1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    30.1.08
    30/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்று உலக சந்தைகள் எல்லாம் நன்றாக இருந்தது. அதனால், நம் பங்குசந்தையும் குறைந்தது 500 புள்ளிகளுக்கு மேல் ஏறும் என்று நினைத்திருந்தத் பொழுது, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்ததால், மேலே ஏற வேண்டிய பங்குசந்தை ஏறாமல் போய் விட்டது. Realty துறையை சேர்ந்த பங்குகள் கொஞ்சம் பாதிக்க படும் என்பது உண்மை.

    நேற்றைய அமெரிக்க பங்குசந்தையும் சிறிது மேலேறி உள்ளது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகள் கீழ் முகமாக தனது வர்த்தகத்தை துவங்கி, சற்று மீள தொடங்கியுள்ளன.

    நம் பங்குசந்தையில், நாளை F & O closing day. அதனால், நம் பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் மேடு பள்ளமாகத்தான் இருக்கும். அதனால், தின வர்த்தகர்கள் கவனத்துடன், அடிக்கடி லாபத்தை நிர்ணயித்து கொள்ளுங்கள்.

    சுருங்க சொல்லின், லாபத்தின் அளவை குறைத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்க்கு 100 ரூபாய் பங்கு 102 க்கு போனாலே விற்று விடுங்கள். கமிசன் போக உங்களுக்கு 1 பங்குக்கு 1.50 கிடைக்கும். அதே பங்கு மீண்டும் 100 ரூபாய் வரும் பொழுது வாங்கி விடுங்கள். 102 க்கு போகும் பொழுது விற்று விடுங்கள். இது போல் செய்வதால், உங்களுக்கு நஷ்டம் இல்லை.

    ஒருவேளை, இரண்டாம் தடவை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு, 98- க்கு வந்து விட்டால், உங்களுக்கு அதிகமான நஷ்டம் இருக்காது. ஏனென்றால், நீங்கள் முன்பே அதே பங்கில் லாபம் பார்த்து இருக்கிறீர்கள். அது உங்களை பெரு நஷ்டத்தில் இருந்து மீட்கும். இது போல் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய பழகி கொள்ளுங்கள்.

    ரூ50 - விலை பங்குகளை நான் வாங்கினால், ரூ50.75 வந்தாலே கொடுத்து விடுவேன். 100 என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்குவதால் எனக்கு 70 ரூபாய் லாபம் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தை பாருங்கள். அதிகமாக ஆசைப்பட்டால், பிறகு வருத்தபட வேண்டி வரும்.

    இன்று வங்கி துறை பங்குகள் கொஞ்சம் மீளலாம். Realty பங்குகளை தற்பொழுது வாங்க வேண்டாம். சந்தையில் இருந்து மற்ற தகவல்களை தருகிறேன்.

    From Market:
    10 am: Nifty and Sensex both in RED.. believe it will recover. can buy Sail @ CMP 216.50
    10.30am: Anybody bought SAIL? try to book profit now.. CMP222/-.
    10.35am: Tatasteel flaring up... CMP735..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    29.1.08
    29/01/2008 பங்கு சந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை காலையில் தொடங்கிய பொழுது, சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேலாக இருந்தது. மெதுவாக மேலே செல்ல ஆரம்பித்தது. 30 நிமிடங்களுக்கு பின் சந்தை மெதுவாக கீழே வர ஆரம்பித்தது. அனைவரும் இன்று வெளி வந்த ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய அறிவுப்புக்காக காத்து இருந்தனர். நேற்று, பங்குசந்தை விழாமல் இருக்க காரணமாய் இருந்த வங்கி துறை சார்ந்த பங்குகள், இன்று 10.30 மணிக்கு மேல் மெதுவாக இறங்க ஆரம்பித்தன. 12 மணிக்கு, வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் கிடையாது என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளி வந்தது. வந்தது தான் தாமதம், தொப்பென்று 150 புள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ந்தது. பிறகு இரு நிமிடங்களில் மீண்டும் மேலே வர முயற்ச்சித்தது. 12 மணிக்கு மேல், பங்குசந்தையில் அதிகமான மேடு பள்ளங்கள் காணப்பட்டன.

    RBI- யின் அறிவிப்பை தொடர்ந்து Realty பங்குகள் எல்லாம் மிகவும் குறைய தொடங்கின.

