15.12.07
பங்குசந்தையில் வரும் வாரம் தனி ஆவர்த்தனம்
பங்குச் சந்தையில் வரும் வாரம் தனி ஆவர்த்தனம் -சேதுராமன் சாத்தப்பன்- தினமலர் பங்குச் சந்தை சில சமயங்களில் விடை தெரியாத புதிர் போல காட்சியளிக்கும். கடந்த புதன்கிழமை உலகளவில் பங்குச் சந்தைகள் படுபயங்கரமாக கீழே விழுந்த போதிலும், இந்தியாவிலும் அடி விழும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், நல்ல தொழிற் உற்பத்தி சதவீதம் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தாலும், சிறிய, நடுத்தர பங்குகள் பக்கம் பலமான காற்று வீசுவதாலும் பங்குச் சந்தை பிரகாசமாக இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகிறது, கீழே விழுமோ என்ற அச்சம் இருந்தாலும் பங்குச் சந்தை போகும் வேகம் இனி கீழே விழ வாய்ப்பு இல்லை என்ற நோக்கில் சென்று கொண்டு இருக்கிறது. வியாழன் மேலே தான் பங்குச் சந்தை இருக்கும் என்று பார்த்தால் அன்று கீழே விழுந்தது. 20 ஆயிரத்தை தாண்டும் போது எல்லாரும் விற்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். வெள்ளி நல்ல வெள்ளியாக இருக் கட்டும் என்று பலரும் வேண்டி கொண்டார்களோ என்னவோ பங்குச் சந்தை ஒரு பரபரப்பில்லாமல் அதிவேகத்தில் மேலேயும் போகாமல், கீழேயும் விழாமல் நடுநிலையுடன் இருந்தது. இருப்பினும் இறுதியில் 74 புள்ளிகள் குறைந்து முடிந்தது. குறிப்பாக வங்கித் துறை கேபிட்டல் குட்ஸ், சாப்ட்வேர் துறை பங்குகள் கீழே சரிந்தன. ஆசியா அளவில் பங்குச் சந்தைகள் குறைந்ததும் சரிவுக்கு காரணம். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 20 ஆயிரத்து 30 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை ஆறாயிரத்து 47 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை இந்திய சிமென்ட்ஸ் பங்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. இது ஒரே நாளில் 25க்கு மேல் கூடியது. இந்த நிறுவனம் முதலீட்டை பெருக்குவது தொடர்பாக பங்குதாரர்கள் அசாதாரண கூட்டத் தை சென்னையில் கூட்டியிருந்தது. கூட்டத்தில் பங் கேற்ற பங்குதாரர்கள் உரிமை பங்கு கிடைக்குமா என்ற ஆவலுடன் இருந் தனர். ஆனால், பங்குதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் பிற்பகுதியில் இந்நிறுவன பங்கு விறுவிறுவென ஏறியது. ரூ. 330 இதுவும் புரியாத புதிர் தான். வரும் வாரம் எப்படி இருக்கும்: எந்த எந்த கம்பெனிகள் கூடுதலாக அட்வான்ஸ் டாக்ஸ் கட்டியது என்ற செய்திகள் வரும் வாரம் கசிய இருப்பதால் அதை வைத்து மார்க்கெட்டை எடை போட்டு கலகலக்க வைக்க காத்திருக்கிறார்கள். வங்கிகள் நிதியானது மியூச்சுவல் பண்ட்களில் பெருமளவில் குவிந்து வருவதை தடுக்க, ரிசர்வ் வங்கி கடும் உத்தரவுகளை பிறப்பித்துள் ளது. இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை தான் வந்தது. எனவே இதன் தாக்கம் திங்கட்கிழமை தெரியவரும். இதன் காரணமாக வங்கி பங்குகள் சரிய வாய்ப்பு இருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உலக நாடுகள் கவனம் செலுத்துவதால் வெளிநாட்டு பங்குச் சந்தைகள் பெரும்பாலும் மூடி இருக்கும். இந்திய சந்தை மட்டுமே தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டிய நிலை. எப்படியிருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம். பங்குச் சந்தை பரபரப்புக்கு இடையே மியூச்சுவல் பண்ட்களின் ஓட்டத்தை கவனிக்க தவறாதீர்கள். பல மியூச்சுவல் பண்ட்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொண்டு இருக்கின்றன. சில பண்ட்கள் டிவிடெண்ட்களை கொடுக்க துவங்கியுள்ளன. புதிய வெளியீடுகள் : மனாக்ஷியா என்ற கம்பெனி (முன்பு இந்துஸ்தான் சீல்ஸ் என்ற பெயரில் அழைக்கப் பட்ட) தனது புதிய வெளியீட்டை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கொண்டு வருகிறது. 1984ல் துவங் கப்பட்ட இந்த கம்பெனியின் பங்கு ரூ. 140 முதல் ரூ. 160 வரை விலையில் கொண்டு வருகிறது. க்ரே மார்க்கெட் பிரிமியம் தற்போது ரூ. 50 அளவில் உள்ளது. பிரிசிஷன் பைபஸ் என்ற கம்பெனி தனது புதிய வெளியீட்டை 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டு வருகிறது. ரூ. 140 முதல் ரூ. 150 வரை விலையில் கொண்டு வருகிறது. க்ரே மார்க்கெட் பிரிமியம் தற் போது ரூ. 45 அளவில் உள்ளது. போர்வால் ஆட்டோவின் வெளியீடு 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டு வருகிறது. விலை ரூ. 68 முதல் ரூ. 75 வரை. க்ரே மார்க்கெட்டில் பிரிமியம் தற்போது ரூ. 18. இந்த மூன்று வெளியீடுகளுமே போடத் தகுந்தவை தான். அடுத்தாண்டு துவக்கத்தில் மகேந்திரா ஹாலிடே ரிசார்ட் (ரூ. 400 கோடி), லோதா என்ற கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, தைனிக் பாஸ்கர் என்ற நிறுவனம் பங்குகளை வெளியிட உள்ளது. |
