1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!



    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்





    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08




    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்



    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    23.1.08
    23/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    இன்றைய பங்குசந்தை காலையில் 700 புள்ளிகள் வரை உயர்ந்து தன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நேற்று அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.75 % Cut செய்ததின் எதிரொலியாக இன்றைய பங்குசந்தைகள் ஓரளவுக்கு மீள ஆரம்பித்து உள்ளன. ஆனால், இன்றைய பங்குசந்தை பிற்பகலில் ஓரளவுக்கு வீழ்ச்சியை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அதனால், மிகவும் குறைந்த அளவில் பங்குகளை வாங்குங்கள். மிகவும் குறைந்த லாபத்தில் வெளியே வர பாருங்கள். மிகவும் ஆசை பட வேண்டாம்.

    Metal, Telecom பங்குகள் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

    வீட்டில் இணைய தொடர்பு பிரச்சனை தருவதால், என்னால், காலையில் பதிவுகள் இட முடியவில்லை. அதனால், பங்குசந்தைக்கு வந்தே பதிவுகள் இடுகிறேன். இன்னும் ஒரு இரு நாட்களில் காலையிலேயே பதிவுகள் தர முடியும் என நினைக்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    22.1.08
    22/01/08 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    அனைவரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது என்பது உண்மை. இன்றும் நம் பங்கு சந்தை, மற்ற ஆசிய பங்குசந்தைகளின் வீழ்ச்சியின் எதிரொலியாக கண்டிப்பாக வீழ்ச்சியடையும் என்பதை மறுப்பதற்க்கில்லை.

    பொறுத்து இருப்போம். ஒரு மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல இயலும். தற்சமயம் Hangseng 2000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    STRATEGY-High risk Investors (Not Traders) may Buy Small qty on Declines strictly for Technical Recovery.Recovery will also be very Sharp for Quick Gains.

    From Market:
    9.57am: Market Lower Freeze. Market Halt for 1 hour
    Sensex down 2029 points (15576 points)
    Nifty down 630 points (4578 points)

    Finance Minister in cnbc says mkt when opens @1055 , one can witness heavy buy
    Requests investors to stay Calm

    10.55am: Market oen... sensex 1500 points recoverd. now sensex 17005 points.. nifty 5017 points

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    21.1.08
    21/01/08 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    என்றும் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது, அனைவரையும் கதிகலங்க வைத்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 16951 புள்ளிகளை தொட்டது.
    நிப்டி 700 புள்ளிகளுக்கும் மேல் இறங்கியது.

    என்னுடைய இல்லத்தில் இணைய தொடர்பில் பிரச்சனைகள் இருப்பதால் என்னால் இன்று காலை பரிந்துரையை பதிய இயலவில்லை. நாளையும் என்னால் பதிய இயலாது என நினைக்கிறேன்.

    இன்று முதலீடு செய்வதற்க்கு சரியான நேரம். ஆனால், நிறைய நண்பர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பார்கள் என்பது தான் உண்மை. (நான் உட்பட). மேற்கொண்டு முதலீடு செய்ய இயலாமல் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

    பணம் கைவசம் இருப்பவர்கள், நிறைய பங்குகளை வாங்க சரியான தருணம்.

    அனைவரும் கொஞ்சம் பொறுமையுடன் தாக்கு பிடிக்க பாருங்கள். அவசரப்பட்டு நிறைய நண்பர்கள் தங்கள் பங்குளை நஷ்டத்தில் கொடுத்து இருப்பார்கள். சில காலங்களுக்கு முன் பங்குசந்தையில் நுழைந்தவர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கும்.

    காரணம் எதுவும் இல்லாமல், பங்குசந்தை விழுவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உலக சந்தைகள் எல்லாம், 2 முதல் 3 விழுக்காடு வரைதான் இறங்கியுள்ளது. ஆனால், நம் பங்குசந்தையோ 10 விழுக்காட்டுக்கும் மேல் கீழ் இறங்கியது.

    சில பங்குகள் 30 விழுக்காட்டுக்கும் மேல் இறங்கியது. ஒரு கட்டத்தில் எல்லா பங்குகளும் கீழ் முகமாக இருந்தது. சில பங்குகள் lower freeze ஆகி விட்டது.