    இன்று நான் பரிந்துரைத்த பங்குகளில், காலை ONGC நன்றாக மேலே சென்றது. பிறகு மீண்டும் 50 ரூபாய் வரை சரிந்தது. பிறகு மீண்டும் மேலே வந்தது. IFCI, POWERGRID, STERLITE IND போன்ற பங்குகள் அவ்வளவாக மேலே செல்ல வில்லை.

    இன்று அதிகமாக விலை ஏறிய பங்குகள் என்று சொன்னால்,

    Nifty Group:
    Suzlon, Sunpharminds, Cairn India, Idea, HCL Tech

    Jr.Nifty Group:
    Cummins India, Aurobnodopharm, Bharat Forging, Tech Mahindra

    அதிகமாக விலை இறங்கிய பங்குகள் எது என்று பார்த்தால்,
    Nifty Group: Unitech, DRREADY, ICICIBank, State Bank, Bajaj Auto
    Jr.Nifty Group: Bank of India, IOB, Canara Bank, Bank of Baroda

    பங்குசந்தை இன்னும் ஒரு நிலைப்பாட்டை அடைய வில்லை என்பதுதான் உண்மை. வரும் நாட்களில் பங்குசந்தை இன்னும் கீழே வர வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் சொல்கின்றன.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    29/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை 850 புள்ளிகள் சரிவில் இருந்து கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை மேலேறி, அதிக சரிவில்லாமல் இருந்ததே ஓரளவுக்கு நம்பிக்கை தரும் விடயம் தான். இருந்தாலும், இன்னும் பங்குசந்தை ஒரு நிரந்தரமான ஒரு நிலையை எட்ட வில்லை என்றே சொல்லலாம்.

    நேற்று அமெரிக்க பங்கு சந்தை பெடரல் வங்கி மீண்டும் தனது வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஓரளவுக்கு மீண்டு வந்து உள்ளது. இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் கிட்டத்தட்ட 2 விழுக்காடு வரை உயர்ந்து உள்ளன.

    இன்று நமது ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதை வைத்தே நமது சந்தையின் செயல்பாடுகள் இருக்கும் என்று கருதுகிறேன். இருந்தாலும், ஓரளவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இருக்கும் என நம்ப படுகிறது.

    மேலும், இன்னும் இரு நாட்களில் இந்த மாதத்தின் F & O முடிவு நாள். அதனால், பங்குசந்தையில் கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்.

    இன்று powergrid, IFCI, ICICI, Sterlite, Unitech, DLF, ONGC போன்ற பங்குகள் வாங்கலாம்.

    இருந்தாலும், பங்குசந்தையில் இருந்து நேரடி தகவல் தரமுயல்கிறேன்.

    நமது கடந்த இருவார சந்தையின் செயல்பாடுகளில் இருந்து அனைவரும் ஒரு அனுபவத்தை கற்று கொண்டு இருப்போம்.

    அதாவது அடிக்கடி, அதிக லாபத்தை எதிர்பார்க்காமல், லாபத்தை நிர்ணயம் செய்து கொள்வது. இரண்டாவது கண்டிப்பாக Stop Loss - ஐ பின்பற்றுவது.
    லாபமோ, நஷ்டமோ, தினமும் பங்குசந்தையில் இருந்து வெளி வர வேண்டும் என்பது.

    இதை கருத்தில் கொண்டு, இன்று பங்கு சந்தையில் நுழையுங்கள்.

    அதிக லாபம் வேண்டாம். குறைந்த லாபம் இருந்தாலே போதும் என்ற மன திருப்தியோடு இன்றைய தின வர்த்தகத்தில் நுழையுங்கள். வெற்றி உங்களுக்கே..

    From Market:
    10.00am: Market open at green.. Sensex up 200 points.
    please wait until market stable..

    10.15am: Bank Index going down..
    10.30am: Try to sell bank stocks and buy once it's goes down. now bankindex -70 points
    10.40am: Powergrid CmP117.30.. try to buy this level and come out @ 118.50..
    10.40am: Essaroil CMP 234.60. Can buy at this level and try to come out @ 238
    10.45am: TRIVENI - turn to negative side. CMP132.50. Can buy at @125 ~ 130 level and try to sell @ 137
    11.10am: market still not stable. everybody wating for RBI news. hope it will out by 12.30am. wait until 12.30
    11.40am: Sensex turns to NEGATIVE. Nifty also towards negative side..