புதிய பங்கு வெளியீடுகள் (IPO)
புதிய பங்கு வெளியீடுகள்: (Initial Public Offer) (டிசம்பர் மாதம் 2007) 1. Manaksia Ltd (formerly Hindusthan Seals Ltd., incorporated in 1972) Public issue of up to 1,55,00,000 equity shares of Rs.2/- each ("equity shares") for cash at a price of Rs. 140 to Rs. 160 per equity share. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 19/12/2007 நிறுவனம் பற்றி அறிய: http://www.manaksia.com/ என் கருத்து: முதலீடு செய்யலாம் 2. Aries Agro Ltd Initial public issue of 45,00,000 equity shares of Rs.10/- each for cash at a price of Rs.120/- toRs.130/- per equity share விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 14/12/2007 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 19/12/2007 நிறுவனம் பற்றி அறிய: http://www.ariesagro.com/ என் கருத்து: தவிர்க்கலாம் 3. Precision Pipes & Profiles Company Ltd Public issue of [*] equity shares of Rs. 10/- each for cash at a price of Rs. 140 To Rs. 150 Per Equity Share of Face Value of Rs. 10 Each. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 20/12/2007 நிறுவனம் பற்றி அறிய: http://www.ppap.co.in/index.html என் கருத்து: சிறிய அளவில் முயற்ச்சிக்கலாம் 4. Porwal Auto Components Ltd Public issue of 50,00,000 equity shares of Rs.10/- each at a price of Rs Rs. 68 to Rs. 75 per equity share. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 20/12/2007 நிறுவனம் பற்றி அறிய: http://porwalauto.com/index.htm என் கருத்து: தவிர்க்கலாம் (குறிப்பு: ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனத்தின் தன்மை, அது எவ்வளவு நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் போன்றவையை வைத்தே என் கருத்தை சொல்லியுள்ளேன். நண்பர்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டியே, அந்த நிறுவனங்களின் இணைய தள முகவரியை தந்து உள்ளேன். முடிவு உங்கள் கையில்) Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
14.12.07
கடந்த வார பங்கு சந்தை நிலவரம் (10/12/07 முதல் 14/12/07 வரை)
------கடந்த வாரத்தில், (அதாவது 07/12//07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவில் இருந்து, 14/12/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவு வரை) எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவாக தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை: ------முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன். அதிக விலை ஏற்றம் கண்ட பங்குகள்: Nifty Group: 1. National Alum.co --- --Rs.449.70-----Rs.379.40----- +18.53% 2. Hindalco-----Rs.213.20-----Rs.187.90----- +13.46% 3. GSK Pharma-----Rs.1092.95-----Rs.967.60----- +12.95% 4. Unitech.-----Rs.479.25-----Rs.428.90----- +11.74% 5. Gail-----Rs516.15-----Rs.471.90----- +9.38% Jr.Nifty Group: 1. CadilaHealth-----Rs.334.55-----Rs.289.50----- +15.56% 2. TVS Motor-----Rs 77.60-----Rs 68.15----- +13.87% 3. IFCI-----Rs 113.75-----Rs.101.00----- +12.62% 4. Lupin-----Rs 639.20-----Rs 569.95----- +12.15% 5. PunjabTractor-----Rs.282.70-----Rs.253.15----- +11.67% அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்: Nifty Group: 1. Satyam Comp-----Rs.411.45-----Rs.443.80---- (-7.29%) 2. BHEL-----Rs.2561.40-----Rs.2746.10----- (-6.73%) 3. InfosysTech-----Rs.1646.30-----Rs.1722.30----- (-4.41%) 4. HCLTECHNOLOG-----Rs.307.90-----Rs.319.15----- (-3.52%) 5. ICICI Bank-----Rs.1206.95-----Rs.1247.60----- (-3.26%) Jr.Nifty Group: 1. Tech Mahindra-----Rs.1120.30-----Rs.1223.70----- (-8.45%) 2. Mphasis-----Rs.280.30-----Rs.295.10----- (-5.02%) 3. Moser