    இந்திய பங்குசந்தை வரலாற்றில் இன்று தான் மிக அதிகமான வீழ்ச்சியை சென்செக்ஸ் மற்றும் நிப்டி சந்தித்தது. கிட்டத்தட்ட அனைவரது தூக்கத்தையும் கெடுத்து விட்டது.

    பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 1350 - புள்ளிகள் கீழ் இறங்கியுள்ளது. நிப்டி 500 புள்ளிகள் இறங்கியுள்ளது.

    வரும் நாட்கள் நன்றாக இருக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்..


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    20.1.08
    சோதனை மேல் சோதனை: பாடாய் படுத்துகிறது பங்குச் சந்தை
    சோதனை மேல் சோதனை.
    பல முதலீட்டாளர்களின் நினைப்பே தற்போது இது தான். பங்குச் சந்தையில் எல்லாரும் பணம் பார்க்கிறார்களேநாமும் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று சமீப காலத்தில் பலர் துணிந்து இறங்கி வந்தார்கள். கடந்த ஒரு வார சரிவு, அவர்களை நிலை குலைய வைத்துள்ளது. ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் பங்குச் சந்தை. மேலேயே சென்று கொண்டிருந்ததால் பங்குச் சந்தையை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கெல்லாம் ஒரு ஆர்வத்தை தந்தது. அவர்களும் சந்தையில் என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமே என்ற நினைப்பில் பணத்துடன் வந்தார்கள்.

    தற்போதைய சந்தையின் பயங்கர இறக்கம் பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. சரிவு என்னவோ 2,000 புள்ளிகள் வரை. ஆனால், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பெரிய அளவில் உள்ளது. பங்குச் சந்தை பற்றிய பல கட்டுரைகளில் படங்கள் வெளியிடுவார்கள். அதில், மரத்தில் பணம் காய்த்து தொங்கும். அது போல, பங்குச் சந்தையில் பணம் காய்க்கிறது என்று பலர் நினைத்திருக்கலாம். அது ஆசையை கிளப்பி விட்டிருக்கலாம்.

    பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரமல்ல.வியாழன் காலை நன்றாகவே இருந்த பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் கீழே இறங்கத் துவங்கியது. காரணம், ரிலையன்ஸ் ரிசல்ட் வந்தவுடன் சந்தை இறங்கத் தொடங்கியது. உலகளவில் ஏற்பட்ட தொய்வும் ஒரு காரணம். சந்தை 167 புள்ளிகள் வரை குறைந்தது. வெள்ளியன்று ஆசிய அளவில் சந்தைகள் மேலேயே இருந்தாலும், இந்தியாவில் தொடக்கமே கீழே தான் இருந்தது. இந்த துறை தான் என்று இல்லை. எல்லா துறைகளும் கீழே விழுந்தன.

    `விழுந்தது' பங்குச் சந்தை. ஆனால், நல்ல அடி முதலீட்டாளர்களுக்கு. காலையில் இருந்து பெரிய அளவில் ஏதும் நடக்கவில்லை. ஒரு மந்தமான, அதே சமயம் சந்தை கீழேயே இருந்தது. கடைசி இரண்டு மணி நேரத்தில் இறங்கிய இறக்கம் எப்படி இருந்தது என்றால், தீம் பார்க்கில் பெரிய சறுக்கில் நாம் இறங்கும் வேகம் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு இருந்தது. 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. குறிப்பாக, கட்டுமானத்துறை, ஆயில், வாயு, வங்கித் துறை ஆகியவை பெரிய சரிவை சந்தித்தன. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 687 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.

    இந்த 2,000 புள்ளிகள் மேல் ஏற்பட்ட சரிவு, நீண்ட கால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பாகும். வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 19,013 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5,705 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

    புதிய வெளியீடுகள்: ரிலையன்ஸ் பவர் க்ரே மார்க்கெட் பிரீமியம் ரூ.300 வரை உள்ளது. பிரீமியம் குறைந்து கொண்டே வருகிறது. காரணம், எல்லாரும் விற்க முற்படுவது தான். இன்னும் பிரீமியம் குறையும் வாய்ப்பு உள்ளது. மொத்தம் 72 தடவை செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பங்கு 15 தடவை வரை செலுத்தப்பட்டுள்ளது. முழுவதும் போட்டவர்களுக்கு 15 பங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உள்ளது. ரூ.200 பிரீமியம் கிடைக்கும் என்றால், 15 பங்கிற்கு ரூ.3,000 வரை லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதாவது, 25,000 ரூபாய் முதலீட்டிற்கு 20 நாட்களில் 3,000 ரூபாய் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய முதலீட்டாளர்களில் நிறைய பேர் விற்பவர்களாக இருப்பதால், விலை சந்தையில் பட்டியலிடப் போகும் அன்று குறையலாம். எவ்வளவு பேர் வாங்க காத்திருக்கின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது.