    11.45am: Sensex turn to Positive side.. market quite volatile.. be cautious..
    12.00noon: RBI KEEPS POLICY RATES UNCHAGED

    Market may go down.. please try to come out..

    12.07pm: Market again bounce back.. market under high volatile..sensex -42 points down. recoverd from -180 points with in 2 min.

    12.10am: anybody bought Essar Oil? its moving up now..CMP236.55. If you have profit, try to sell and buy during down trend

    12.13pm: those who sold bank stocks today morning, try to buy back now. banks stocks may bounce back

    12.40pm: Essaroil - CMP240+. Try to sell and book profit first. Can buy ISPATIND @ CMP46.20 and try to sell at 47

    2.30pm: Market is under up trend. So, try to sell the stocks with small profit or loss and don't take any delivery. at this time, it's not advise to take any delivery

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    28.1.08
    28/01/2008 பங்கு சந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை நான் எதிர்பார்த்தது போல் இல்லாமல், கீழ் நோக்கி முடிவுற்றாலும், அதிகமாக அனைவரையும் சோதிக்க வில்லை என்று சொல்லலாம். ஆனால், காலையில் கிட்டத்தட்ட சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்ட பொழுது, எல்லோரும் மிகவும் வேதனைக்கு உள்ளானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஆனால், 12 மணிக்கு மேல், மெதுவாக பங்கு சந்தை மேலே வந்தது. காரணம் வங்கி பங்குகள், ஆட்டோ மொபைல் பங்குகள் எல்லாம் மேலே வர ஆரம்பித்தது தான். Midcap - ல் உள்ள வங்கி துறை சார்ந்த பங்குகள் சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறி மேலே செல்ல ஆரம்பித்தன. ஆட்டோ மொபைல் பங்குகளும் மேலே வர முயன்றதின் விளைவே, இன்றைய பங்கு சந்தை மிக பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்டது எனலாம்.
    பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 208.88 புள்ளிகள் கீழ் இறங்கி முடிவுற்றது. நிப்டி 109.25 புள்ளிகள் கீழ் இறங்கி முடிவுற்றது.

    இன்று Bajaj Auto, Gail, MarutiUdyog,REL, HDFC போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. Jr.Nifty யில் Asian paints, Sindicatbank, canarabank, Vijyabank போன்றவை நல்ல ஏற்றம் கண்டன.

    நாளை பங்கு சந்தை நன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்கிறேன். வங்கி துறை சார்ந்த பங்குகள் நன்றாக இருக்கலாம்.

    நாளை IFCI, POWERGRID, STERLITE + Bank Stocks எல்லாம் நன்றாக விலை போக வாய்ப்பு உள்ளது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    28/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    பங்குசந்தையில் முதலீடு செய்தால், விரைவில் நல்ல லாபம் கிட்டும் என்று நினைத்து சில மாதங்களுக்கு முன் பங்குசந்தைக்குள் நுழைந்தவர்கள் ஆசை மோசம் போனது என்னவொ உண்மை.

    முதலீடு செய்தவர்கள் எல்லாம் மிகவும் நொந்து போகும் அளவுக்கு பங்கு சந்தை கடந்த இரண்டு வாரத்தில் திடீர் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதில் இருந்து இன்னும் பங்கு சந்தை மீள்வதற்க்கான அறிகுறிகளே தெரியவில்லை. ஜான் ஏறினால், முழம் வழுக்குகிறது என்ற கதை தான்.

    தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த பங்குசந்தை கடந்த வாரம் புதன் கிழமை 800 புள்ளிகள் வரை மேலே வந்தது. ஆனால், அடுத்த நாளே 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. வெள்ளிக்கிழமை 1000 புள்ளிகளுக்கும் மேலாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமையை தொடர்ந்து, திங்கள் கிழமையும் சந்தை மேலே வரும் என நினைத்வர்கள் கவலை கொள்ளும் படியே இன்றைய பங்கு சந்தை இருக்கும்.

    கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் கிட்டத்தட்ட 1.50 விழுக்காடு வீழ்ச்சியடைந்து இருந்தது. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகள் எல்லாமே கிட்டத்தட்ட 1.5 முதல் 2 விழுக்காடு வரை கீழ் இறங்கியுள்ளது. நிச்சயம் இது நம் பங்குசந்தையும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், தின வர்த்தகர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.

    நீண்ட கால முதலீட்டாளர்கள், பங்கு சந்தையில் முதலீடு செய்ய மிகவும் சரியான தருணம் இதுதான். பல நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையும் நம்பிக்கை தரும் வகையிலேயே இருக்கின்றன. நமது ரிசர்வ் வங்கியும், பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து, வட்டி விகிதத்தினை குறைக்கும் பட்சத்தில், நம் பங்கு சந்தை ஓரளவுக்கு மீளலாம்.

    நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவர்கள் என் முந்திய பதிவில் குறிப்பிட்டு உள்ள விலை குறைந்த பங்குகளை வாங்கி வையுங்கள். மேலும், TataSteel, ONGC, RCOM, NTPC, NDTV, UNITECH, SIEMENS, REL போன்றவையும் வாங்கி வைக்க வேண்டிய பங்குகளே.

    சுருங்க சொன்னால், இன்று தின வர்த்தகர்கள் தயவு செய்து வெளியே நின்று வேடிக்கை பாருங்கள்.

    From Market:
    Market Opend lower -- Sensex down over 700 points.. please wait. it may go down further. late afternoon may be some recovering expected

    For long time inverstors: It's the best time to enter and buy stocks

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    27.1.08
    கடந்த வார பங்கு சந்தை நிலவரங்கள் (21/01/2008 முதல் 25/01/2008 வரை)
    வணக்கம் நண்பர்களே.

    சில தவிர்க்க முடியாத காரணங்களால் (குடும்பத்தில் ஒரு துக்க நகழ்ச்சி, இணைய தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால்) என்னால் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பதிவுகளை சரியாக தர இயலவில்லை. அதற்க்காக வருந்துகிறேன். நிறைய நண்பர்கள் தொடர் ஆதரவு அளித்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. முடிந்த வரை தொடர்ந்து பதிவுகள் தர முயல்கிறேன்.

    இப்பொழுதே சொல்லி விடுகிறேன், வரும் வியாழன் மற்றும் வெள்ளி அன்று நான் வெளியூர் செல்ல இருப்பதால், என்னால் பதிவுகள் இட இயலாது. சனிக்கிழமை முதல் மீண்டும் பதிவுகள் வழக்கம் போல் வரும்.

    சரி.. இனி கடந்த வார பங்கு சந்தையில் பங்குகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம்.

    நேற்று முன் தினம் முடிவடைந்த கடந்த வார பங்குசந்தை நிலவரங்கள் (21/01/08 முதல் 25/01/08 வரை)

    ----- கடந்த வாரத்தில், பங்கு சந்தையில் எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை எப்பொழுதும் போல் ஒரு கண்ணோட்டம் இடுவோம்.

    நான் பொதுவாக தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை

    ------ முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன்.

    அதிக விலை ஏற்றம் கண்ட பங்குகள்:

    Nifty Group:

    1. SATYAM COMPUTER--- --Rs.407.50-----Rs.374.00----- +8.96%
    2. BHARTI AIRTEL-----Rs.915.10-----Rs.874.20----- +4.68%
    3. PNB-----Rs.667.85-----Rs.641.85----- +4.05%
    4. INFOSYSTECH-----Rs.1519.85-----Rs.1468.40----- +3.50%
    5. HDFC BANK-----Rs.1608.45-----Rs.1571.00----- +2.38%

    Jr.Nifty Group:

    1. CONCOR-----Rs.1617.80-----Rs.1530.00----- +5.74%
    2. PATNICOMPT-----Rs 272.15-----Rs 260.15----- +4.61%
    3. BHARATELECTR-----Rs 1870.30-----Rs.1816.35----- +2.97%
    4. ASIAN PAINTS -----Rs 1046.95-----Rs 1035.20----- +1.14%
    5. UNIONBANK-----Rs.203.00-----Rs.202.05----- +0.47%

    அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்:
    Nifty Group:

    1. RPL-----Rs.173.05-----Rs.208.60---- (-17.04%)
    2. ONGC-----Rs.1016.20-----Rs.1211.95----- (-16.15%)
    3. VSNL-----Rs.554.40-----Rs.643.95----- (-13.91%)
    4. TATAPOWERCOM-----Rs.1257.60-----Rs.1457.40----- (-13.71%)
    5. GSKPHARMA-----Rs.876.30-----Rs.1010.35----- (-13.27%)

    Jr.Nifty Group:
    1. TVSMOTOR-----Rs.44.75-----Rs.61.05----- (-26.07%)
    2. TTML-----Rs.40.05-----Rs.51.05----- (-21.07%)
    3. TECH MAHINDRA-----Rs.726.60-----Rs.906.70----- (-19.86%)
    4. BIOCON INDIA-----Rs.417.40-----Rs.517.95----- (-19.41%)
    5. I-FLEX SOLUTION-----Rs.1115.00-----Rs.1381.95---- (-19.32%)

    அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்:
    Nifty Group:
    1. RPL-----16980174 Shares 2. NTPC-----9810788 Shares 3. UNITECH-----8954070 Shares4. SAIL-----6513533 Shares 5. ITC-----5434586 Shares
    Jr.Nifty Group:
    1. IFCI-----33390204 Shares 2. TATA TELESER-----15394471 Shares 3. GMRINFRA-----12189852 Shares 4. ASHOK LEYLAND-----10476339 Shares 5. JAIPRAK ASSO-----7962581

    கடந்த 10 நாட்களில் பங்குசந்தை மிகவும் வீழ்ச்சியடைந்து, சிறிது மீள தொடங்கியுள்ளது. ஆனால், இன்னும் பங்குசந்தை நிலைபாடு கொள்ளவில்லை.

    மீண்டும் சென்செக்ஸ் 15000 புள்ளிகளை தொடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், அனைவரும் மிகவும் கவனத்துடன் தின வர்த்தகத்தில் ஈடுபடவும். உடனுக்குடன் லாபத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

    21000 புள்ளிகளில் இருந்து, பங்கு சந்தை கீழ் நோக்கி வந்த பொழுதும், இந்த மாதத்தில் (கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில்) ICICI வங்கியின் பங்குகள் 3.48% விழுக்காடு விலை உயர்ந்து உள்ளது. SBI - யின் பங்குகள் 0.3% விழுக்காடு உயர்ந்து உள்ளது. UTI Bank பங்குகள் 13.06% விலை உயர்ந்து உள்ளன. Bank of India வின் பங்குகள் 7.5% விலை உயர்ந்து உள்ளன. சுருங்க சொல்லின் வங்கி பங்குகள் விலை உயர்ந்து உள்ளன.

    அதே சமயம், கடந்த மாத விலையை ஒப்பிடுகையில் அதிகமாக விலை இறங்கிய பங்குகள் இதோ:

    Nifty stocks:
    1. VSNL - 25.96% விலை இறங்கியுள்ளது.
    2. sterliteinds - 23.75% விலை இறங்கியுள்ளது.
    3. HCL Tech - 22.84% விலை இறங்கியுள்ளது.
    4. RPL - 22.71% விலை இறங்கியுள்ளது.
    5. ACC - 22.21% விலை இறங்கியுள்ளது.

    Jr.Nifty stocks:
    1. TVS motor - 37.63% விலை இறங்கியுள்ளது.
    2. Tech Mahindra - 37.03% விலை இறங்கியுள்ளது.
    3. Aurobindopharm-32.12% விலை இறங்கியுள்ளது.
    4. TTML - 32% விலை இறங்கியுள்ளது
    5. i- FLEX SOL - 28.41% விலை இறங்கியுள்ளது

    பொதுவானவை:
    1. Nagartuna Fert - 47.76% விலை இறங்கியுள்ளது
    2. Wire & Wire - 44.05% விலை இறங்கியுள்ளது.
    3. Ispatind - 43.14% விலை இறங்கியுள்ளது.
    4. OMAXE - 43.03% விலை இறங்கியுள்ளது.
    5. NeyveliLignite - 41.24% விலை இறங்கியுள்ளது.

    மேற் சொன்ன விலை இறங்கிய பங்குகளை தாராளமாக பணம் உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வைக்கலாம். சில வாரங்களில் நிச்சயம் அது 20 விழுக்காடு வரை உயர வாய்ப்பு உள்ளது.