Baer-----Rs.291.55-----Rs.305.55----- (-4.58%) 4. I-Flex Solution-----Rs.1552.00-----Rs.1614.50----- (-3.87%) 5. Patni Computer-----Rs.329.50-----Rs.340.90---- (-3.34%) அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்: Nifty Group: 1. RPL -----10871949Shares 2. ITC Ltd-----9991238 Shares 3. SAIL-----8969903 Shares 4. RCOM-----5685662 Shares 5. CAIRN INDIA-----5499822 Shares Jr.Nifty Group: 1. IFCI-----46458601 Shares 2. TATA TELESER-----36995891 Shares 3. ASHOKLEYLAND-----11204901 Shares 4.GMRINFRA -----19124173 Shares 5. IDBI-----8238280 Shares ------அதிக பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகளில், RPL, SAIL, RCOM, IFCI, TATA TELESER, GMR INFRA, ASHOKLEYAND ஆகியவை போனவாரமும் ஆதிக்கம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. ------மேற்கண்டவற்றில், RPL, SAIL, IFCI, TATA TELESER, GMR INFRA ஆகியவை கடந்த மூன்று வாரங்களாக அதிக பரிவர்த்தனை செய்த பங்குகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ------இந்த வாரம் அதிகம் இறக்கம் கண்ட பங்குகளில் அதிகமானவை Tech துறையை சேர்ந்த பங்குகளே. சில நாட்களாக ஏற்றம் கண்ட Tech பங்குகள் மீண்டும் இறங்க ஆரம்பித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
14/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய இந்திய பங்கு சந்தை ஆசிய பங்குசந்தைகளை சார்ந்தே இருந்தது. பிற்பகலில் எதிர்பார்த்தது போல், selling pressure அதிகமாக இருந்தது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 73 புள்ளிகள் கீழ் இறங்கியும், நிப்டி 10 புள்ளிகள் இறங்கியும் இறந்தன. சரி.. இன்றைய பரிந்துரைகளை பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம் 1. Hindalco (+3.90) அதிக பட்சமாக ரூ7.70 ஏறியது 2. Sail (-5.15) அதிக பட்சமாக ரூ2.35 மட்டுமே ஏறியது. 3. PNB (-8.25) அதிக பட்சமாக ரூ9.00 ஏறியது 4. Punjlloyd (-2.70) அதிக பட்சமாக அதன் open விலை மட்டுமே இருந்தது. 5. RNRL (-1.95) அதிக பட்சமாக ரூ3.05 ஏறியது 6. Rcom ( -0.95) அதிக பட்சமாக ரூ13.75 ஏறியது 7. ONGC (+8.40) அதிக பட்சமாக ரூ15.55 ஏறியது. இன்று பரிந்துரைத்த பங்குகள் அதிகமானவை கீழ் நோக்கியே இருக்கின்றன. அவைக்களுக்கெல்லாம், நியூஸ் உள்ளது. அதனால் கவலை வேண்டாம். அவைகள் எல்லாம், அடுத்த வாரத்தில் மேலே வந்து விடும். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
14/12/07- வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய நம் இந்திய பங்கு சந்தை, ஆசிய பங்குசந்தைகளையே பிரதிபலித்தன. கீழ் நோக்கியே சென்றது. இன்று, காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளில் Nikkei - தவிர மற்ற அனைத்தும் கீழ் நோக்கியே இருக்கின்றன. நம் பங்குசந்தை கொஞ்சம் வித்தியாசமானது. சில சமயம்,உலக பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டாலும், எனக்கென்ன என்று மேலே செல்லும். சில சமயம் காரணம் இல்லாமல் வீழ்ச்சி காணும். இன்று அது நடக்கலாம். மேலே செல்லும் என நினைக்கிறேன். Metal Stocks மேலே செல்லலாம். இன்று வெள்ளிக்கிழமை. பணவீக்கம் பற்றிய அறிவுப்பு வரும். அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை வேறு. அதனால், காலை பங்கு சந்தை நன்றாக இருந்து விட்டு, பிற்பகலில் கொஞ்சம் ஆட்டம் காணலாம். சில நண்பர்கள் குறுகிய கால முதலீட்டுக்கான பரிந்துரைகளை கேட்டு உள்ளார்கள். தற்பொழுது அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மேலும், இன்னும் சில நாட்களில், அது வாரங்களில் ஒரு சரிவு இருக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது. அப்படி சரிவு வரும் பொழுது பங்குகளை பரிந்துரை செய்கிறேன். அதுவரை பொறுத்து இருங்கள். இன்றைய பரிந்துரைகள்: 1. Hindalco 2. Sail 3. PNB 4. Punjlloyd 5. RNRL 6. Rcom 7. ONGC Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
13.12.07
13/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை, மற்ற ஆசிய பங்குசந்தைகளை போலவே கீழ் நோக்கி இருந்தது. இன்றைய பங்கு சந்தை அதிகம் வீழாமல் தாக்கு பிடிக்க Metals துறையை சார்ந்த பங்குகள் துணை புரிந்தன. பங்குசந்தை முடிவில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் கீழ் இறங்கியும், நிப்டி 101 புள்ளிகள் கீழ் இறங்கிய நிலையிலும் முடிவுற்றது. சரி. இன்றைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம். 1. RNRL ---183.3----185----185----177.05----178.7 (-4.6) 2. RCOM---767.7----767----776.8----749.6----761.65 (-6.05) முதலில் அதிக பட்சமாக ரூ10.10 ஏறி, பின் இறங்கியது. . PUNJLLOYD---557.1---567.5----574.5----555----557.05 (-0.05) முதலில் அதிக பட்சமாக ரூ17.40 ஏறி, பின் இறங்கியது 4. SAIL---287.75----289.9----292.9----281.35----285.3 (-2.45) 5. HINDALCO 206.25----208----215.45----206.5----209.3 (+3.05) முதலில் அதிக பட்சமாக ரூ10.20 ஏறி பின் இறங்கியது |
13/12/07 - வர்த்தக குறிப்புகள்
நேற்றைய ஆசிய சந்தைகள் கீழ் நோக்கி இருந்த பொழுதும், நமது இந்திய சந்தையோ ஆச்சரியம் கொள்ளும் வகையில் காளையின் ஆதிக்கம் மோலோங்கி, சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சாதனை அளவை எட்டியது. என்னை பொறுத்த வரை இன்றைய பங்குசந்தை கொஞ்சம் மேடு பள்ளமாகவே இருக்கும் என கருதுகிறேன். சில நாட்களில் ஒரு சரிவு இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. அதனால், நண்பர்கள் அனைவரும் உடனுக்குடன் லாபம் பார்த்து விடுங்கள். தற்சமையம் எல்லா பங்குகளும் அதன் உச்சத்தை எட்டியுள்ளது என்று சொல்லலாம். அதனால், கவனமுடன் இருங்கள்.. இன்று கீழ் கண்ட பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 1. RNRL 2. RCOM 3. PUNJLLOYD 4. SAIL 5. HINDALCO மற்றவற்றை சந்தையில் இருந்து சொல்கிறேன். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
12.12.07
12/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்ததை போல, காலையில் கீழ் நோக்கியே தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. மதியம் 1.45 மணி வரை கீழ் நோக்கியே இருந்த பங்குசந்தையில், காளையின் ஆதிக்கம் மேலோங்கியது. அதிகமானோர் பங்குகளை வாங்க ஆரம்பித்தனர். இன்று Metal Stocks நன்றாக இருந்தது. வங்கி பங்குகள் எல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசித்தன. எண்ணைய் சம்பந்தமான பங்குகளும் நன்றாக இருந்தன. Telecom துறையும் நன்றாக சென்றன. இன்று நான் பங்கு சந்தையில் இருந்து பரிந்துரைத்த பங்கு என்றால், அது KS oil மட்டும் தான். மீதி எல்லாம் Delivery - க்கு என்று சொல்லியிருந்தேன். காலையில் இருந்தே KSOIL நன்றாக இருந்தது. மதியம் 1.45 மணிக்கு மேல், கிடு கிடுவென மேலே சென்றது. சரி இனி இன்றைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம். KSOIL (intraday) CMP88.80 - அதிகமாக பட்சமாக ரூ 101.90 வரை சென்றது. பங்கு சந்தை முடிவில் 99.30 என முடிவுற்றது. (+11.60) Delivery -- Can buy Punjlloyd - - Tgt 575 (3 days time) CMP540 LTP 557.10 (+33.35) Delivery - Crompton Greaves - Tgt 450 (1 week time) CMP420 LTP 416.40 (+0.55) Delivery - STAR (Cash & F&O) - Tgt 350 (1 wk time) CMP320 LTP 317.45 (+2.25) இன்று காலை நான் நம்மிடம் இருக்கும் பங்குகளை கூட கொடுத்து வாங்கலாம் என சொல்லியிருந்தேன்.யாராவது முயற்ச்சி செய்தீர்களா? நான் என்னிடம் இருந்த தேனா வங்கியின் பங்குகளை காலையில் கொடுத்து 1 ரூபாய் கீழே சென்ற பிறகு மீண்டும் வாங்கி லாபம் அடைந்தேன். யாராவது இதே போல் லாபம் பார்த்து இருந்தால், மிக்க மகிழ்ச்சி. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
12/12/07 க்கான வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி, எதிர்பார்த்தபடியே 0.25% வட்டியை குறைத்து அறிக்கை விட்டது. ஆனால், 0.5% விழுக்காடு வரை எதிர்பார்த்த அமெரிக்கர்கள், ஏமாற்றம் அடைந்ததால் பிற்பகலில் அமெரிக்க பங்கு சந்தைகள் 2% -க்கும் கீழ் வீழ்ந்தன. அதன் எதிரொலி இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளிலும் இருக்கிறது. நம் பங்குசந்தையை பற்றி கேட்கவே வேண்டாம். நிச்சயம் இன்று கீழ் நோக்கியே தன் வர்த்தகத்தை ஆரம்பிக்கும். கீழ் நோக்கியே இன்றைய வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்று புதிதாக பங்குகளை வாங்கி விற்க்கும் (தினவர்த்தகம்) செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிதாக எதுவும் பங்குகள் வாங்க வேண்டாம். Delivery எடுக்க முடியுமானால், அதிகமாக இறங்கும் Nifty, Jr.Nifty பங்குகளை