    ப்யூச்சர் கேபிடல் சிறிய முதலீட்டாளர்களின் பங்கு 55 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆதலால், முழுவதும் போட்டவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எம்.ஆர்.எம்.ஜி.எப்., வெளியீட்டிற்கு க்ரே மார்க்கெட் பிரீமியம் 350 ரூபாய் வரையில் உள்ளது. எம்.ஆர்.எம்.ஜி.எப்., அப்ளை செய்ய ரிலையன்ஸ், ப்யூச்சர் கேபிடல் பணங்கள் திரும்பி வந்து விடும்.

    எம்.ஆருக்கு முன்னதாகவே ஓம் மொபைல் வெளியீடு வருகிறது. ஓம் மொபைல் கம்பெனி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மொபைல் கம்பெனிகளுக்கு சாப்ட்வேர் மற்றும் கண்டென்ட் தயாரித்து கொடுக்கிறது. உலகின் பெரிய கம்பெனிகள் எல்லாம் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஜனவரி 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைகிறது; விலை ரூ.425 முதல் 450 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரிசல்ட் கார்னர்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்ற வருடம் இதே காலாண்டை விட 26 சதவீதம் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது. இருந்தாலும், அந்தக் கம்பெனியின் பங்கு விலைகள் சந்தையில் குறைந்து ரூபாய் 2,800 அளவிற்கு வந்தது. முதலீட்டாளர்கள் இன்னும் அதிக லாபம் எதிர்பார்த்திருப்பார்களோ என்னவோ? இல்லை, மறுபடி பங்கு பிரிப்பு, போனஸ் போன்ற எதிர்பார்ப்போ என்னவோ? இந்த கம்பெனி 22 துணை நிறுவனங்களை தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்தும் நல்ல துறைகளில் உள்ள கம்பெனிகள். அதாவது, ரீடெய்ல் போன்றவை. ஆதலால், இந்த கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்படும் போது மதிப்பு கூடும் வாய்ப்பு உள்ளது. ரிலையன்ஸ் எனர்ஜி லாபம் கூடுதலாக கொடுத்திருந்தாலும், அது வேறு வகையில் வந்த லாபங்களை அதிகம் காட்டியுள்ளது. ஆதலால், அந்த பங்கின் விலை, ரிசல்ட்டுக்கு பிறகு இன்னும் குறைந்தது.

    டி.சி.எஸ்., கம்பெனியின் ரிசல்ட் நன்றாகத் தான் இருந்தது. இருந்தாலும், சந்தையில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. ரூபாய் 1,300 அளவு சென்ற அந்த கம்பெனியின் பங்குகள், தற்போது 920 ரூபாய் அளவிற்கு வந்து விட்டது. சாப்ட்வேர் மோகம் குறைந்து விட்டது. காரணம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்னும் கூடலாம் என்ற எண்ணங்கள் தான்.

    என்ன பங்குகள் வாங்கலாம்?:சந்தை தற்போது இருக்கும் நிலைமையில் என்.டி.பி.சி., பவர்கிரிட் ஆகியவை வாங்கத் தகுந்த பங்குகள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ரூபாய் 2,800 அளவில் கிடைக்கிறது.

    அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: பணவீக்கம் 3.79 சதவீதம் அளவில் உள்ளது. இது சென்ற வாரத்தை விட அதிகம். பெரிய அளவில் பணம் புதிய வெளியீடுகளில் முடக்கப்பட்டுள்ளதால், மறுபடி சந்தை சிறிது சிறிதாக மேலே வர இன்னும் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ரிலையன்ஸ் பவர் லிஸ்டிங் ஆகும் சமயம் தான் மறுபடி சந்தைக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.நல்ல பல காலாண்டு முடிவுகள் வந்தும், சந்தை இந்த வாரம் 19,000க்கும் கீழே சென்றது. யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் இவ்வளவு கீழே செல்லும் என்று; அது தான் பங்குச் சந்தை.

    நன்றி: சேதுராமன் சாத்தப்பன் / தினமலர்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.