14.3.08
14/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்று மின்சார தடையினால், என்னால் பதிவு இடமுடிய வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நேற்றைய பங்குசந்தை எதிர்பார்த்தது போலவே மரண அடி வாங்கியது. இன்றைய பங்குசந்தையும், காலையில் ஓரளவுக்கு Flat ஆக திறந்து வர்த்தகட்தை தொடங்கினாலும், பிற்பகலில் அதிகமான Selling pressure இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கு தெரிந்து இன்னும் ஒரு மாத காலத்திற்க்கு பங்குசந்தை பக்கம் தலைகாட்டாமல் இருப்பதே நலம் என நினைக்கிறேன். அவ்வளவு மோசமாக உள்ளது. எல்லா Technical factor's - ம் பொய்யாக்கி சென்று கொண்டு இருக்கிறது பங்கு சந்தை. யாருக்குமே பங்குசந்தை மேல் ஒரு நம்பிக்கை தன்மை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் ஏறினால், விற்று விட்டு வெளியே வருபவர்கள் அதிகமாகி விட்டனர். காரணம் பயம். நாளை என்ன நடக்குமோ என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. 2008 ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இது வரை சுமார் 506 பில்லியன் டாலர் (20,50,000 கோடி ரூபாய்) நஷ்டமாம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், ONGC, DLF போன்ற பத்து பெரிய நிறுவனங்களின் (Market Capitalisation) இழப்பு மட்டும் 125 பில்லையன் டாலரை தாண்டுகிறது. Reliance Industries - ன் மதிப்பு மட்டும் சுமார் 93,000 கோடி குறைந்து உள்ளது. அதை அடுத்து DLF ன் மதிப்பு 80,000 கோடி இறங்கியுள்ளது. ONGC, NTPC, RCOM போன்ற நிறுவனங்களின் மதிப்பு 50,000 கோடி குறைந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. இன்று பின் வரும் பங்குகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய லாபத்தில், லாபத்தை உறுதி செய்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன். 1. ONGC 2. JP Associate 3. RNRL 4. Bata 5. Rel. Capital Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
12.3.08
12/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே கீழ் நோக்கி திறந்து, மேலே சென்றது. நேற்று பரிந்துரைத்த பங்குகள் எல்லாம் (Sail - ஐ தவிர) நன்றாக மேலே சென்றன. அவ்வப்பொழுது லாபத்தை உறுதி படுத்தியிருந்தால், நிச்சயம் நல்ல லாபம் கிடைத்திருக்கும். நேற்றைய அமெரிக்க பங்குசந்தைகளும் சரி, ஐரோப்ப சந்தைகளும் மிகவும் நன்றாக மேல் நோக்கி சென்று உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் கிட்டத்தட்ட 3 விழுக்காடு வரை மேலே உயர்ந்து காணப்படுகின்றன. நிச்சயம் அது நம் பங்குசந்தையிலும் எதிரொலிக்கும். இன்று நம் பங்குசந்தையில் சென்செக்ஸ் குறைந்தது 400 புள்ளிகளுக்கு மேல் தன் வர்த்தகத்தை துவங்கும் என எதிர்பார்க்கிறேன். பிற்பகலில் கொஞ்சம் விற்க்கும் படலம் அதிகமாக காணப்படலாம். என்னை பொறுத்தவரை, சந்தை மேலே வரும் பொழுது, உங்களிடம் லாபத்தில் உள்ள பங்குகளை விற்று விடுங்கள். காரணம், இன்னும் பங்குசந்தை ஒரு நிலைத்தன்மையை பெறவில்லை. மேலும், அணுசக்தி உடன்பாடு தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு எடுக்க போகிறது. காங்கிரஸ் அணுசக்தி உடன்பாட்டை அமுல்படுத்தினால், மத்தியில் இடது சாரி கட்சிகள் அவர்களுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்ளும். மத்தியில் ஆட்சி கவிழும் சாத்தியம் உள்ளது. அந்த நிலை ஏற்படுமென்றால், கண்டிப்பாக பங்குசந்தை கீழே விழுந்துவிடும். இன்று Tatasteel, ONGC, GMRINFRA, ICICI, IFCI, RNRL, Sail, Tata Chemical போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
11.3.08
11/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே சில தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலைகளால், என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகளை பதிய இயலவில்லை. பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருந்தாலும், அவ்வப்பொழுது பதிவுகள் தர இயலுகிறேன். கடந்த சில நாட்களாக பங்குசந்தை ஒன்றும் பெரியதாக மேலே செல்லவில்லை. மாறாக கீழே தான் சென்று உள்ளது. நேற்றைய பங்குசந்தை காலையில் கீழ்முகமாக திறந்து, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. ஆனால், சந்தை முடிவில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரை மீண்டு வந்தது. தேசிய பங்கு சந்தையோ 29 புள்ளிகள் மேல் நோக்கி முடிவுற்றது. FII - பங்குகளை வாங்க ஆரம்பித்ததே அதற்க்கு காரணம். தற்சமயம் அவர்கள் Metals, Banks, Power ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல். அதனால், அந்த துறையை சார்ந்த பங்குகள் கொஞ்சம் உயர வாய்ப்பு உள்ளது. என்ன இருந்தாலும், பங்குசந்தை உயர்ந்தாலும், பங்குசந்தை இன்னும் ஒரு நம்பகத்தக்க ஒரு நிலையை அடையாததால், லாபத்தை அடிக்கடி அனைவரும் உறுதி செய்து கொள்கிறார்கள். அதே சமயம் உலக பங்குசந்தைகளும் கீழ் முகமாக சென்று கொண்டு இருக்கின்றன. அதை சார்ந்தும் நமது பங்குசந்தை செல்கிறது. இன்று கீழ் கண்ட பங்குகளில் முதலீடு செய்யலாம். ONGC , Gail Tata Steel, Sail JPAssociate REL, Relaince Ind TataTea நஷ்டம் அடையாமல் இருக்க, அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அதிக ஆசை வேண்டாம். தற்பொழுதைய பங்குசந்தையின் நிலை அப்படியுள்ளது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |