, விற்காமல் வைத்திருப்பவர்கள், நஷ்டத்துக்கு விற்க வேண்டாம். ஒரு வாரம் வைத்திருங்கள். அவை மேலெ சென்று விடும்.

    நேற்று பரிந்துரைத்த Gail - பங்கு இன்று கிட்டத்தட்ட ரூ13 விலை கூடியது. இதை யாராவது கவனித்தீர்களா?
    மேலும், இன்று online - ல் சில பரிந்துரைகள் கொடுத்தேன். அதில் IDBI - வாங்க சொல்லி இருந்தேன். அது ஏறாமல் அப்படியே நிற்க்கிறது. நாளை காலை பங்கு சந்தை நன்றாக திறந்தால், அது பறந்து விடும். கவலை வேண்டாம்.

    உங்களிடம் இருந்து வரும் வரவேற்ப்பை பொறுத்தே, பங்கு சந்தையில் இருந்த கொண்டே ONLINE - ல் , அவ்வப்பொழுது வரும் பரிந்துரைகளை தரலாம் என உள்ளேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    FUTURE - க்கு தனியாக 2 பரிந்துரைகளும், Online -ல் இருந்து ஒரு பரிந்துரையும் தந்தேன். அவை அனைத்தும் லாபத்தை தந்தன.

    லாபம் பார்த்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    4/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    இன்றைய பங்கு சந்தை மற்றும் பரிந்துரைகளை பார்ப்போமா?

    நேற்றைய அமெரிக்க பங்கு சந்தைகள், ஐரோப்ப பங்குசந்தைகள் கீழ் முகமாக சென்று உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளும் ஆரம்பத்தில் அதையே பிரதிபலித்தன. ஆனால், அவை தற்பொழுது மேலே நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டன. தற்பொழுது, இந்திய அரசியலில் எதுவும் குழப்பம் தரும் நிகழ்வுகள் இல்லாததால், நம் பங்கு சந்தையும் உலக பங்குசந்தைகளை சார்ந்தே செல்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.

    இன்றைய பங்கு சந்தை மேல் நோக்கிய, ஆனால், கொஞ்சம் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால், தின வர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

    IT பங்குகள் மேலே வர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் யாரிடமாவது Tech பங்குகள் இருந்தால், விற்று விட வேண்டாம். உங்கள் விலையை சொல்லுங்கள். நான் அந்த விலை போக தோராயமாக அந்த விலையை எட்ட எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சொல்கிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:

    AIR DECCAN - First Target 270
    IFCI- First Target 117
    FEDERAL BANK - Target 350
    PTC - Target 165
    Siemens - Target 1930
    L & T - Target 4250

    RCOM - Target 734 , 750
    IVRCL Infra - Target 504, 520
    DLF - Target 1010
    TATA TEA- Target - 850
    Future: Punjlloyd - Buy with SL518, Tgt545, 560 & Syndicate Bank - buy with Sl 102 , Tgt 109,112

    From Market: Can buy AravindMill in Cash.. it will go up Rs7 to 10 by today or by tommorrow. CMP - 77.50
    11.44am: Aravind mill reached my price. It's already good profit. please come out immediately

    From Market: 11.58am: Buy IDBI - Target 179

    From Market 12.05pm: Future Call: buy ashok leyland CMP49, SL47.5, tgt 53.2
    12.45pm: Future Call: Ashok leyland 50.80.. please come out and book profit

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    3.12.07
    குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடுகள்
    வணக்கம் நண்பர்களே.

    updated on 17/12/07

    Those who want to invest for long term they can buy the following stocks at present price: POWERGRID, CENTBOP, NTPC, SAIL, GMRINFRA, EKC, TATASTEEL, ONGC, RCOM, BARATHIAIRTEL,ISPATIND, NEYVELILIG, TTML, HYDRABADIND

    நான் இந்த வலைப்பூவை தொடங்கிய இரண்டு நாட்களில், நான் எதிர் பார்த்ததை விட அதிகமான நண்பர்கள் ஆதரவு அளித்து உள்ளார்கள். அதற்க்கு நான்
    தமிழ்மணம், முத்தமிழ் மன்றம் மற்றும் தமிழில் பங்குவணிகம் ஆகியோருக்கு என் நன்றியை சொல்லி கொள்கிறேன்.

    சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுகிய அல்லது நீண்ட கால பரிந்துரைகளை இங்கு பதியலாம் என உள்ளேன். இதில் நான் பரிந்துரைக்கும் விலைக்கு சற்று குறைவாக (Target Price) வந்தால், பங்கை விற்று லாபத்தை பார்த்து விடுங்கள். மீண்டும், நான் சொல்லும் பொழுது, அந்த பங்கை வாங்கினால் போதுமானது.

    இதோ உங்களுக்காக சில பங்குகள்:

    1. NTPC - Target Price Rs.300/- ( Expecting Before 2008) CMP - Rs240.20/-
    2. JP Hydro - Target Price Rs140/- (Expecting Before 2008) CMP- Rs118.35/-
    3. IFCI - Target Price - Rs250/- (Expecting Before Feb'2008) CMP- Rs106.80/- (Revised Target 04/12/07)
    4. Bindalagro - Target Price - Rs80/- (Expecting Before Feb'2008) CMP - Rs61.40/-
    5. Uniply - Target Price - Rs47/- (Expecting Before 2008) CMP - Rs37.2/-
    6. Neyvelli Lignite - Target Price - Rs 315/- (Expecting Jan'2008) CMP- Rs242.25/-
    7. Powergrid - Target Price - Rs180~200/- (Expecting Feb'2008)
    CMP- Rs150/-

    Newly added on 04/12/07
    8. EKC - Target Price - 380 ~ 400/- (Expecting Feb'2008) CMP- Rs330/-
    9. ITC - Target Price - Rs240/- (Expecting Jan'2008) CMP- Rs188/-

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    03/12/07 பங்கு சந்தை முடிவில்
    இன்று காலை பரிந்துரைத்தது போலவே, சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கும் மேலாக தன் வர்த்தகத்தை தொடங்கியது. அதே போல், இன்று முழுவதும் சந்தை மேல் நோக்கியே இருந்தது. சந்தை முடிவில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து 19603.41 புள்ளிகளுடனும், நிப்டி 102.25 புள்ளிகள் உயர்ந்து 5865 புள்ளிகளுடனும் முடிவு பெற்றது. பிற்பகலில் ஆசிய சந்தைகள் கொஞ்சம் கீழ்முகமாக செல்லவே, நம் இந்திய பங்கு சந்தையும் அதிகமாக மேலெ செல்லாமல் அடக்கி வாசித்தது.

    இன்று காலை பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் என்னவென்று இனி பார்ப்போம்.

    1. IDFC நேற்றைய விலையை விட ரூ11.85 கூடியது. (அதிக பட்சமாக ரூ13.05 கூடியது)
    2. Powergrid நேற்றைய விலையை விட ரூ2.10 கூடியது. (அதிக பட்சமாக ரூ3.95 கூடியது)
    3. RNRL நேற்றைய விலையை விட ரூ5.15 கூடியது. (அதிக பட்சமாக ரூ7.20 கூடியது)
    4. Punjlloyd நேற்றைய விலையை விட ரூ18.90 கூடியது. (அதிக பட்சமாக ரூ20.65 கூடியது)
    5. GMR infra நேற்றைய விலையை விட ரூ4.00 கூடியது. (அதிக பட்சமாக ரூ7.35 கூடியது)
    6. Mcdowell-N நேற்றைய விலையை விட ரூ32.15 குறைந்தது. (அதிக பட்சமாக ரூ23.00 கூடியே, பின் இறங்கியது)
    7. Gail நேற்றைய விலையை விட ரூ1.80 குறைந்தது (அதிக பட்சமாக ரூ7.35 கூடியே, பின் இறங்கியது)
    8. IFCI நேற்றைய விலையை விட ரூ12.25 கூடியது. (அதிக பட்சமாக ரூ15.10 கூடியது)
    9. SCI நேற்றைய விலையை விட ரூ2.60 இறங்கியது. (அதிக பட்சமாக ரூ9.05 கூடியே பின் இறங்கியது)
    10. IVRCL Infra நேற்றைய விலையை விட ரூ23.05 கூடியது. (அதிக பட்சமாக ரூ31.20 கூடியது)

    இன்று நான் பரிந்துரைத்த பங்குகளில் மூன்று மட்டும், நேற்றைய விலையை விட மேலே சென்ற பின், அங்கிருந்து கீழே இறங்கியுள்ளன. நான் பதிந்த லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் என்ற பதிவை பார்த்து இருந்தால், நஷ்டம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.
    இருந்தாலும், அந்த மூன்று பங்குகளில் லாபம் பார்க்க வில்லையா, இன்னும் அந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா? கவலை வேண்டாம். விற்காதீர்கள். இன்னும் சில நாட்களில் அந்த பங்குகள் மேலே வரும். தகவல் உள்ளது.

    லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    பங்குசந்தையில் லாபத்தை உறுதிபடுத்துங்கள்
    நீண்ட கால முதலீடுகள் என்பது வேறு. தின வர்த்தகம் என்பது வேறு. அதனால், தின வர்த்தகத்தில், லாபத்தை நீங்கள் அடிக்கடி உறுதி படுத்தி கொள்ள வேண்டியது உங்கள் கையில் உள்ளது.

    பொதுவாக, Equity - யில் முதலீடு செய்யும் பொழுது 1.5 முதல் 2% லாபம் வைத்து வெளியே வர பாருங்கள். அல்லது அந்த பங்கின் விலை ஏற ஏற விற்க்கும் விலையின் Stop loss - ன் விலையை ஏற்றி கொண்டே செல்லுங்கள். அதே போல், நீங்கள் வாங்கிய பங்கு விலை இறங்குமாயின், கீழே stop loss போட்டு வைத்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 5 விழுக்காடு நஷ்டம் வந்தால் வெளியே வந்து விடுங்கள். அது உங்களை அதிக நட்டம் அடைய விடாமல் காக்கும்.

    தின வர்த்தக Future - ல் ஈடுபடுவர்கள் ஒரு விழுக்காடு லாபம் வைத்து வந்து விடுங்கள். அதிக லாபம் பார்க்க ஆசையா? விற்க்கும் விலையின் SL - ஐ ஏற்றி கொண்டே செல்லுங்கள். அதிக எண்ணிக்கையில் இருக்கும் பங்குகளை வாங்கும் பொழுது, லாபத்தை அடிக்கடி உறுதி படுத்தி கொண்டே செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கிய Lot விலை இறங்குமாயின், அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நீங்கள் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

    நான் தினமும் பங்கு சந்தைக்கு நேரடியாக செல்வதால், எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை தரும் தகவல்கள் வரும். அது சில சமயம் இறங்கவும் செய்யவும். ஆனால், அது சில நாட்களுக்குள் கண்டிப்பாக மேலே வரும். அதனால், பங்குசந்தையில், பொறுமை என்பது மிகவும் முக்கியம். அவசரப்பட வேண்டாம். நிச்சயம் லாபம் பார்க்கலாம்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    03/12/07 இன்றைய பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    இன்று பங்குசந்தை எப்படியிருக்கும், இன்றைய பரிந்துரைகள் என்ன என்று பார்ப்போம்.
    கடந்த வார இறுதியில் முடிவுற்ற உலக பங்குசந்தைகள், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் ஓரளவுக்கு நம்பிக்கை தருகின்றன.
    இன்று காலை, சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 ~ 150 புள்ளிகளுக்கு மேலே தனது வர்த்தகத்தத தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். சந்தை முடிவில் சென்செக்ஸ் 350 ~ 500 புள்ளிகள் வரை உயரும் என எதிர்பார்க்கிறேன். ஆக மொத்தத்தில், இன்றைய சந்தை மேல் நோக்கியே இருக்கும் என எதிர்பார்க்கலாம்

    இன்றைய பரிந்துரைகள்:
    1. IDFC 2. Powergrid 3. RNRL 4. Punjlloyd 5. GMR infra 6. Mcdowell-N 7. Gail 8. IFCI 9. SCI 10. IVRCL infra