மதியம் போல் வாங்கி கொள்ளலாம். இன்றும் வர்த்தகம் பண்ணலாம். எப்படி என்கிறீர்களா? உங்களிடம் உள்ள பங்குகளில் ஏதாவது லாபத்தோடு இருந்தால், அந்த பங்குகளை முதலில் விற்று விடுங்கள். பிறகு அது 1.5 ~ 3.5 விழுக்காட்டுக்கு கீழ் செல்லும் பொழுது, வாங்கி விடுங்கள். உங்களிடம் உள்ள பங்கு உங்களிடமே வந்துவிடும். பணமும் பார்க்கலாம். ஒரு வேளை, நீங்கள் கொடுத்த பங்கின் விலை, இறங்குவதற்க்கு பதிலாக ஏறி விட்டால் கவலை கொள்ள வேண்டாம். காரணம், நீங்கள் அந்த பங்கை லாபத்துக்குத்தான் விற்று இருப்பீர்கள். அதிக ஆசை பட்டு விட்டு விடாதீர்கள். அதே போல், மேல் நோக்கி சென்று கொண்டு இருக்கும் (+) பங்குகளில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். முயன்றுதான் பாருங்களேன்.. வெற்றி உங்கள் பக்கம்.. Latest News: 9.45am: Future - ல் Long position வைத்து இருப்பவர்கள் கீழ் வரும் பங்குகளை விட்டு வெளியே வருவது உத்தமம்.. 1. BHEL 2. BINDAL AGRO 3. AIRDECCAN 4. ESSAR OIL 10.15am: Buy KSOIL (intraday) CMP88.80 11.00am: KSOIL went up CMP94.00 Book partial profit. Delivery -- Can buy Punjlloyd - - Tgt 575 (3 days time) CMP540 Delivery - Crompton Greaves - Tgt 450 (1 week time) CMP420 Delivery - STAR (Cash & F&O) - Tgt 350 (1 wk time) CMP320 |
11.12.07
11/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை மிகவும் நன்றாகவே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். மேலும், சென்செக்ஸ் புதிய சாதனை அளவான 20290 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது மகிழ்சி தரும் விடயம். இன்னும் இரண்டு நாட்கள் இதே போல், சென்செக்ஸ் சென்றால், நிச்சயம் சென்செக்ஸ் 21000 புள்ளிகளை இந்த மாதத்தில் தொடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதே என் எண்ணம். எது எப்படியோ, இன்று வெளியாகும் பெடரல் வங்கியின் அறிவிப்பு குறித்தே, நாளைய மற்றும் அதன் பின் வரும் பங்குசந்தையின் செயல்பாடுகளிருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சரி. இனி, இன்று பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு கண்ணோட்டம் இடுவோம். முதலில் இருப்பது நேற்றைய முடிவு விலை, அடுத்து இன்றைய Open விலை, அடுத்து இருப்பது Day High விலை, அடுத்து இருப்பது Day Low விலை, கடைசியாக இருப்பது இன்றைய முடிவு விலை.. (அடைப்பு குறிக்குள் எவ்வளவு ஏற்றம் அல்லது எவ்வளவு இறக்கம் என்பதை குறிக்கிறது) 1.Dena bank,----87.2---88.35---91.4----87.6----88.75 (+1.55) 2.Syndicate Bank---116.05---115---121.3----115---117.25 (+1.20) 3.Union Bank---200.9---204.9---212.8---203---207.3 (+6.40) 4.India Cement ---303.4---304---309.95---297.05---300.95 (-2.45) 5.Ultra Tech cement---995.55---1000---1015---991---997.45 (+1.90) 6.Kesoram ---629.85---660---664.4---630---634.2 (+4.35) 7.RPL---227.25---227---232.3---226.5---227.85 (+0.60) 8.Gail ---500.15---508.9---524.8---505---519.45 (+19.30) 9.Essar Oil ---299.3---303.8---304---291---294 (-5.30) From Market: 1.Ramakirishna forging (Delivery)---230.35---239.4---241.9---230---230.05 (-0.30) 2.airdeccan ---265.55---269.8---272.3---256---261.25 (-4.30) 3.bindal agro---63.65---64.25---65.9---60.4---60.95 (-2.70) 4.idfc ---228.35---229.7---230---223.55---225.1 (-3.25) 5.punjlloyd ---508.1---510---525---508---519.75 (+11.65) 6.aptecht ---432.45---434---449.7---418.1---422.35 (-10.10) 7.sterilite optical ---351.9---354.5---365---353---356 (+2.10) 8.parsvanath---406.8---413.9---426.75---410---417.3 (+10.50) இன்று சந்தையில் இருந்து பரிந்துரைத்த பங்குகள் சில கீழே சென்று உள்ளன. கவலை வேண்டாம். இன்னும் ஒரு இரு நாளில் அவை மேலே சென்று விடும். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes |
11/12/07 பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே உலக சந்தைகள் யாவும் இன்று வெளியாகும் பெடரல் வங்கியின் அறிவுப்புக்காக காத்திருக்கின்றன என்பதே உண்மை.பெடரல் வங்கி, குறைந்தது 0.25% வட்டியை குறைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கின்றனர். அதனாலேயே கடந்த இரண்டு நாட்களாக,உலக சந்தைகள் ஒரளவுகு மேல் நோக்கி இருக்கின்றன.நம் சந்தையோ, லாபத்தை உறுதி செய்யதல்,பதட்டம் ஆகியவற்றால் சென்செக்ஸ் இன்னும் 20000 புள்ளிகளை நிலை நிறுத்தி கொள்ள தடுமாறி வருகிறது. இன்று??? மேலே தன்னை நிலை நிறுத்தி கொள்ளலாம். ஆனால், பிற்பகலில் லாபத்தை உறுதி செய்யும் வகையில், அதிகமான விற்பனை இருக்கும். அதனால், தினவர்த்தகர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று வங்கி துறை சார்ந்த பங்குகள், சிமெண்ட் துறை சார்ந்த பங்குகள், எண்ணெய் துறை சேர்ந்த பங்குகள் நன்றாக இருக்கும் என கருத படுகிறது. 1.Dena bank, 2.Syndicate Bank, 3.Union Bank, 4.India Cement, 5.Ultra Tech cement, 6.Kesoram, 7.RPL, 8.Gail, 9.Essar Oil ஆகியவை வாங்கலாம். முடிந்தால், பங்குசந்தையில் இருந்து Target Price தருகிறேன். From Market: 9.45am: இந்த பங்குகளிலும் ஒரு பார்வை வையுங்கள்: Ramakirishna forging (Delivery), airdeccan, bindal agro, idfc, punjlloyd, aptecht, sterilite optical, parsvanath Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
10.12.07
STOP LOSS ORDER பற்றி சிறு விளக்கம்
சில நண்பர்கள் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க, STOP LOSS பற்றி கொஞ்சம் விளக்கலாம் என உள்ளேன். Stop loss என்பது நமது நஷ்டத்தை அல்லது லாபத்தில் நஷ்டத்தை நாமே தீர்மானித்து, அதற்க்கு ஏற்றார் போல் order Place பண்ணுவது. சில சமயம், சில பங்குகளை வாங்க சொல்லும் பொழுது, அவர்களே SL என்று கொடுப்பார்கள். அதாவது, அந்த SL விலையை கடந்து கீழே சென்று விட்டால், அதற்க்கு மேலேயும் கீழே போக வாய்ப்பு உள்ளது, அந்த பங்கின் Resitance limit அதுதான் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஆக பங்குசந்தையில் வர்த்தகம் செய்பவர்கள், அதிக நஷ்டம் அடையாமலிருக்க Stop Loss போடுவது நல்லது. லாபத்திலும் SL போடலாம். உதாரணத்திற்க்கு, நான் ஒரு பங்கை ரூ100/- க்கு வாங்குகிறேன். ஒரு வேளை அந்த பங்கு கீழே போகும் பட்சத்தில், அது எதுவரை போனால், என்னால் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்ள முடியும் என்பது தான் இங்கு கேள்வி. என்னை கேட்டால், நான் 3% ~ 3.5% விழுக்காடு வரை செல்வேன். அதாவது ரூ97 முதல் ரூ96.5 வரை சென்றாலும், நான் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்ள கூடிய நிலையில் இருக்கிறேன். இது ஒரு ஷேருக்கு. ஒரு வேளை நான் ஆயிரம் ஷேர் வாங்கினால், என் நஷ்டம் எவ்வளவு? ரூ3000/- அல்லது ரூ3500/-. சரி.. 1000 ஷேர் வாங்கிவிட்டேன். வாங்கிய ஷேர்களை விற்க ரூ103/- க்கு Order போடுகிறேன். அதே சமயம், அதாவது உடனே, Stop loss - க்கு என்று தனி (Second) Order போட்டு விடுவேன். நாம் புரோக்கரிடம் stop loss தனியாக போடுங்கள் என்று சொல்ல வேண்டும். (online -ல் வர்த்தகம் செய்பவர்கள், selling Order - ஐ மீண்டும் திறந்து, RL என்று இருப்பதை SL - என்று மாற்ற வேண்டும்). நான் முன்பே சொன்னேன், நான் ரூ97 அல்லது ரூ96.5/- வரும் வரை என்னால், நஷ்டத்தை எடுத்து கொள்ள முடியும் என்று. சரிதானே.. அப்படியென்றால், என் அதிக பட்ச குறைந்த விலை ரூ96.5.. இது Normal Price. குறைந்த பட்ச நஷ்டம் என்பது என் Trigger Price. அதாவது ரூ97/- நான் வாங்கிய பங்கின் விலை ஏறி கொண்டே போய், முதலில் நான் விற்க போட்ட ரூ103/- ஐ தொட்டு விட்டால், நான் வாங்கிய 1000 ஷேர் விற்று விடும். எனக்கு ரூ3000/- லாபம் கிடைக்கும். மேலே போய், லாபத்தில் முதலில் என் ஷேர் விற்று விட்டால், உடனடியாக கீழே Stop Loss -க்கு போட்ட order - ஐ எடுத்து (Cancel செய்து) விட வேண்டும். இல்லையேல், நீங்கள் விற்ற பிறகு, ஒரு வேளை உங்கள் பங்கின் விலை இறங்கி கொண்டே வந்து உங்கள் SL order - ல் உள்ள பங்கையும் விற்று விட்டால், நீங்கள் 2000 ஷேர்களை விற்றதாக அர்த்தம். அதாவது 1000 ஷேர் short ஆகி விடும். Cash - ல் intraday - யில் short போக கூடாது. அப்படி ஆகிவிட்டால், நீங்கள் அதிக நஷ்டம் அடைய நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரி. நான் வாங்கிய பிறகு, என் பங்கின் விலை ஏறுவதற்க்கு பதிலாக இறங்கி கொண்டே வருகிறது. நான் ஒரு பங்கு மட்டும் வாங்க வில்லை. நிறைய பங்குகள் வாங்கியிருக்கிறேன். என்னால் எப்படி இந்த பங்கு மட்டும் கீழே இறங்குகிறது என்பதை கண்காணிக்க முடியும். அல்லது பங்கு வாங்கிய பிறகு ஏதோ ஒரு வேளையாக வெளியே செல்ல நேரிடலாம். அப்பொழுதுதான் இந்த SL உபயோகமாக இருக்கும். நான் பங்கு வாங்கிய உடனே இரண்டு Order போட்டேன் அல்லது போடுவேன் என்று சொன்னேன் அல்லவா?. ஒன்று Normal Order (Rs103/-) & மற்றது Stop Loss Order (Rs96.5 & Trigger Price 97/-). இப்பொழுது நான் வாங்கிய பங்கு கீழே சென்று கொண்டு இருக்கிறது. எப்பொழுது Rs97/- அல்லது Rs96.5/- க்கு இடையில் பரிவர்த்தனை நடக்கிறதோ, அப்பொழுது Automatic ஆக என் 1000- ம் ஷேரும் விற்று விடும். அப்பொழுது எனக்கு நஷ்டம் Rs3000/- த்தில் இருந்து Rs3500/- க்குள் இருக்கும். SL order - Trigger ஆகி விட்டால், நான் என் Normal Order (Rs103/-) ஐ உடனே Cancel செய்து விட வேண்டும். இல்லையேல், அது double Order ஆகி விடும். சரி.. இப்பொழுது லாபத்தில் செல்லும் பங்கை பார்ப்போம். இங்கு ஒரு Order மட்டும் போட்டால் போதுமானது. ஆனால், அது Normal Order இல்லை. SL Order. நான் ரூ100/- க்கு பங்கு வாங்கினேன். நான் வாங்கியவுடன் அந்த பங்கு ரூ105/- போய் விட்டது. இன்னும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் சொல்கிறது. சில சமயம் ஏறிய பங்கு Volatile market - ல் கீழே வரவும் வாய்ப்பு உள்ளது. எனக்கு ரூ105/- க்கு கொடுக்க மனம் இல்லை. ரூ120- ம் போகலாம். ஆனால், எனக்கு லாபத்தை விடவும் மனசில்லை. சரி.. எனக்கு ரூ3000/- ம் லாபம் வந்தாலே போதுமானது என்று என் மனதில் தீர்மானித்து கொள்கிறேன். நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.. தற்பொழுது அந்த பங்கின் விலை ரூ105/- நான் உடனே விற்றால் எனக்கு ரூ5000/- கிடைக்கும். ஆனால், மேலே செல்லும் என நம்பத்தகுந்த தகவல் சொல்கிறது. நான் இங்கு Risk எடுக்கிறேன். அதாவது ரூ2000/- லாபத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். SL Order போடுகிறேன். ரூ103/- க்கு Trigger ஆகும் படி.. நான் நினைத்த படியே அந்த பங்கின் விலை ரூ107/- க்கு உயர்ந்து விட்டது. நான் உடனே என் புரோக்கரிடம் சொல்லி, Trigger Price - ஐ Rs103/- ல் இருந்து ரூ105/- க்கு மாற்றி விடுவேன். மீண்டும் அந்த பங்கு ரூ110/- க்கு போய் விட்டது. உடனே நான் என் Trigger Price - ஐ 108/- க்கு மாற்றி விடுவேன். ஒரு கட்டத்தில், அந்த பங்கு மேலே சென்றாலோ, அல்லது குறைந்தாலோ என் SL Order - ஐ Normal Order ஆக மாற்றி என் லாபத்தை எடுத்து கொள்வேன். இப்படித்தான் லாபத்தில் SL போட வேண்டும். எந்த காரணம் கொண்டும், SL Price - ஐ, Present Price க்கு மிக அருகாமையில் போடாதீர்கள். ஒரு விழுக்காடு அல்லது 2 விழுக்காட்டுக்கு கீழே போடுங்கள். மிக அருகாமையில் இருந்தால், கீழே வந்து உங்கள் பங்கை வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்.. என்ன நண்பர்களே, ஏதாவது புரிகிறதா? ரொம்ப குழப்பி விட்டேனா? Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
10/12/07 பங்குசந்தை முடிவில்
10/12/2007 பரிந்துரைகள்
கடந்த வார இறுதியில் முடிவடைந்த உலக சந்தைகளில் அதிகமானவை கீழ் நோக்கியே முடிவுற்றன. நாளை அமெரிக்காவின் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்கும் என்று நம்பும் வேளையில், அது எத்தனை விகிதத்தை குறைக்க போகிறது என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி. அதையே உலக பங்குசந்தைகள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றன. நமது இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டாலும், அதை நிலைநிறுத்தி கொள்ள முடியாமல் மீண்டும் 20,000 புள்ளிகளுக்கு கீழ் வந்துவிட்டது. இன்றாவது சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுக்கு மேல் தன்னை நிலை நிறுத்தி கொள்ளுமா? இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால், காலை சந்தை தொடக்கத்தில், கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்யும். பிற்பகலில் மீண்டும் Selling Pressure அதிகமாக இருக்கும். மிகவும் கவனம் தேவை. அதனால், அவ்வப்பொழுது Stop Loss போட்டு கொண்டு, லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த வெள்ளிக்கிழமை பரிந்துரைத்த பங்குகளை வாங்கி கொள்ளலாம். முடிந்தால், வங்கி துறை சார்ந்த பங்குகள் குறையும் பொழுது வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவை லாபம் தரலாம். இன்று சந்தை நிலவரம் பார்த்து கீழ் வரும் பங்குகளை வாங்கலாம். Delivery எடுக்க உங்களால் முடியும் என்றால், கண்டிப்பாக கீழ் காணும் பங்குகளை வாங்குங்கள். 1. ICICI BANK 2. MARUTI 3. RCOM (CASH + FUTURE.. SL732) 4. ROLTA (CASH + FUTURE) 5. TRIVENI (Future SL162, Tgt 178) From Market: 9.50am: 1.Delivery எடுத்து ஒரு மாதம் வைத்திருக்க முடியும் என்றால், REL பங்குகளை வாங்குங்கள். அது ரூ300~500 ஏற வாய்ப்பு உள்ளது. 2. DLF (குறைந்த எண்ணிக்கையில் வாங்குங்கள்) 3. Parsvnath 4. TTML 10.25 am 5. syndicate bank, மேலே வருது. வாங்கியவர்கள் ரூ125/- க்கு வெளியே வந்துவிடுங்கள். 6. Centurion Bank மேலே வருது. ரூ58 க்கு மேல் போகும் பொழுது லாபத்தை உறுதி செய்யுங்கள் 7. Dena Bank மேலே வருகிறது. லாபம் உள்ளவர்கள் கொடுத்து விடுங்கள். ***8. மதியம் அதிகமாக selling pressure இருக்கும் என எதிர்பார்க்கிறேன் ***9. பங்குசந்தை அதிக Volatile ஆக இருக்கிறது. SL மிகவும் அவசியம் 11.18am : Buy Airdeccan now - Target 285 (CMP266.55) 12.15pm: Looks like Bank stocks going up.. 12.22pm: Buy IDBI now..CMP171.20 tgt 178 12.35pm: Fertilizer stocks moving up. If any body have,better try to sell if you have profit 1.00pm: TTML coming up..CMP55.95.. & Centurion bank crossed Rs58.35/-.. Book profit 2.50pm: TTML மேலே வருகிறது CMP 58.15.. காலையில் வாங்கியவர்கள் Profit book செய்யுங்கள் 3.00pm: சந்தை முடிய இன்னும் 30 நிமிடமே உள்ளது. அனைவரும் Profit Book செய்து விட்டு வெளியே வந்து விடுங்கள்.. 3.15pm: ROLTA - வில் லாபமோ நஷ்டமோ இருந்து வெளியே வந்துவிடுங்கள்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
9.12.07
கடந்த வார பங்கு சந்தை நிலவரம் (03/12/07 to 07/12/07)
கடந்த வாரத்தில், (அதாவது 30/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவில் இருந்து, 07/12/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவு வரை) எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவாக தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை: முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன். அதிக விலை ஏற்றம் கண்ட பங்குகள்: (Nifty Group): 1. TATAPOWER --- --Rs.1323.75-----Rs.1168.6----- +13.28% 2. UNITECH-----Rs.428.9-----Rs.381.70----- +12.37% 3. REL-----Rs.1937.60-----Rs.1734.05----- +11.74% 4. GAIL.-----Rs.471.90-----Rs.428.45----- +10.14% 5. HPCL-----Rs298.75-----Rs.272.60----- +9.59% Jr.Nifty Group: 1. PUNJABTRACTR-----Rs.253.15-----Rs.202.15----- +25.23% 2. APOLLOTYRES-----Rs50.35-----Rs41.90----- +20.17% 3. TECH MAHINDRA-----Rs1223.70-----Rs.1026.70----- +19.19% 4. POLARISSOFT-----Rs124.50-----Rs109.35----- +11.82% 5. INGERSOLRAND-----Rs.341.90-----Rs.300.35----- +13.83% அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்: Nifty Group: 1. HERO HONDA-----Rs.689.25-----Rs720.95---- (-4.405%) 2. GRASIM INDS-----Rs.3647.65-----Rs.3802.85----- (-4.08%) 3. ACC-----Rs.1064.70-----Rs1090.40----- (-2.36%) 4. HCLTECHNOLOG-----Rs.319.15-----Rs.322.25----- (-0.96%) 5. RIL-----Rs.2841.45-----Rs.2851.65----- (-0.36%) Jr.Nifty Group: 1. GMR INFRA-----Rs.243.8-----Rs.255.10----- (-4.43%) 2. ING VYSYA-----Rs.305.55-----Rs.316.35----- (-3.41%) 3. RAYMONDS-----Rs.409.20-----Rs.420.60----- (-2.71%) 4. CUMMINGSINDIA-----Rs.415.15-----Rs.423.80----- (-2.04%) 5. BIOCON INDIA-----Rs.566.70-----Rs.571.55---- (-0.85%) அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்: Nifty Group: 1. RPL -----22970468 Shares 2. SAIL-----12479103 Shares 3. NTPC-----10129215 Shares4. RCOM-----7285932 Shares 5. BHARTIAIRTEL-----6718886 Shares Jr.Nifty Group: 1. IFCI-----59936227 Shares 2. TATA TELESER-----30941540 Shares3. GMRINFRA-----17857966 Shares 4, ASHOKLEYLAND-----14793200 Shares 5. IDFC----- 12603661 Shares அதிக பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகளில், RPL, SAIL, NTPC, IFCI, TATA TELESER, GMR INFRA ஆகியவை போனவாரமும் ஆதிக்கம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |