29.2.08
29/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே. நேற்றைய பங்குசந்தை கீழ்முகமாக 150 புள்ளிகள் செல்லும் என்று பார்த்தால், ஓரளவுக்கு Flat ஆக முடிவு பெற்றது. காலையில் 11 மணியளவில் 150 புள்ளிகள் வரை கீழே சென்ற சென்செக்ஸ் பிறகு மேலே வர ஆரம்பித்தது. மதியம் போல், fertiliers, metals, oil துறையை சேர்ந்த பங்குகள் எல்லாம் மேலே வர ஆரம்பித்தன. மேலும், நேற்று F & O Roll over செய்ததினாலும், பிற்பகலில் பங்குகள் சற்று விலை கூடின என்பதை மறுக்க இயலாது. இனிமேல், இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதி அறிக்கையை பொறுத்தே இருக்கின்றன. அதில் முன்பே சொன்னது போல fertiliser stocks, infrastructre stocks, power stocks மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால், ஓரளவுக்கு அதில் மட்டும் இன்று பரிவர்த்தனை செய்யுங்கள். அடுத்த வாரம் எப்படியிருக்கும் என்று இன்று மாலை தான் தெரியும். இன்று காலையில் தொடங்கிய ஆசிய சந்தைகளில், ஷங்காய் தவிர மற்ற அனைத்து சந்தைகளும் கீழ் முகமாக இருக்கின்றன. நேற்றைய அமெரிக்க சந்தைகளும், ஐரோப்ப சந்தைகளும் கீழ் முகமாக இருக்கின்றன. இவைகள் நம் பங்கு சந்தையை இன்று அவ்வளவாக பாதிக்காது என்றே நினைக்கிறேன். காரணம், நம் நிதிநிலை அறிக்கை அவற்றைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. நேற்று நான் சொன்னதையே தான் இன்றும் சொல்கிறேன்... Fertilisers stock, Metal Stock, Infrastructure stock & power Stocks க்கிள் முதலீடு செய்யலாம். எதில் முதலீடு செய்தாலும், பங்கு சந்தை மிகவும் ஏற்ற தாழ்வாக இருக்கும். அதனால், கீழ் வரும் பொழுது வாங்குங்கள். மேலே போகும் பொழுது குறைந்த லாபமாக இருந்தாலும் விற்று விடுங்கள். பிறகு அந்த பங்கு மீண்டும் கீழே வரும் பொழுது வாங்குங்கள்.. இதே போல 5 தடவை செய்தாலே உங்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். வாழ்த்துக்கள் Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
28.2.08
28/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே, நேற்றைய பங்குசந்தை எதிர் பார்த்தது போல், பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் Flat ஆக முடிவுற்றது. காலையில் ஆசிய சந்தைகள் நன்றாக இருப்பது கண்டு, நமது பங்குசந்தையும் மிகவும் நன்றாக மேல் நோக்கி இருந்தது. பிற்பகலில் ஐரோப்ப சந்தைகள் கீழ்முகமாக திறந்தது அறிந்தும், வரும் பட்ஜெட் எப்படியிருக்குமோ என்ற பயத்திலும், அனைவரும் லாபத்தை உறுதி செய்து கொண்டதனால், பங்கு சந்தை திடு திடு வென்று கீழ் இறங்கி நேற்றைய முடிவை விட சற்று கீழ் இறங்கி முடிவுற்றது. இன்று F & O Closing day என்பதாலும், வரும் நிதிநிலை அறிக்கை எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருப்பதனாலும், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் அத்தனை சிறப்பாக இல்லாததாலும், நமது பங்கு சந்தையும் நிச்சயம் கீழ் இறங்கும். இன்று கிட்டத்தட்ட 100 ~ 250 புள்ளிகள் கீழ் இறங்க வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன். குறுகிய கால முதலீடாக Fertiliser stocks, Infrastructure stocks வாங்கலாம். காரணம் வரும் நிதிநிலை அறிக்கையில் விவசாயம், நெடுஞ்சாலை துறை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு அவற்றை விற்று விடுவது நல்லது. அதன் பிறகு பங்குசந்தை ஒரு வீழ்ச்சியை காணலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது. யாராவது Future - ல் long position - ல் இருந்தால், வெளியே வந்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன். புதியதாக எந்த ஒரு position - ம் எடுக்க வேண்டாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
27.2.08
27/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய உலக பங்குசந்தைகள் உயர்ந்து சென்றாலும், நமது இந்திய பங்குசந்தை நேற்று லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து முற்பகல் மிகவும் கவனமாக அதிக மாற்றம் இல்லாமல் வர்த்தகம் செய்து கொண்டு இருந்தது. லாலு வின் பட்ஜெட்டில் சரக்கு போக்குவரத்துக்கான செலவை குறைத்தது பங்கு சந்தைக்கு ஊக்கம் அளித்தது. logistics, Metals, infra போன்ற பங்குகள் ஊக்கம் கண்டன. புதியதாக பங்குகளை வாங்கியவர்கள் அதிகம் பேர்.நாளை மறுதினம் ப.சிதம்பரம் அவர்களால் தாக்கல் செய்யும் பொது வரவு செலவு கணக்கை ஆவலுடன் எதிர்பார்த்து தற்பொழுதைய சந்தை உள்ளது. அதுவும் லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் போல, மிக நல்ல பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது (அது அரசியல் நோக்கமாக இருக்கலாம், ஆனால், அதைப்பற்றி நாம் இங்கு பேச கூடாது). அதில், விவசாயம், மருத்துவம், பொதுப்பணித்துரை போன்ற துறைகள் நன்கு ஆதாயம் பெறும் என எதிர்பார்க்க படுகிறது. தற்சமயம் உலக பங்குசந்தைகள் அனைத்தும் மேல் நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றன. அதுவும் ஒரு ஊக்கம் ஊட்டும் ஒரு செய்திதான். இருந்தாலும், நாளை F&O closing நாள். அதற்க்கு அடுத்த நாள் மத்திய பட்ஜெட். அதனால், நம் பங்குசந்தையில் மிக பெரிய மாற்றம் வராது என்றே தோன்றுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை மதியம் வரை பங்குசந்தை மேல் நோக்கிய அதே சமயம் flat ஆக இருக்கும் என்பது என் கணிப்பு. பங்குசந்தையில் ஈடுபடுபவர்கள் உடனக்கு உடன் லாபம் பார்த்து விட்டு வெளியே வந்து விடுவது நல்லது. இன்று JP Associate (tgt 290), GMR infra (tgt 295), Nagartuna Fert (tgt 59), RPL 170+, RNRL 145+, Bindalagro (tgt 50+) போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
26.2.08
26/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்குசந்தை வரும் நிதி நிலை அறிக்கையை பல எதிர்பார்ப்புகளை ஒட்டி, மேலே சென்று இருக்கிறது. நேற்று Metals, Banks, Shipping, Oil என்று எல்லாமே நன்றாக மேலே சென்றன. நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகளும் சரி, இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளும் சரி, மிகவும் நன்றாக இருக்கின்றன. நமது பங்குசந்தையும் அதை சார்ந்து சென்றாலும், இன்றைய ரயில்வே நிதிநிலை அறிக்கையை வைத்து, சில துறைகள் நன்கு விலை போகும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று shipping (or) Logistics துறையை சார்ந்த பங்குகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும் GMR infra, IFCI, Tatateel, Sterlite Ind, Nagartna fert, Bindalagro, Essar oil போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எது எப்படியாகிலும், பங்கு சந்தை இன்னும் ஒரு நல்ல அடித்தளத்தை எட்டவில்லை. அதனால், நண்பர்கள் அடிக்கடி லாபத்தினை உறுதி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
25.2.08
25/02/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பங்கு சந்தை மற்றும் இந்த வார பங்குசந்தை எப்படியிருக்கும். என்னை பொருத்த வரை அவ்வளவு சுகமானதாக இருக்காது. வருகிறது 2008 - க்காக நிதி நிலை அறிக்கை. அது எப்படியிருக்கும் என்பதை பொருத்தே வரும் வாரம் பங்குசந்தையை நிர்ணயிக்க இயலும். அதே சமயம் நம் பங்குசந்தை உலக பங்குசந்தைகளை சார்ந்து செல்கிறது என்பதையும் மறுக்க இயலாது. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளில் சீன பங்குசந்தையை தவிர மற்ற அணைத்தும் நன்றாக இருக்கின்றன. கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்குசந்தைகள் இறுதியில் மேல் நோக்கியே முடிவுற்றன. அதனால், இன்றைய பங்கு சந்தை காலையில் நிச்சயம் நன்றாக இருக்கும். பிற்பகலில் கொஞ்சம் அதிகமாகவே விற்க்கும் படலம் தொடங்கும். அதனால், சந்தை கீழ் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது.. இந்த வாரத்திலோ அல்லது வரும் வாரங்களிலோ ஒரு சரிவை எதிர் நோக்கி இருக்கிறது நம் பங்குசந்தை. அதனால், நண்பர்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். ஒரு சிறிய அளவுக்கு முதலீடு செய்து, அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.. சுருங்க சொன்னால், இன்னும் ஒரு வாரத்திற்க்கு பங்குசந்தையில் நுழைவதை விட வேற வேலை இருந்தால் அதில் கவனம் செலுத்தலாம்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |